தொடர்கள்
பொது
பறவைகள் பலவிதம் !! இந்த வாரம் சாம்பல் நாரை - ப ஒப்பிலி

20241120232636922.jpeg

இந்த சாம்பல் நாரை அனைத்து இந்திய மாநிலங்களிலும் காணப்படும் ஒரு பறவையினம். ஒல்லியான மற்றும் உயரமான உடல் அமைப்பை கொண்ட இந்த பறவையை பற்றிதான் சங்க நூல்களில் 'ஓடு மீன் ஓட உரு மீன் வர காத்திருக்குமாம் கொக்கு' என்று குறிப்பிடப் படுவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பாம்பே இயற்கை வரலாற்று சங்கத்தின் முன்னாள் துணை இயக்குனர் எஸ் பாலச்சந்திரன் கூறுகையில் இந்த பறவை ஒன்றின் காலில் வளையம் ரஷ்யா அருகில் உள்ள கசக்ஹ்ஸ்தானில் கட்டப்பட்டது. அதே பறவை ஒரு வருடம் கழித்து உடுப்பியில் உள்ள சுவர்ண நதிக்கரையில் காணப்பட்டது. அதே போல பஞ்சாபில் வளையம் மாட்டப்பட்ட ஒரு சாம்பல் நாரை கசக்ஹ்ஸ்தானில் கண்டறியப்பட்டது. இந்த பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பறக்க கூடிய திறன் கொண்டவை, என்கிறார் பாலச்சந்திரன்.

இந்தியாவில் இவை சதுப்பு நில பகுதிகள், ஆற்றங்கரை ஓரங்கள், முகத்துவாரங்கள், மற்றும் பாறைகள் நிறைந்த கடற்கரை ஓரமுள்ள தீவுகளிலும் காணலாம். சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பெரும்பாக்கம் நீர்நிலை, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதிகளில் காணலாம், என்கிறார் பாலச்சந்தரன் .

20241120195021373.png