ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் .தற்போது கால நிலை மாறுபாட்டால் கார்த்திகை -மார்கழி மாதத்தில் அடை மழை பெய்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு, வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் வங்க கடலில் புயல் சின்னம் என்று அறிவிப்பு வரும்,புயல் சென்னைக்கு தென்கிழக்காக இவ்வளவு கிமீ தூரத்தில் இருக்கிறது என்று மணிக்கொரு தடவை புயல் கரையை கடக்கும் முன்பு வரை அறிவிப்பார்கள். அரசும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்.
தற்போது ஷோஷியல் மீடியா வந்ததும், அதிக சத்தத்துடன் பேசி நிறைய வானிலை ஆர்வலர்கள் தங்கள் இஷ்டம் போல் வானிலை அறிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெக்ஸ்பின்னர் ஷேன் வார்னே போடும் லெக்ஸ்பின்னர் பந்து போல் குறுக்கு மடக்காக செல்வது போல் கமெண்டிரி கொடுத்து மக்களை குழுப்ப தொடங்கிவிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை அறிக்கைகள் சரி வர இல்லை என தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் வந்த வண்ணம் உள்ளது.
சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் ஹைதர் அலி காலத்து வானிலை கணிப்பு கருவிகள் தான் துல்லியமான வானிலையை கணிக்க முடியவில்லை என்ற குற்றசாட்டும் தமிழக அரசியல் பிரமுகர்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
வானிலை கணிப்புகள் தொழில்நுட்ப கருவிகளை வைத்து மட்டும் கணிப்பது இல்லை , வானிலை என்பது அறிவியல் அதனால் தற்போது உலகெங்கும் நிகழும் புயல்களை கூட சரிவர கணிப்பது கடினம் அதற்கு உதாரணம் அட்லாண்டிக் கடலில் உருவான புயல் 112 கிமீ வீசும் என்றனர், ஆனால் வீசியது இதற்கு மேல் புயல் காற்று வேகமாக வீசியது.காலநிலை மாற்றத்தினால் தான் புயல் மற்றும் காற்றழுத்த நிகழ்வு கணிப்புகளை தற்போது துல்லியமாக கணிப்பது கடினமாக உள்ளது.அதனால் உறுதியான வானிலை கணிப்புகள் சொல்லிவிட முடியாத நிலை உள்ளது என்று பாலசந்திரன் , வானிலை இயக்குநர் சொல்லியுள்ளார்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நமது மூதாதையர் வானிலை ஆராய்ச்சியை பஞ்சாங்க சாஸ்திர கணிப்புகளில் அவ்வளவு துல்லியமாக மழை , வெயில் ,இயற்கை பேரழிவு நிகழ்வுகளை குறித்து வைத்துள்ளனர். தற்போது வரை நமது பஞ்சாங்க குறிப்புகள் தமிழ் வருட மாதங்களில் பார்க்கும் போது மழை பற்றிய தெளிவான குறிப்புக்கள் உள்ளது.
ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரங்களில் மழை பற்றிய பாடலை எம்பெருமான் உடன் சேர்த்து பாடியது இப்போது ஒலிக்கிறது.
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியம் தோளுடை பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மழை பொழிவிற்காக மார்கழி மாத கர்ப்ப ஓட்ட நாளில் நின்று அந்த கர்ப்ப ஓட்டமேக தன்மையே அடுத்த 10 மாதத்துக்கு பின்மழை கொட்ட போவதை நிர்மானிக்கும் அல்லது அறிகுறியாக காட்டும் என்ற அறிவியலை ஆண்டாள் இந்த பாசுரத்தை பாடியதாக ஐதீகம்.
கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தை போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக என்பதே ஆண்டாள் பாசுரத்தின் பொருள்.
ஆக திருப்பாவை ஆண்டாள் பாசுரம் முலம் உணர்த்துவது முன்னோர்கள் மழை, இயற்கை பேரிடர்களை எந்தவித அறிவியல் நவீன தொழில் நுட்பமின்றி கணித்து வாழ்ந்து வந்துள்ளனர்.
நவீன அறிவியல் என்ற பெயரில் இயற்கையை கணிக்க முடியாமல் திணறி வருகிறோம்.
வருடந்தோறும் மழை நமக்கு பொழிகிறது…அதனை நாம் உரிய வழியில் சேமிக்காமல் மீண்டும் கடலினை நோக்கிஅனுப்பி விடுகிறோம் என்பது தான் நிஜம் .
எது எப்படியோ… மழையை பார்த்து பயப்பட தேவையில்லை..
மழை நல்லது!.
Leave a comment
Upload