ஏற்கனவே இருந்து வந்த மலையேற்ற செயல் பாடுகள் தேனி குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன .
தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முயற்ச்சியால் புதிய அரசு திட்டமாக உதயமாகியுள்ளது மலையேற்றம் .
கடந்த 24 ஆம் தேதி தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துவக்கி வைத்தார்கள் துணை முதல்வரும் வன துறை அமைச்சர் பொன்முடியும் .
தமிழ் நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் 40 அழகிய இயற்கை சூழல் மலையேற்ற வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீலகிரி கொடைக்கானல் கன்னியகுமாரி வரை உள்ள பிரபல சுற்றுலா வனப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ட்ரெக்கிங் ரூட்டுகள் தமிழ் நாடு வனத்துறையால் தமிழ்நாடு வன மற்றும் உயிரின மலையேற்ற ஒழுங்கு முறை விதிகள் 2018 ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன .
மேலும் ட்ரெக்கிங் கைடுகள் 50 பழங்குடி மற்றும் வனங்களின் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து 300 க்கும் மேற்பட்ட இளையஞர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு வன ஒழுக்கம் , திறன்மேம்பாடு , முதலுதவி , விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம் , பல்லுயிர் பாதுகாப்பு , மலையேற்றத்திற்கு வரும் ஆர்வலர்களின் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாம் .
மேலும் ட்ரெக்கிங் கைடுகளுக்கு சீருடைகள் , ட்ரெக்கிங் ஷூக்கள் , முதுகுப்பை , தொப்பி அடிப்படை முதலுதவி பெட்டி , தண்ணீர் கேன் , சுடுதண்ணீர் பிளாஸ்க் , ட்ரெக்கிங் ஸ்டிக், வாக்கி டாக்கி , விசில் மற்றும் திசைகாட்டி ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன .
மேலும் இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைவருக்கும் மற்றும் வழிகாட்டிகளுக்கும் காப்பீடும் வழங்கப்படுகிறது.
இதில் மற்ற ஒரு விஷயம் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எளிதாக ட்ரெக்கிங் செய்யும் ரூட்டில் பெற்றோர்களின் துணையுடன் அனுமதிக்க படுவர் என்று கூறுகின்றனர் .
வனஉயிரின ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது ,
"மலையேற்றம் அரசு எடுத்து நடத்துவது நல்லது தான் .அதே சமயம் தக்க பாதுகாப்பு தேவை .பத்து பேருக்கு மேல் போக கூடாது .
நான் நீலகிரி , கேரளா ஆகிய முக்கால்வாசி மலைகளில் ட்ரெக்கிங் போய் வந்துள்ளேன் .
நல்ல பயிற்சி பெற்ற நபர்கள் தான் கைடுகளாக செயல் படவேண்டும் .
நான் 1972 க்கு முன்பே ட்ரெக்கிங் சென்ற அனுபவம் உண்டு முதன் முதலில் பொட்டானிக்கல் கார்டனுக்கு பின் புறம் உள்ள ஸ்நோடௌன் மலையில் தான் ட்ரெக்கிங் சென்றேன் .
புல் வெளி ட்ரெக்கிங் சென்றுள்ளேன் .
நீலகிரி தார் அது தான் 'வரையாடு' கணக்கு எடுக்க வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்டில் ட்ரேக் போனது மறக்கமுடியாதது .
முக்கூர்த்தி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா தமிழ்நாடு மலைகளில் அதுவும் டாப் ஸ்லீவ் மற்றும் சைலன்ட் வேலியில் ட்ரெக்கிங் சென்று அனுபவம் இன்றும் என் கண்முன்னே . அனைத்தும் பாதுகாப்பாக அதேசமயம் யானை புலி , சிறுத்தை, கரடி என்று மீட் பண்ணியுள்ளேன் என்கிறார் கூலாக ...
மலையேற்றம் ஆரோக்கியமானது இயற்கையை சுவாசிப்பது உடலுக்கு நல்லது அது பாதுகாப்பாகவும் சரியான ட்ரெக்கிங் அமைந்தால் நல்லது தானே " என்று கூறினார் .
ஊட்டியை சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறும் போது , "தமிழகத்தில் ட்ரெக்கிங் உதயமாகியுள்ளது நல்லது தான் அதிலும் நீலகிரி ஒரு முக்கிய இடம் . அதே சமயம் கரிகையூர் முதல் போரிவரை ட்ரெக்கிங் என்பது யோசிக்க வேண்டியது அங்கு தான் 5 ஆயிரம் குகை ஓவியங்கள் உள்ளன அதை பாதுகாக்க வேண்டும் .அங்கு ட்ரெக்கிங் போனால் குகை ஓவியங்களை அழித்து விடுவார்கள் இதை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் ஆனால் கண்டுகொண்டதாக தெரியவில்லை .இது தேசிய சொத்து என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும் .
ஒரு காலத்தில் நீலகிரி காணுயிர் சுற்றுசூழல் சங்கம் மலையேற்றத்தை சிறப்பாக செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது அரசின் நல்ல முயற்சி ட்ரெக்கிங் செல்பவர்கள் சுத்த காற்றை சுவாசித்து இயற்கையுடன் ஒன்றித்து வருவார்கள் .
எக்காரணத்தாலும் வனத்தை மாசுகெடாமலும் பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும் .
சதா செல் போன் ஆன் லைனில் இருப்பவர்களுக்கு ஒரு தற்காலிக விடுதலை .
பாதுகாப்பான ட்ரெக்கிங் சிறப்பானது தான் " என்கிறார்.
மலையேற்றம் செல்ல விரும்புகிறவர்கள் ஆன் லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் www.trektamilnadu.com என்ற வலைத்தளத்தை உதயநிதி துவக்கி வைத்துள்ளார் .
நீலகிரியில் உள்ள மிக முக்கிய மலையேற்ற இயற்கை ஆர்வலர் ஒருவர் நம்மிடம் கூறும்போது ,
" ட்ரெக்கிங் நல்ல விஷயம் தான் அதிலும் அரசே நடத்துவது ஓகே அதே சமயம் முக்கியமான புலிகள் காப்பகத்தினுள் நடப்பது சரியில்லை .
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு பெரு மழை நிலச்சரிவில் அவலாஞ்சி பாதிக்கப்பட்டு சூழல் சுற்றுலா நிறுத்தப்பட்டது .
காலிப்ளவர் ஷோலா ,ரங்கசாமி பிக் ,முக்கூர்த்தி , தேவர்பெட்டா ஆகிய பகுதிக்கு அனுமதிக்க கூடாது .
கோத்தகிரி கரிகையூர் முதல் போரிவரையில் குகை ஓவியங்கள் உள்ளன .
முன்னாள் நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா இந்த பகுதி முழுவதும் பாதுகாக்கவேண்டிய பகுதி என்று அறிவித்து ட்ரெக்கிங் மற்றும் யாரும் நுழையக்கூடாது என்று உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
யானை வழித்தடமும் பாதிக்க கூடாது .
இதையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு செயல் படுத்தவேண்டும் .என்று ஆதங்க பட்டார் .
இயற்கை பாதிக்காத மலையேற்றம் சரியானது .
Leave a comment
Upload