தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஜெயா பீசபதி ! இராணுவ குடும்பங்களை கொண்டாட வேண்டும் !! - ராம்

20241022235146674.jpg(ஜெயா பீசபதி)

ஹாங்காங்கில் வசிக்கும் ஜெயா ஜெய் ஹிந்த் என்ற வலைதள வானொலி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துகிறார்.

20241022235935777.jpg

தெலுங்கு, ஹிந்தி சரளமாக பேசும் ஜெயா பீசபதி வருடந்தோறும் ஹாங்காங்கில் கார்கில் விஜ்ய திவாஸ் என்ற கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடுகிறார்.

அன்றைய தினம் முன்னாள் இராணுவ வீரர்களையோ, அல்லது இராணுவத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களையோ அழைத்து பேச வைத்து கெளரவப்படுத்துகிறார் ஜெயா.

மேஜர் முகுந்த் வரதாரஜனின் சகோதரியை சந்தித்த உடன் ஜெயாவை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.

நம் நாட்டில் அன்றாடம் ஒரு இராணுவ வீரர் தன் இன்னுயிரை நாட்டுக்கு தியாகம் செய்கிறார்கள். மேஜர் உன்னிகிருஷ்ணன், மேஜர் முகுந்த் வரதராஜன் இவர்களின் வீரத்தைப் போலே பலர் நாட்டுக்காக தியாகம் செய்கிறார்கள்.

ஒரு சினிமா வந்து வெற்றியடைந்ததும் தான் நம் மக்களுக்கு இராணுவத்தின் மதிப்பே தெரிகிறது. சினிமா எடுத்தது தவறு என்று சொல்ல வரவில்லை. அட்லீஸ்ட் சினிமா எடுத்த பிறகாவது தெரிகிறதே என்பது தான் என்னுடைய எண்ணம்.

2012 லிருந்து ஜெய் ஹிந்த என்ற இராணுவ வீரர்களுக்கான வானொலி நிகச்சியை ஹைதராபாத்திலிருந்து வானொலி மூலமாக செய்து கொண்டு வருகிறேன்.

ஹாங்காங்கில் 2015 முதல் கார்கில் விஜய் திவாஸ் என்ற கார்கில் வெற்றி விழாவை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறேன்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் இழப்பு பேரிழப்பு. சென்னைக்கு என்ற போது அவர்கள் பெற்றோரை சந்தித்தேன்.

ஒரு இராணுவ வீரனின் இழப்பு, வீரம், திறமை, தியாகம் என்றெல்லாம் நாம் சொல்லலாம். ஆனால் அவரது குடும்பத்தினரின் இழப்பு ?? ஈடு செய்ய முடியாத இழப்பு.

20241022235221529.jpg

(கார்கில் வெற்றி நாள் அன்று நிகழ்ச்சி. கீழே மேஜர் முகுந்த் அவர்களின் பெற்றோருடன்)

அதை நினைத்தால் ஒவ்வொரு சிவிலியனும் இராணுவ வீரரை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினரையும் கொண்டாட வேண்டும்.

தன் இளம் பிள்ளைகளை நாட்டுக்காக பறி கொடுத்து விட்டு அந்த பெற்றோர்கள், தம்பி தங்கைகள் என்ன பாடு படுவார்கள்.

இதையெல்லாம் வெகுஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் சிலர் இராணுவத்தில் இருந்தால், ரேஷன் கிடைக்கும், மது கிடைக்கும் இலவசமாக வாழ்க்கை சுகமாக இருக்கும் என்பவர்களை கண்டால் எனக்கு கோபம் தலைக்கு ஏறும்.

போய் சேவை பண்ண வேண்டியது தானே. இராணுவத்தில்.

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறை இந்தியா செல்லும் போதும் இராணுவ வீரர்களின் குடும்பங்களை தவறாது சந்தித்து விடுவேன்.

20241022235610314.jpg

இராணுவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஹாங்காங் வந்தால் என்னால் முடிந்த மட்டும் சந்தித்து அவர்களை வெளியில் அழைத்து செல்ல முயற்சிப்பேன்.

வருடந்தோறும் கார்கில் விஜய் திவாஸ் அன்று அந்த வீரர்களின் தியாகத்தையும், வெற்றியையும் கொண்டாடுவோம்.

சினிமா வந்ததால் வந்த இந்த திடீர் இராணுவ பாசம் சில நாட்கள் மட்டுமே நீடிக்காமல் மக்கள் தொடர்ந்து அந்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எப்போதும் ஆரவாகவும், அணுசரணையாகவும் இருகக் வேண்டியது அவசியம்.

ஜெய் ஹிந்த்.