தொடர்கள்
சினிமா
ஓடிடி விமர்சனம் - மெய்யழகன் - ரமணி

20241002081411604.jpeg

16 வயதினிலே படத்துக்கு குமுதம்
ஆசிரியர் எஸ் ஏ பி அந்தக்காலத்தில் ஒரு விமர்சனம் எழுதிஇருந்தார்.

அதில் " இந்தப்படத்தில் கதை என்று பெரிசாக ஒன்றும் இல்லையே என்று சிலர் கேட்கலாம். ஆனால்
யோசித்துப்பார்த்தால் எந்தக் கவிதையில் தான் பெரிசாக ஒரு கதை இருந்திருக்கிறது? " என்று எழுதியிருந்தார்.

இந்த வார்த்தைகள் "மெய்யழகன் "
படத்துக்கும் ரொம்பவும் பொருந்தும்.

"யார் இந்த நல்லவன்?" என்ற கார்த்திக் பற்றிய அரவிந்த்சாமியின் புதிர் நம்மையும் தொற்றிக்கொள்ளுகிறது படம்
ஆரம்பித்த உடனே.


கடைசியில் அழகாக முடிச்சு அவிழ்கிறது.

ஒரே இரவில் பழைய நினைவுகளுடன் போராடிப்பின் தீர்வு காணும் இருவர் பற்றிய படம்
எடுப்பது என்பது பிரேம் குமாருக்கு புதிதல்ல.

96 படத்தில் ஆரம்பித்ததை மெய்யழகனில் வேறு பரிமாணத்துக்கு கடத்துகிறார்.

1996 இல் நடந்த சம்பவப்பின்னணி தான் மூலம் இரண்டு படத்துக்கும் என்பது ஒரு இனிய,தற்செயலான, விஷயம் என்று தோன்றுகிறது.

அரவிந்தும் கார்த்தியும் இந்த அழகான ரதத்தை இயக்கும் இரட்டை நீலவேணிக் குதிரைகள்.
ஆனால் ஜானவாச ரதம் தான். அதுவும் ஒரு அழகு தானே!

வானில் மின்னும் மின்னல் ஒரு அழகெ ன்றால் மெதுவாய் நகரும் மேகங்களும் அழகு தானே .?

பின்னணி இசை, வசனம்.. அற்புதம்.

ராஜ்கிரண்,தேவதர்ஷினி, ஸ்ரீ திவ்யா என்று எல்லாரும் பின்னுகிறார்கள்.

ஆயினும் கார்த்தியையும் , அரவிந்த் ஸ்வாமியயும் நம்மால் ரொம்ப நாளைக்கு மனதை விட்டு வெளியே அனுப்ப முடியாது.

தமிழ் சினிமாவின் பெருமைக்குறிய சில படங்களின் லிஸ்டில் மெய்யழகனுக்கு நிச்சயம் இடம் உண்டு.