தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
எங்கு திரும்பினாலும் கிறிஸ்துமஸ் பாடல்கள் - ஸ்வேதா அப்புதாஸ் .

உலகமுழுவதும் நவம்பர் மாதம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸ் மூட் தானாக வந்துவிடும் .

20241117234638130.jpg

முக்கியமாக பிசினஸ் மேக்னெட்டுகள் கிறிஸ்துமஸ் ஸ்டார் , ட்ரீ , ஜோடனைகள் என்று விற்பனை களைகட்டிவிடும் .

வெளிநாடுகளில் சொல்லவே வேண்டாம் அதிலும் இங்கிலாந்து நாடே வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் .

20241117234824831.jpg

லண்டனில் பணிபுரியும் மரியா அங்கு ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அபுதாபி பின் பெங்களூரை சுற்றிவிட்டு வந்துள்ளார் .

நாம் மரியாவை சந்தித்து பேசினோம் ,

" அப்பப்பா கிறிஸ்துமஸ் இங்கிலாந்தில் நவம்பர் முதல் வாரத்திலே துவங்கிவிடுகிறது .

20241117234928428.jpg

கிறிஸ்துமஸ் கரோல் பாடல்கள் எங்கு திரும்பினாலும் கேட்டுக்கொண்டே இருக்கும் .

டியூப் ட்ரைனில் சென்றாலும் எந்த மாலுக்குள் தலையை விட்டாலும் கிறிஸ்துமஸ் பாடல்கள் தான் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது .

கான்வென்ட் கார்டன் பகுதிக்கு சென்றால் கிறிஸ்துமஸ் டெக்கரேஷனுக்கு பஞ்சமில்லை வித விதமான பச்சை ட்ரிகள் பெல்ஸ் , அழகிய பால்கள் , ஸ்டார் சுற்றி சுற்றி லைட்டுகள் ஜொலித்து கொண்டிருக்கிறது .

20241118000746544.jpg

அதே போல ரிஜின்ஸ் ஸ்ட்ரீட் , ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் , போர்ன் ஸ்ட்ரீட் மற்றும் கென்பரி ஸ்ட்ரீட் பகுதியில் ஏகப்பட்ட கிறிஸ்துமஸ் கடைகள் பார்க்கமுடிந்தது . யூ கே கிராமத்து பகுதியில் வசிக்கும் சிறு கைவினை தொழிலாளிகளின் அனைத்து பொருள்களும் குவிந்து கிடந்தன .

20241118000958478.jpg

லண்டன் பிசி டென்ஷன் வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏகப்பட்ட டிப்ரஷன் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் தான் அனைவரும் டிப்ரஷனில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸ் ஆகிறார்கள் அது தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்கிறார் மரியா !.

இந்தியா வரும் வழியில் மரியாவுக்கு கிடைத்த ட்ரான்சிட் விசிட் அபுதாபி .

20241118001251134.jpg

" அபுதாபி ஏர்போர்ட்டில் இறங்கினவுடன் வரவேற்றது பெரிய தலைகீழான கிறிஸ்துமஸ் ட்ரீ ..அதன் முன் ' Joy to the world ' O'Come all ye faithful ' ' Sailent night ' 'Feliz navidad' என்று கிறிஸ்துமஸ் கரோல் பாடல்களை லைவாக பிலிப்பைன்ஸ் பாடகர் குழு பாடிக்கொண்டிருந்தனர்

அது ஏன் தலைகீழ் கிறிஸ்துமஸ் ட்ரீ ? ஏசுவின் பிறப்பு ,சிலுவை பாடுகள் மற்றும் அவரின் உயிர்ப்பை பிரதிபலிக்கிறதாம் .இதை கேட்டு எனக்கு ஆச்சிரியமாக இருந்தது அபுதாபியில் இப்படி பட்ட அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் ட்ரீ சூப்பர் !.என்கிறார் .

இந்தியாவுக்கு வந்து பெங்களூர் ஏர்போட்டில் இறங்கி வர மிக பெரிய

அழகான கிறிஸ்துமஸ் ட்ரீ வரவேற்றது

20241117235603710.jpg

ரொம்பவே அழகாக இருந்தது வந்து இறங்கிய அனைத்து பயணிகளும் இந்த ட்ரீய்யை பார்த்துவிட்டு தான் நகர்ந்தார்கள் .

நாமும் மரியாவுடன் சென்றோம் ...

மரியா ஒரு அழகிய கிறிஸ்துமஸ் ட்ரீ யுடன் வந்தார் .

பெங்களூர் நகரில் கிறிஸ்துமஸ் களைகட்டியிருந்தது ..

20241117235954650.jpg

ஆசியாவிலேயே மிக பெரிய கிறிஸ்துமஸ் ட்ரீ பினிக்ஸ் மால் ஆப் ஏஷியாவில் கம்பிரமாக நின்று கொண்டிருந்தது .

மால் வாயிலின் முன் ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மார்க்கெட் படு பிஸியாக இருந்தது .

நூறு அடி உயர் கிறிஸ்துமஸ் ட்ரீ பெங்களூரையே தன் பக்கம் ஈர்த்துள்ளது .

அந்த இடம் முழுவதும் அழகான லைட்டுகள் அலங்கரித்து கொண்டிருந்தன .


அங்கும் பிலிப்பைன்ஸ் பாடகர்கள் கரோல் பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்து கொண்டிருக்க ரஷ்ஷிய நாட்டை சேர்ந்த மாடல்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மகிழ்வித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் .

20241118000605149.jpg

நாம் அவர்களிடம் போய் பேச்சுகொடுக்க அவர்கள் " எங்களுக்கு போட்டோவுக் போஸ் கொடுக்க தான் உத்தரவு பேச்சுக்கு இடமில்லை என்று நழுவினார்கள் .

20241118000636735.jpg

இங்கு விசிட் செய்யும் பெரும்பாலான மக்கள் ஏகப்பட்ட கிறிஸ்துமஸ் நினைவு பொருள்களை வாங்கி சென்றனர் மரியாவும் சில கிறிஸ்துமஸ் கிபிட் வாங்கி தந்தார் நமக்கு.

இந்த வருட கிறிஸ்துமஸ் விசிட் பர்ச்சேஸ் மறக்கமுடியாத ஒன்று என்று கூறுகிறார் மரியா .