ஏண்ணா, உங்க நண்பரோட புள்ளையாண்டான் ஊருக்கு வந்து இருக்கான் போல என்னவிஷயமாம்? எனக் கேட்டாள் ருக்கு.
தீபாவளி வருதோன்னோ, ஊரிலே கொண்டாடலாம் என வந்திருப்பான் எனநினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஆத்தினுள்ளே வந்தான்முரளி. உடன் படித்தவரும், நண்பருமான மகாலிங்கம் என்ற மாலி அவர்களின் ஒரே மகன்வெளி நாட்டில் வேலையில் உள்ளவன். மகன் மீதும்,பெயரன் ஹரீஷ் மீதும் ரொம்ப பாசமாகஇருந்தவர்கள்.
மனைவி விஜிக்கும் அம்மாவிற்கும் ஒத்துப்போகலை, ஹரீஷின் மேல்நிலை படிப்பு எனபெற்றோரை கோவையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வெளிநாடு சென்றிருந்தான்
மாமா எப்படி இருக்கேள் ? மாமி, நீங்க எப்படி இருக்கேள் ?
என்று நலம் விசாரித்தான்.
நாங்கள் நல்லா இருக்கோம்டா முரளி, நீ எப்படி இருக்காய் ? எப்போ ஊருக்கு வந்தாய்? உன் ஆத்துக்காரி கூட சொன்னாள், நீ வரப்போறதா ஏதாவது துபாயிலேர்ந்துவேண்டுமா ? எனக் கேட்டாள்.
ஆமாம் மாமா, நான்தான் கேட்கச் சொன்னேன், இந்தாங்கோ என பேங்காய் கீரீம்,ஆக்ஸ், சாக்லெட், ஜெர்ஜென்ஸ், நெயில் கட்டர், என வீட்டு உபயோகப் பொருட்கள்அடங்கியதை அவர்களிடம் கொடுத்தான்.
ரொம்ப தேங்ஸ்டா முரளி, வயசானவாளுக்கு என்ன என்ன தேவையோ அதை வாங்கிண்டுவந்திருக்காய், சமர்த்து என பாராட்டிய அய்யாசாமி, இதே போல் தாய் தந்தையையும்ஊருக்கு அழைத்து வந்து விட்டால் எனக்கும் சந்தோஷமாக இருக்கும் எனச் சொல்ல,
நீங்க சும்மா இருங்கோ ! அவன் என்ன அவாளை வேண்டுமென்றா கொண்டு போய்இல்லத்திலே விட்டான், வேற வழியில்லாமல் தானே சேர்த்தான், அவன் என்ன செய்வான் ? ஆத்துக்காரி சொல்வதையும் கேட்கணும்தானே, பாவம் என முரளி மீது பரிதாபம்காட்டினாள் ருக்கு.
சரியா புரிஞ்சுண்டேள் மாமி. மூன்று வருடமாச்சு. நான்
இந்தியாவில் இல்லாமல் மனைவியுடன் அவர்கள் இருந்தால் அது எல்லோருக்கும்கஷ்டத்தைத்தான் தந்திருக்கும்.
அதனால்தான் அங்கேயாவது அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்,
என யோசித்துதான் சேர்த்தேன் மாமி, ஆனால் விஜியும் ஒரு நாள் அவர்களைபுரிந்துக்கொண்டு அனுசரித்து செல்வாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றான்முரளி.
சரியாக சொன்னாய் முரளி, தீபாவளி வருதே, நீ போய் அவர்களை இங்கே அழைத்துண்டுவா நாம சேர்ந்து கொண்டாடலாம் என அய்யாசாமி சொல்ல,
கண்டிப்பாக மாமா, நாளைக்கே நாங்கள் ஊட்டி போயிட்டு சுற்றிப் பார்த்துட்டுவரும்போது அவர்களை அழைச்சுண்டு இங்கே வரத்தான் போறேன், என்ற முரளி, என்னமிளகு குழம்பா ? வாசனை தூக்கறதே,
அதெல்லாம் சாப்பிட்டு எத்தனை வருடமாச்சு ! என சந்தோஷமாக கூறி விடைப்பெற்றான்.
அதற்கென்ன ? நீ போய் ஹரிஷை அனுப்பி வை, மிளகு குழம்பும், பருப்புத் துவையலும்கொடுத்து விடறேன் என்றாள் ருக்கு.
ஏண்ணா, இவன் போய் கூப்பிட்டால் மாலி வருவார் என நினைக்கிறேள் ? கேட்டாள்ருக்கு.
மாலி நிரந்தரமாக ஊருக்கே வரனும் என ஆசைதான் எனக்கு, ஆனால் அவன்தீபாவளிக்கே வரமாட்டான் என நான் நினைக்கிறேன் என்றார் அய்யாசாமி.
உங்களுக்கு அரட்டை அடிக்க அவர் வேண்டுமா ? வேண்டாமா ?
அதைச் சொல்லுங்கோ என கேட்டாள் ருக்கு.
நல்லது நடக்கவேண்டும் என நீ நினைச்சுட்டே? பின்னே என்ன ? கண்டிப்பாக அவர்வந்திடுவார் என்றார் அய்யாசாமி நம்பிக்கையாக..
