தொடர்கள்
அரசியல்
கலாட்டா -மன்றம் விகடகவியார்

20241121082208774.jpeg

சமீப காலமாக பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடப்பதாக தெரியவில்லை. பெரும்பாலும் பாராளுமன்றம் காலை 11:00 மணிக்கு தொடங்கி 06:00 வரை நடைபெறும். சில நேரங்களில் முக்கிய விவாதங்களில் நிறைய பேர் பேச இருப்பின் 7 மணி, 8 மணி 10 மணி வரை கூட பாராளுமன்ற நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன. இப்போது எல்லாம் அது பழங்கதை என்று ஆகிவிட்டது. பாராளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு மேலும் ஒத்திவைப்பு என்று முறையான விவாதங்கள் என்பது அரிதாகிவிட்டது.

மாநிலங்களவையில் அரசியல் சாசனம் குறித்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் "இப்போது அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது பேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் என்கின்றனர். இதற்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் ஆவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். அம்பேத்கர் பெயரை நூறு முறை கூட நீங்கள் உச்சரியுங்கள். அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை நான் கூற விரும்புகிறேன். நேரு தலைமையிலான அரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய நேரிட்டது. பட்டியலின மற்றும் பழங்குடியினரை நேரு அரசு நடத்துவதில் திருப்தி இல்லை என்று பலமுறை அம்பேத்கார் கூறியுள்ளார்" என்று பேசினார் அமித்ஷா.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் இரு சபையிலும் நேற்று அமளியில் ஈடுபட்டன .இதனால் இரு சபைகளும் முடங்கின.மேலும் பார்லிமென்ட் வளாகத்தில் அம்பேத்கர் குறித்த பேச்சுக்காக அமித்ஷா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமித்ஷாவின் பேச்சை காங்கிரஸ் கட்சி திரித்து கூறுகின்றனர். நான் பேசிய ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பொய் பிரசாரம் செய்கிறது என்கிறார். பிரதமரும் அமித்ஷாக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் போது அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது. அவருக்கு எதிராக நேரு பிரச்சாரம் செய்தார். அவருக்கு பாரத ரத்னா தர மறுத்தது காங்கிரஸ். பாராளுமன்ற மைய மண்டபத்தில் அவர் உருவப் படத்துக்கு பெருமைக்குரிய இடத்தை வழங்க மறுத்தது என்று காங்கிரஸ் அம்பேத்கரை எந்த அளவுக்கு அவமானப்படுத்தினார்கள் என்று பட்டியலிட்டார்.

எதிர்க்கட்சிகள் அமித்ஷா அம்பேத்கர் அவமானப்படுத்தியதாக கூறி நேற்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவும் அமித்ஷாவும் ஆதரவாக காங்கிரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது எம்பிக்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம் பி பிரதாப் சந்திர சாரங்கி தலையில் காயம் ஏற்பட்டது. இதுக்கு ராகுல் தான் காரணம் என்று புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பதிலுக்கு பாஜக எம்பிகள் தள்ளிவிட்டதால் தனது கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே புகார் அளித்தார். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் டெல்லி போலீசில் புகார் சொல்லியிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பாஜக எம்பிக்கள் பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷனில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு எதிராக நேற்று புகார் அளித்தார்கள். அவர் மீது கொலை முயற்சி புகார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாஜக ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டு வைரல் ஆக்கியது அதில் பாஜக எம் பி சாரங்கி தரையில் உட்கார்ந்து இருக்க சக எம்பி ஒருவர் கைகுட்டையால் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து ராகுல் காந்தி அவர்தான் என்னை பிடித்து தள்ளினார் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதைத் தொடர்ந்து வயதான எம்பி தள்ளிவிட்டு விட்டு மன்னிப்பு கேட்பதற்கு பதில் அவர் மீது குற்றம் சொல்கிறார் என்று பாஜக தரப்பு வாதிடுகிறது.

தமிழக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு ராகுல் காந்திக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்தசம்பந்தமும் இல்லை இது சமூக வலைதளத்தில் ஒரு புதிய பதிவை பதிவு செய்திருக்கிறார்.

எது எப்படியோ ,அம்பேத்கர் உயிருடன் இருக்கும் போது இந்த அளவுக்கு எந்த அரசியல் கட்சிகளும் பெரிய அளவு கொண்டாடியதாக தெரியவில்லை. நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் கூட என் தலைவன் அம்பேத்கர் என்று கூறுகிறார்.

அம்பேத்கார் இப்போது எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு வாக்கு வங்கி என்பது மட்டும் உண்மை.