தொடர்கள்
சினிமா விமரிசனம்
வேட்டையன் - ஜெர்மனியில் முதல் நாள் ஷோ

2024911215406291.jpeg

வேட்டையன் படம் முதல் நாள் முதல் காட்சி அதிலும் ஜெர்மனியில் எனும் போது வெளிநாட்டு ரசிகர்கள் ஆர்வம் எப்படி இருக்கும் என்று பார்ப்பது ரஜினி படத்தை காட்டிலும் ஆர்வம்.

ரஜினி என்று பெயர் போட்டதும் ஒரு கூச்சல். பின்னர் போலீஸ் உடையில் ரஜினி நடந்து வர உற்சாக ஆரவாரம்.

இனி வேட்டையன் படத்துக்குள் வருவோம்.

இந்த உற்சாகமெல்லாம் கொஞ்ச நேரம் தான். பின்னர் சத்தமே இல்லை. படம் முடியும் வரை.

வியட்நாம் வீடு 2 என்று பெயர் வைத்திருக்கிலாம். அல்லது தங்கப்பதக்கம் 2.

பேசுகிறார் பேசுகிறார் பேசுகிறார் ரஜினி பேசிக் கொண்டே இருக்கிறார்.

இந்த படத்திற்கு ரஜினி எதற்கு ?? ஏற்கனவே விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு எல்லோரும் காய வைத்த வடாம் தான் இந்த என்கெளண்டர் கதை.

ரஜினியிசம் என்று இல்லாதது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ரஜினி எதற்கு இந்த படத்திற்கு என்று புரியவேயில்லை. நீட்டை எதிர்க்க மறைமுகமாக ஒரு நாட் பயிற்சி கல்லூரி அது இது என்று ஏஏஏஏஏஎக நீளம்.

அனிருத்து ஒரு பாட்டுக்கு ரசிகர்களை ஆட வைத்து விட்டு ஆடியும் கொடுத்து விட்டு போகிறார். நம்மூர் இளைஞ இளைஞிகள் எல்லோரும் இந்த பாட்டை இன்னும் பத்து பதினைந்து நாட்கள் ஆடி விட்டு மறந்து விடுவார்கள் உத்திரவாதமாக. அப்படி ஒரு மியூசிக். மஞ்சு வாரியர் படத்தில் ஏதோ செய்வார் என்று பார்த்தால்..ஒரே ஒரு டான்ஸ் ஆட்டத்தோடு சரி.

பின்னணி இசை ஏக கூச்சல். ரஜினி வேட்டையன் என்றால் பெரிய வில்லனுடன் மோதினால் பரவாயில்லை. ஆனால் சில்லுண்டிகளுடனெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

30 வருடத்திற்கு முன் ஓகே. இப்போதெல்லாம் புத்திசாலித் தனத்தால் ஹீரோவா இருப்பது தான் டிரெண்ட்.

அமிதாபுக்கும் ஒரு பரிதாப ரோல்.

முதல் பாதி வேட்டையன் ஏதோ சொல்ல வருகிறார் என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

இரண்டாவது பகுதியில் என் பொண்டாட்டி கையில் காபியுடன் என்னை எழுப்பிய போது காலைல மணி எட்டு என்று ரோபோ ஷங்கர் திரும்ப திரும்ப சொல்வது போல நம்மை மயக்க கோமா நிலைக்கு கொண்டு போகிறார் ஞானவேல்.

எடிட்டருக்கு சம்பளம் கொடுக்க வில்லை போல. எப்படியோ போங்கடா என்று கத்திரி வைக்கவேயில்லை.

லாஜிக் ஓட்டை, இதெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம். சிவகார்த்திகேயனின் வேட்டைக்காரன் போல பேசியே கொல்கிறார்கள்.

அதான் படத்திற்கு பெரிய மைனஸ்.

வேட்டயன் வைத்த குறி வில்லன்களை அல்ல...

ரசிகர்களை.

சும்மா சொல்லக் கூடாது தியேட்டரில் இரை விழுகிறது.

ஏராள வெட்டுக்களுடன், தேவையில்லாத ஆணிகளை பிடிங்கினால், வேட்டையன் ரஜினிக்கு ஒரு வித்தியாசமான படமாக இருந்திருக்கும். ஹூம்.....