தொடர்கள்
கவர் ஸ்டோரி
அமரன் ! ஒரு இராணுவ அஞ்சலி - ஶ்ரீகிருஷ்ணன்

20241002003322378.jpeg

ஒரு நல்ல சினிமாவை பாராட்ட என்று முடிவு செய்த பிறகு எங்கிருந்து துவங்குவது என்று குழப்பமாக இருக்கிறது. இயக்கம், இசை, நடிப்பு, காட்சியமைப்பு, வசனம், அழகியல் இப்படி எல்லா அம்சங்களும் அமையப் பெற்ற ஒரு திரைப்படத்தை பார்த்து யுகங்களானது போல தோன்றுகிறது.

ஒரு வேளை அடிநாதமாக இருக்கும் காரணம் நாட்டுப் பற்றும் அந்த இளம் இராணுவ வீரன் மீதுள்ள ஏக மரியாதையாக இருக்கலாம்.

ஏ,பி,சி இப்படி எல்லா செண்டர்களையும் கவர்ந்திழுத்து ஒரு படம் பண்ணுவோம் என்று சிவகார்த்திகேயன் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் கல்லூரி முதல் இராணுவ மேஜர் வரையுள்ள பயணத்தை இத்தனை அழகாக சொல்ல முடியுமா ?? இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு மிகப் பெரிய சல்யூட்.

சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் ஒரு மேக்னம் ஓபஸ். இனி இவர் வ.வா.சங்கம் போன்ற படங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு அத்தனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கல்லூரி மாணவரிலிருந்து மேஜராக உருமாறும் ஆகச் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் சி.கா.

படம் துவங்குவது இந்து ரெபக்கா வர்கீஸ் அவரின் கோணத்திலிருந்து தான். முடிவும் தான். இடைப்பட்ட இடங்களில் தான் சாய் பல்லவியின் ராஜ்யம்.

20241002003716262.jpeg

அப்பாவித்தனம்,குழந்தைத்தனம், காதல்,தைரியம்,கவலை, எதிர்பார்ப்பு,முகுந்த் அவரது கேரளா வீட்டுக்கு திடீர் விசிட் செய்யும் போது கொடுக்கும் முகபாவங்கள், அந்த கடைசி ஐந்து நிமிடங்கள், முகுந்தே என்று மலையாள தொனியில் கொஞ்சி அழைக்கும் அந்த நெஞ்சையள்ளும் விதம், சாய் பல்லவிக்கு நேஷனல் அவார்டு நிச்சயம்.

சமீபத்தில் மணிரத்தினம் கூட நான் உங்க ஃபேன் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

20241002003953206.jpeg

இந்து ரெபக்கா வர்கீஸின் முகுந்த் மீதுள்ள தன்னலமில்லாத காதல் ஒவ்வொருவரையும் கரைய வைத்து விடும்.

ஒரு உண்மையான இராணுவ வீரனுக்கு செய்யும் அஞ்சலியாக கூட இந்த படத்தை பார்த்து விட வேண்டும்.

குறை என்று இல்லை அது ஏன், ஒரு உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது முகுந்த் வரதராஜன் உண்மையில் எந்த சமூகத்தை சேர்ந்தவர், என்பதை மறைக்க வேண்டிய நிர்பந்தம் சினிமாவில் இருக்கிறது என புரியவில்லை.

தமிழ் சினிமாவின் அந்த அழுத்தத்தை மன்னித்து விடுவோம்.

படம் முடிந்ததும் தியேட்டரில் தொடரும் அந்த கனத்த மெளனம் தான், படத்தின் வெற்றிக்கும் முகுந்தின் வாழ்க்கையை ரசிகர்களுக்கு கடத்திய இயக்குனரின் வெற்றிக்கும் சாட்சி.

படம் பார்த்து முடித்து அடுத்த பல நாட்களுக்கு அதன் பாதிப்பு தொடரும் என்பது மட்டும் உறுதி.

20241002011431763.jpeg

அமரனுக்கு.......

ஒரு இராணுவ அஞ்சலி.

அச்சமில்லை அச்சமில்லை என்று கர்ஜிக்கும் மேஜர் முகுந்த் வரதராஜன். (கோப்பு)

படத்தைப் பற்றி ஒரு அறிமுகம்.... யூடியூப் வீடியோ.