தொடர்கள்
பொது
ரத்தன் டாடா -ஜாசன்

2024911110340132.jpeg

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். டாட்டா தேசப்பற்றாளர் எல்லோரிடமும் பிரியம் காட்டக் கூடியவர். அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் செய்திகள் குவிகின்றன. அதில் எது நிஜம் எது உண்மைக்கு புறம்பானது என்று தெரியவில்லை. ஆனால் ரத்தன்டாடா அப்படி ஒரு இனிமையான ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்தார் என்பது மட்டும் நிஜம்.

ரத்தன் டாடா காதல் ஏன் கைகூடவில்லை? இப்படி ஒரு காரணம் இருக்கா?

தனது தொண்டு பணிகளுக்காகவும், எளிமையான வாழ்க்கை முறைக்காகவும் போற்றப்படும் ரத்தன் டாடா, தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ஒருமுறை பேசியிருந்தார்.

தொழில் முனைவோமட்டுமின்றி சாதாரண பொதுமக்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ரத்தன் டாடா. இளம் மிக இளம் வயதிலேயே டாடா குழும நிறுவனத்திற்கான பல்வேறு யோசனைகளை வழங்கினார். டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தாலும் அவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ரத்தன் டாடாவே ஒருமுறை பேசியிருந்தார். மேலும் தனது முதல் காதல் குறித்தும், தனக்கு நடைபெற இருந்த திருமணம் ஏன் நின்று போனது என்றும் பேசி உள்ளார்.

ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்?

ரத்தன் டாடா தனக்கு பல காதல் உறவுகள் இருந்ததாக வெளிப்படையாக பேசியிருந்தார், ஆனால் எந்த காதலும் திருமணத்தில் முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ நான் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். எனினும் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்ததால் அவரை பார்க்க நான் இந்தியா வந்துவிட்டேன். அப்போது தான் எனக்கும் அந்த பெண்ணிற்கும் இந்தியாவில் திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், இந்தியா-சீனா போர் வெடித்த பிறகு, அப்பெண்ணின் பெற்றோர் அவரை இந்தியாவுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை, இதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணமும் நடைபெறவில்லை.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரத்தன் டாடா, ஆனால் அதன் பிறகு தனக்கு வேறு காதல் உறவுகள் இருந்ததாகவும், எனது மனைவி இவர் தான் என்று நினைக்கும் அளவுக்கு நான் யாரையும் பார்க்கவில்லை. ஆனால் இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, நடந்த விஷயங்களுக்கான நான் ஒருபோதும் வருத்தப்பட்டது இல்லை” என்று கூறியிருந்தார்.

ரத்தன் டாடா சொன்ன 20 பொன்மொழிகள்:

"இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் சொந்த துருவே அதனை அழிக்கும். அதேபோல், யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது, ஆனால் அவர்களின் சொந்த மனநிலையால் முடியும்."

"அதிகாரமும் செல்வமும் ஆகிய இரண்டும் எனது முக்கிய பங்குகள் கிடையாது".

"வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடக்க வேண்டும். ஆனால் வெகுதூரம் நடக்க வேண்டும் என்றால் ஒன்றாக நடக்க வேண்டும்."

"மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து ஒரு கோட்டையை கட்ட அவற்றைப் பயன்படுத்துங்கள்."

"மிகவும் வெற்றி பெற்றவர்களை நான் பாராட்டுகிறேன். ஆனால் அந்த வெற்றியை அதிக இரக்கமின்மையால் அடைந்திருந்தால், நான் அந்த நபரை குறைவாகப் பாராட்டுவேன்."

"நாம் தொடர்ந்து பயணிக்க வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் மிகவும் முக்கியம், ஏனென்றால் ஈசிஜியில் கூட நேர் கோடு இருந்தால் நாம் உயிருடன் இல்லை."

பொருளாதாரம் ஒன்றும் இல்லை என்பதை ஒரு நாள் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் விரும்பும் மக்களின் நல்வாழ்வுதான் முக்கியம்."

"சிறந்த தலைவர்கள், தங்களை விட புத்திசாலிகள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் சுற்றி வருவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்."

"வேலை-வாழ்க்கை சமநிலையை நான் நம்பவில்லை. வேலை-வாழ்க்கை ஒருங்கிணைப்பை நான் நம்புகிறேன். உங்கள் வேலையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாகவும், நிறைவாகவும் ஆக்குங்கள், மேலும் அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்யும்."

"மிகப்பெரிய ரிஸ்க் என்பது எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பது தான். வேகமாக மாறிவரும் உலகில், தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரே உத்தி ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்."

"சவால்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருங்கள், ஏனென்றால் அவை வெற்றியின் ஒவ்வொரு கட்டமாகும்."

"மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளில் கருணை, பச்சாதாபம் மற்றும் இரக்கத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்."

"உனக்கு எப்போதுமே வசதியான வாழ்க்கை இருக்காது, உலகின் எல்லா பிரச்சனைகளையும் எப்போதும் தீர்க்க முடியாமல் போகலாம், ஆனால் உன்னுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாதே, ஏனென்றால் தைரியம் தொற்றக்கூடியது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது"

"தலைமை என்பது பொறுப்பை ஏற்றுக்கொள்வது காரணங்களை கூறுவது அல்ல"

"உங்களுக்கு வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காதீர்கள், உங்கள் சொந்த வாய்ப்புகளை உருவாக்குங்கள்."

"இந்தியாவின் எதிர்காலத் திறனைப் பற்றி நான் எப்போதும் மிகுந்த நம்பிக்கையுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இருக்கிறேன். இது ஒரு சிறந்த ஆற்றல் கொண்ட நாடு என்று நான் நினைக்கிறேன்."

"மக்கள் இன்னும் தாங்கள் படிப்பதை உண்மை என்று நம்புகிறார்கள்."

"சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்."

"பெரிய தாக்கத்த ஏற்படுத்திய ஒருவரை நான் பின்தொடர்ந்தேன். அவர் எனக்கு ஒரு பெரிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றார், நான் அந்த மரபைப் பின்பற்ற முயற்சித்தேன்."

"நான் நிச்சயமாக டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகளை விற்க மாட்டேன் , நான் எவ்வளவு விமர்சித்தாலும் விற்க மாட்டேன்."

பெரும் தொழிலதிபர் என்றாலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வானுலகம் சென்றுவிட்டார் ரத்தன் டாடா.