தொடர்கள்
அரசியல்
பாஜக பக்கம் சாய்கிறதா திமுக?- விகடகவியார்

2024911111047592.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "ஒரு முக்கியமான செய்தியை உம்மிடம் சொல்ல மறந்து விட்டேன் ஸாரி அதனால் தான் மீண்டும் வந்தேன்" என்று சொல்லி அமர்ந்ததும் "ஸாரி எல்லாம் பெரிய வார்த்தை விஷயத்தை சொல்லும் "என்று நாம் சொன்னதும் "போன மாதம் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமர் அமெரிக்காவுக்கு போவதற்கு முன் பிரதமரை சந்திக்க விரும்பினார். முதல்வர் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா போய் விட்டு வந்ததும் சந்திக்கிறேன் என்று முதல்வர் சந்திப்பை பிரதமர் தான் தள்ளி வைத்தார்.

அமெரிக்காவிலிருந்து பிரதமர் வந்ததும் முதல்வர் சந்திப்பு நடந்தது. எப்போதும் 15 நிமிடம் அல்லது 10 நிமிடம் தான் பிரதமர் முதல்வர் சந்திப்பு இருக்கும். இந்த முறை 45 நிமிடம் பேசினார்கள். இதை நான் சொல்லவில்லை முதல்வரே பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நிருபர்களின் பேட்டியில் சொன்னார். பேச்சுவார்த்தை சுமுகம் தானே என்று கேட்டபோது, அவர் பிரதமராக பேசினார் நான் முதல்வராக பேசினேன் என்று பதில் சொன்னார்.

அதற்குப் பின்பு நடந்த விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் "என்று பொடி வைத்து பேசினார் என்றார் விகடகவியார்.

"அதெல்லாம் நீர் தான் சொல்ல வேண்டும் "என்று நாம் சொன்னதும் இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர், செந்தில் பாலாஜி ஜாமின் இதெல்லாம் தான்" என்று சொன்ன விகடகவியார் இதைவிட முக்கியம் இன்னொரு விஷயம் என்றார்.

"நாம் அந்த இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியது தானே "நாம் கேட்க "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி தந்தது தான். அமைச்சரவை ஒப்புதல்.

இந்த திட்டம் நீண்ட நாட்களாக மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. இப்போதைக்கு அனுமதி கிடையாது என்று ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய நிதி அமைச்சகம் சொன்னது. இப்போது ஒப்புதல் அதுமட்டுமல்ல நிதி ஒதுக்கீடு உள்பட எல்லா விஷயத்தையும் ஒரே நாளில் முடித்து விட்டார்கள்.

அவ்வளவு வேகமாக மெட்ரோ இரண்டு கோப்பு சுறுசுறுப்பானது. மெட்ரோ 2 அனுமதிக்கு இரண்டு மூன்று துறைகளில் அனுமதி தேவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் அவர் அரியானாவில் தேர்தலில் பிஸியாக இருந்தார் ஆனால் நிதியமைச்சரிடம் பிரதமர் ஒரு நாளில் ஒப்புதல் என்ற செய்தி தமிழகத்துக்கு போய் சேர வேண்டும் என்று கிட்டத்தட்ட உத்தரவு மாதிரி போட்டார்.

அதன் பிறகு எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்தது நிர்மலா சீதாராமன் தான். அதன் பிறகு எல்லோரும் நன்றி என்று சொன்னார்கள் என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

ஆனால் இதையெல்லாம் வேறு மாதிரி சந்தேகக்கண்ணுடன் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. முதலில் முடியாது என்றது பாஜக இப்போது அவசர அவசரமாக ஒப்புதல் இதில் ஏதோ அரசியல் இருக்கிறது என்று சந்தேக படுகிறது. திமுக பவள விழாவில் பாஜகவை உள்ளே விடக்கூடாது என்று பேசினார் முதல்வர். ஆனால், கருணாநிதியின் நூற்றாண்டு விழா நாணயம் வெளியீடு விழாவில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டார். பிரதமரும் கருணாநிதியை புகழ்ந்து வாழ்த்து செய்தி சொன்னார். இது எல்லாம் அரசியல் விமர்சகர்கள் கூட்டி கழித்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் "என்றார் விகடகவியார்.

"சரி உமது கணக்கு என்ன அதை சொல்லும் "என்றோம் .

எப்படிப் பார்த்தாலும் இது பாஜகவுக்கு தான் பிளஸ் காங்கிரஸ் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி விட்டது.

திமுகவும் அமலாக்கத் துறையை அமைதியாக்கி விட்டோம் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். "இது போதாதா என்று சொல்லி சிரிக்க...

அப்போது ஆபீஸ் பையன் நினைவாற்றலை அதிகரிக்க வல்லாரை சூப் சாப்பிடுங்கள் என்று சூடாக கொடுக்க....

இவருக்கு இந்த முறை தீபாவளி போனஸ் கூடுதலாக தாருங்கள் " என்று ஆபீஸ் பையனை தட்டிக் கொடுத்து விட்டு புறப்பட்டார் விகடகவியார்.