"இப்போதான் விடுதலை சிறுத்தை கட்சிகள் பஞ்சாயத்து முடிந்தது அடுத்து இன்னொரு கட்சி பிரச்சனை செய்ய ஆரம்பிச்சாச்சு" என்று சொல்லிய படியே உள்ளே நுழைந்தார் விகடகவியார்.
"இப்ப யார் பிரச்சனை" என்று நாம் கேட்டதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தான். ஏற்கனவே சட்டசபையில் வெளிப்படையாக என் தொகுதியை புறக்கணிக்கிறார்கள் என்று புகார் சொன்னார்.
இப்போது கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி யோசனை செய்கிறேன். அமைச்சர்கள் என்னை புறக்கணிக்கிறார்கள் என்னை சந்திக்க மறுக்கிறார்கள். கள்ளச்சாராய சாவுக்கு 10 லட்சம் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு லட்சம் தானா என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கிறார் வேல்முருகன் என்றார் விகடகவியார்.
சரி இதற்கு அமைச்சர்கள் ரியாக்ஷன் என்ன?
அதெல்லாம் ஒன்றும் இல்லை அவர்கள் கவலையே வேறு முதல்வர், துணை முதல்வர் தங்கள் மாவட்டங்களில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி முறையான தகவல் எதுவும் தங்களுக்கு வருவதில்லை. இதை அவர்களிடம் எப்படி சொல்வது என்பதுதான் அவர்கள் கவலை வேல்முருகன் கவலை எல்லாம் அவர்களுக்கு எதுவும் இல்லை.
தவிர இப்போது கூட்டணிக் கட்சி தலைவர்களை தள்ளி வைக்க சொல்லி திமுக தலைமை சொல்லி இருக்கிறதாம். எனவே வேல்முருகன் பற்றி பெரிதாக திமுகவில் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.
"சரி ....ஆதவ் அர்ஜுனா விஷயத்திற்கு வாரும் "என்று நாம் சொன்னதும் ...
அதற்கு முன் திருமாவளவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை சொல்லி விடுகிறேன் என்று சொல்லி பாராளுமன்றம் மைய மண்டபத்தில் கட்சி வித்தியாசம் இன்றி எல்லா எம்பிக்களும் அரட்டை அடிப்பது வழக்கம் .அரசியல் பேசுவதும் வழக்கம். ஆனால் இப்போது திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன் வந்து உட்கார்ந்தால் முகத்தை திருப்பிக் கொள்கிறார்களாம் என்றவர்
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏகப்பட்ட ஆஃபர் அதிமுக வாருங்கள் என்கிறது விஜயும் பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரும் யோசித்து வருகிறார் அவரது அரசியல் காய் நகர்த்தல் தனக்கு என்ன ஆதாயம் என்ற போக்கில் போகிறது என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.
"சரி அதிமுக பொது குழு விஷயத்திற்கு வாருங்கள் "என்றோம்....
இந்த முறை விருந்து எல்லாம் எந்த சர்ச்சை இல்லாமல் முடிந்தது தீர்மானங்களில் திமுகவை கண்டித்து தீர்மானம் பாஜகவை வலியுறுத்தி அதாவது மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் என்று பாஜகவுக்கு வலிக்கிறார் போல் நடந்து கொள்ளவில்லை எது திமுக விமர்சனம் செய்திருக்கிறது. அது கிட்டத்தட்ட உண்மைதான் என்றார் விகடகவியார்.
"அப்படி என்றால் அதிமுக பாஜக கூட்டணி வரும் என்று சொல்கிறீர்களா"
நான் அப்படி சொல்லவில்லை....
அதிமுகவின் மனசாட்சி ஜெயக்குமார் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.
கூட்டணிக்கு தடையாக இருப்பது அண்ணாமலை தான். அண்ணாமலையை நாம் மாற்றி விட்டால் கூட்டணி பற்றி நாம் உரிமையோடு அவர்களிடம் பேசலாம் என்று டெல்லி பாஜக நம்புகிறது.
சரி.... அண்ணாமலை நிலைப்பாடு என்ன....
நடுவே நடுவே கூட்டணி பற்றி நான் முடிவு செய்ய முடியாது என்று சொல்கிறார் திராவிட கட்சிகள் என்று விமர்சனமும் செய்கிறார். அவர்கள் தரப்பில் விசாரித்த போது அண்ணாமலை தலைவர் பதவிக்கு இப்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அடித்து சொல்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை விஜய் சொல்வது போல் அவர்கள் ஒரு தடவை முடிவு செய்து விட்டால் அவர்கள் பேச்சை அவர்களே கேட்க மாட்டார்கள். அண்ணாமலை விஷயத்திலும் அது நடக்கலாம். அவர்களுக்கு அரசியல் முக்கியம் என்றார் விகடகவியார். .
"சரி விஜய் சம்பந்தப்பட்ட செய்தி எதுவும் இல்லையா? என்று கேட்டதும்....
அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேச்சுக்கு என் தலைவன் அம்பேத்கர் என்று அவர் பொங்கி எழுந்ததை பார்க்கவில்லையா நீர் இப்போதைக்கு திமுகவுக்கு கிடைத்த தகவல் திமுகவின் வாக்கு வங்கியை அவர்தான் கொஞ்சம் கபளிகரம் பண்ணுவார் என்ற பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் யோசனை. அதனால்தான் அவசர அவசரமாக அமித்ஷாவுக்கு எதிராக அம்பேத்கருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்தியது என்று சொன்ன விகடகவியார் ...
இப்போதைக்கு அரசியல் கட்சிகள் எல்லாவற்றிற்கும் அம்பேத்கர் ஜுரம் என்று சொல்லி சிரித்தபடியே புறப்பட்டார்.
Leave a comment
Upload