பெயரன் ஹரீஷ் வரவும்,அவனிடம் ஏதோ பேசிய ருக்கு மிளகு குழம்பும், பருப்புத்துவையலோடு சில முக்கியச் செய்திகளும் அவனுக்கு காதில் கொடுத்தனுப்பினாள்.
ஊட்டி டூர் முடித்து, கோவையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு
சென்ற முரளி, மருமகளை, பெயரனை அனைவருக்கும் அறிமுகப் படுத்தி, அவர்களோடுசந்தோஷமாக பேசினான். தாத்தாவும் ஹரீஷுடன் மனம்விட்டு சிரித்துப்பேசி விளையாடசிறிது நேரம் நகர்ந்தது. பின்னர் ஊருக்கு தங்களோடு தீபாவளி பண்டிகைக்கு வரும் படிஅவர்களை அழைத்தனர்.
மூன்று வருடமாக இங்கே இவர்களோடு உறவாய் பழகி அவர்களோடு பொங்கல், ரம்ஜான்,கிருஸ்துமஸ் என பல பண்டிகைகள் கொண்டாடி விட்டோம், இப்போதீபாவளியையும் இவர்களோடே சேர்ந்து நாங்கள் கொண்டாடிக் கொள்கிறோம் எனமறுத்து அவர்கள் ஊருக்கு வருவதற்கில்லை உறுதியாக மறுத்து விட்டனர்.
சோகத்துடன் அவர்கள் காரில் ஏறியபோது , ஹரீஷ் கையில் வைத்து ஏதையோ பார்த்துக்கொண்டிருந்தான்,
என்ன இது ? ஹரீஷ் என விஜி கேட்டதும், இதுவா ? இந்த முதியோர் இல்லத்துவிசிட்டிங்கார்டு என்றவன் பின்னாளில் பயன்படும் என்றதும் விஜியின் தாய்மை ஆழ்கிணற்றில் விழுவது போல இருந்தது, அவனுக்குள் இப்படி ஒரு எண்ணம் தோன்ற தாமேகாரணமாக இருந்துவிட்டோம் என உணர்ந்து,
கொஞ்சம் இருங்கள், என மாமா, அத்தை தங்கியிருந்த அறை நோக்கிச் சென்றவள் அப்பா, என கூப்பிட்டாள் கண்கள் கலங்கிய படி,
என்னம்மா இன்னும் நீங்கள் கிளம்பலையா? கேட்டார்.
நாங்கள் வயதில் சிறியவர்கள், தவறான முடிவைத்தான் பெரும்பாலும் எடுப்போம், நீங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் அந்த தப்பை மன்னித்து எங்களோடு நீங்கள்நிரந்திரமாக வரவேண்டும் என சொல்ல,
அழாதே விஜி. நீங்களும் தீபாவளிக்கு இங்கேயே வந்திடுங்கோ, நாம் எல்லோரும்சேர்ந்து இவர்களோடு கொண்டாடிய பிறகு ஊருக்கு வருகிறேன் என கூறி அனுப்பிவைத்தார்.
கண்கள் கலங்கியபடி சென்றவளைப் பார்த்து அத்தை, என்ன விஜிக்கு திடீரெனஞானோதயம் வந்துடுத்தோ ? என கேட்க,
தப்பு, அவளே மனம் மாறி நம்மை கூப்பிட்ட பிறகு நாமும் சந்தர்பத்தை அவளுக்குகொடுக்கனும், வீம்பிற்கு நிற்க கூடாது. அதுவே நாளை நம்மை கேள்விக்குள்ளாக்கும். ஆகையால் தீபாவளிக்குப் பிறகு நாம் அவர்கள் கூட போவதுதான் சரியாக இருக்கும்உறவுகள் தொடர என நிறுத்தினார்.
இந்த செய்திகள் எல்லாம் ஹரிஷ் மூலமாக ருக்குவிற்கும், அய்யாசாமிக்கும் தெரியவந்துசந்தோஷமடைந்தனர்.
ருக்கு நினைச்சதை சாதிச்சுட்டியே எப்படி ? கேட்டார் அய்யாசாமி.
விட்டுக் கொடுத்தலும், மன்னித்து மறத்தலுமே உறவிற்குத் தேவை, யாராவது ஒருத்தர்இறங்கி வரனும்ணா, காராமான மிளகு குழம்பிற்கு தொட்டுக்க பருப்புத் துவையல்பண்றதில்லையா ? சாந்தமான மோர் சாதத்திற்கு தொட்டுக்க உரைப்பான ஊறுகாய்போட்டுக்கறதில்லையா?
சாப்பாட்டுக்கே இப்படி அப்படி என இருக்கும் போது, வாழ்கிற வாழ்க்கையிலே எல்லாரும்காரமாக இருந்தால் எப்படிண்ணா வாழ்க்கை சிறக்கும் ? என கேட்டாள் ருக்கு.
ஓ. ஓ அந்த ஹரிஷ் வாங்கிண்டுப்போன மிளகு குழம்பில் இருக்கா சங்கதி, நான்தான்பருப்பு துவையாலாகவே இருக்கேன் போ என தாமதமாகப் புரிந்து மகிழ்ந்தார்அய்யாசாமி
Leave a comment
Upload