தொடர்கள்
அனுபவம்
மலையேறலாம் வாங்க 3 - ராம்

2024100207262621.jpeg

(மலையேறத் தூண்டிய பேராசிரியர் ராஜன். மலையுச்சி தருணங்கள் அற்புதமானவை)

ஒரு வழியாக தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டுஉருப்படியான ஒரு முன்னெடுப்பை கையில்எடுத்திருக்கிறது.

அதாவது டிரெக் தமிழ்நாடு என்று நாற்பதுக்கும் மேற்பட்ட மலையேற்றத்தை துவங்கியிருப்பது தான் ஆச்சரியம் ப்ள்ஸ் மகிழ்ச்சி. இத்தனை நாள் மலையேற்றம் இல்லையா ?? என்றால் இருந்தது அது மலையேற்றம் பிடித்தவர்கள் சிலருக்கு மட்டுமான ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இனி இந்த முன்னெடுப்பினால் அனைவரையும் இந்த பொழுது போக்கு ஈர்க்கும். அதன் கட்டண விபரங்களோ அல்லது இன்ன பிற முறைகளோ அல்ல கணக்கு.

அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதான ஒன்று. ஏன் மலையேற வேண்டும்.

20241002072901488.jpeg

உடற்பயிற்சி.

உடலினை உறுதி செய்ய இதை விட சிறந்த பொழுது போக்கு இல்லை.

தசைகளையும் எலும்புகளையும் நம்மையறியாமலேயே உறுதியாக்கும் மலையேற்றம்.

பாலன்ஸ் நம்மையறியாமல் கைவரப் பெறும்.

இருதய நோய் வராமல் தடுக்கும். (ஏற்கனவே இருப்பவர்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியம்)

சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் பின்னாட்களில் வராமல் தடுக்கும்.

20241002073035774.jpeg

மனநலம்.

இயற்கை சார்ந்த இடங்களுக்கு மலையேறச் செல்வதால் நமக்குள் இருக்கும் ஸ்டிரெஸ் அளவு மன அழுத்தம் ஏகத்திற்கும் குறையும்.

ஒவ்வொரு அடியாக அளந்து கவனமாக நடக்கையில் மனதில் பிற நெகடிவ் விஷயங்கள் தோணாமல் அது நம் எண்ணங்களை செழுமை படுத்தி விடும்.

இயற்கை சூழ்நிலையில் ஒரு நாள் இப்படி நடப்பது நம் புலன்கள் அனைத்தையும் கடுமையான வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் சுத்தகரிக்கும்.

20241002074037629.jpeg

உறவுமுறை

தனியாக இல்லமால் ஒரு சின்ன குழுவாகவோ அல்லது ஒரு கூட்டமாகவோ கூட மலையேறுவது அல்லது நம் வீட்டில் உள்ளவர்களுடன் மலையேறுவது உறவுகளை மேம்படுத்தும். நண்பர்களுடன் மலையேறுவது ஒரு ஜாலியான அனுபவம். அங்கிருக்கும் சவால்கள், ஒருவருக்கொருவர் ஒத்தாசை இதெல்லாம் மலையேற்றத்தின் போனஸ்கள். மலையுச்சியில் அமர்ந்து சாப்பிட்டு பாருங்கள். அது வார்த்தையில் விவரிக்க முடியாத குதூகலம்.

இத்தனை நாட்கள் பயந்து பயந்து மலையேறியது போக இப்போது அரசு இறங்கி வந்து நம்மை மலையேற வைப்பது கைடு இன்ஸூரன்ஸ் போன்ற ஏற்பாடுகளுடன், உணவும் ஏற்பாடு செய்து கொடுக்கையில் பரம சுகம்.

சின்னதோ பெரிதோ, நாற்பது மலையேற்றங்கள் பலருக்காக பல எளிய சவால்களில் துவங்கி கடுமையான மலையேற்றம் வரை முயற்சி செய்யுங்கள்.

தேவை ஒரு நல்ல ஹைக்கிங் ஷூ. மற்றும் தண்ணீர் எடுத்து செல்ல ஒரு பை இத்யாதிகள். பெரிய செலவு வைக்காது. ஒரு முறை செலவு செய்தால் போதும்.

சபரிமலை ஏறுவேன் திருப்பதி ஏறுவேன் என்று மட்டும் சொன்னால் போதாது.

பொதுவான மலையேற்றங்கள் வாழ்க்கையின் சில அற்புத தருணங்களை கொடுக்கும்.

அடுத்த வாரம் ஜெர்மன் ஆல்ப்ஸ் மற்றும் சுவிசர்லாந்து ஆல்ப்ஸ் மலையுச்சி அனுபவங்களை பகிர ஆசை.

மலையேறலாம் வாங்க.

ஹாங்காங் மலையேற்றங்களை வைத்து ஒரு பாடல் எழுதிய போது..

கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார்ஸ் ரஞ்சனி காயத்ரி மலையேறிய போது