திரிஷா
ஆர் கே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிக்கும் படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்தப் படத்தில் திரிஷாவுக்கு வக்கீல் வேடம்.
ஐஸ்வர்யா லட்சுமி
சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின். விமல் நடிப்பில் விலங்கு வெப் சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்தப் படத்தின் இயக்குனர்.
ஜனனி
சின்னத்திரை மற்றும் குறும்படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தவர் ஜனனி. இப்போது ஃபேமிலி படத்தில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். ஜனனிக்கு கவர்ச்சியாக நடிக்க விருப்பமில்லை ஹோம்லியான வேடங்கள் என்றால் நடிக்க தயார் என்கிறார்.
சாய் பல்லவி
இந்தியில் ராமாயணம் படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி விரைவில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
திவ்யா துரைசாமி
நடிகை திவ்யா துரைசாமி அடிக்கடி போகும் இடம் திருவண்ணாமலை கிரிவலம் தான்.
சுட சுட
பகத் பாஸில்
இம்தியாஸ் அலி இயக்கும் இந்தி படத்தில் பகத் பாஸில் அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடி அனிமல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்த திரிப்தி டிம்ரி.
கவுண்டமணி
கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் ஆறு மாதங்களுக்கு முன்பு ரிலீசாக வேண்டியது. ஆனால் நடக்கவில்லை. இப்போது அதை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார் கவுண்டமணி.
சோபிதா
சமீபத்தில் நாக சைதன்னாவவை திருமணம் செய்து கொண்ட சோபிதாவின் சொத்து மதிப்பு 16 கோடி என்கிறார்கள்.
ஸ்ரீ லீலா
சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடி ஸ்ரீலிலா. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இது தவிர அதர்வாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வரலட்சுமி சரத்குமார்
விஜய் நடிக்கும் கடைசி படத்திலும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இந்தப் படத்திலும் வில்லி வேடம்தான் .சண்டைக் காட்சிகள் எல்லாம் உண்டாம்.
ஆயிரம் கோடி
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பான் இந்தியா படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் வசூலில் ஆயிரம் கோடியை தாண்டும் என்று நம்புகிறார் இயக்குனர் சங்கர்.
Leave a comment
Upload