அன்புச் சிறையாய்
நீ இருந்தாய்
உன்னுள்
ஆட்டுக்குட்டிகளாய்
அடைக்கலமானோம்
"ஆண்டவன் உன்னைப் பாதுகாப்பார்"
என அரவணைத்தாய்
இம்மண்ணில்
உதித்தாய் தேவமகனாய்
எங்கும் நிறைந்தாய்
பரமபிதாவாய்
எம் நெஞ்ச இருளை
நீக்கி .
உன் அருள் மொழியால்
ஒளி ஏற்றினாய்
களிமண்ணாய் இருந்த
எம்மை
சிற்பமாய்ச் செதுக்கினாய்.
தேவ தூதனாய் வந்த நீயே !
எங்கள் தேவ தேவனானாய்
கருணை சிந்தும் விழியால்
கனிவுடன்
எங்களைக் காத்தருளினாய்
கர்த்தரே, எந்தன் கனகமணியே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
உந்தன் ஜீவவொளியில் எங்கள்
உள்ளத்தில் உறைந்த நீதியே
அகிலம் முழுவதும்
அன்பே என்று உரைத்தாய்.
உன் அன்பெனும் பிடிக்குள்
உள் புகுந்தோம்
வணங்குகிறோம் உந்தனை
வாழ்வு முழுதும்
எம் மேய்ப்பனாய்
வந்தருள்வீரே.
Leave a comment
Upload