தொடர்கள்
கதை
கடவுள் இருக்கான் குமாரு மதுராந்தகம் முனைவர் -என்.பத்ரி

2024911190800969.jpeg

சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவும்போது கண்ணாடியில் தன் முகத்தை
பார்த்தான் குமார். அவன் சட்டையின் மேல் பட்டன் பஸ்ஸில் கூட்ட நெரிசலில்
அறுந்து விட்டிருந்தது.சட்டை மேல் பட்டன் இல்லாமல் ரவுடியைப் போல் காட்சி
தந்தான். இப்படியே இன்டர்வியூக்கு சென்றால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை.நன்றாக டிரஸ் பண்ணிக் கொண்டு போனாலே இண்டர்வூயூ சொதப்பி
விடுகிறது.இப்படிப் போனால் கேட்கவே வேண்டாம்.’பேசாமல் வீடு
திரும்பிவிடலாமா‘என எண்ணினான்.இண்டர்வியூ வருவதே எப்போதோ ஒரு
முறைதான்.இதில் ஒரு வேளை,வேலை கிடைத்துவிட்டால்.மனம்
போராடியது.நடந்ததை நினைத்து பார்த்தான்.

அன்று திங்கள் கிழமை.காலை 9 மணி இருக்கும். குமார் டவுன் பஸ்ல இருந்து
கூட்டத்தை கிழித்துக்கொண்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான்.அன்று அவனுக்கு ஒரு ஆபீசில் இன்டர்வியூ. காலை 10 மணிக்கு இண்டர்வுயூ. இன்னும் காலைச்சாப்பாடே சாப்பிடவில்லை. இண்டர்வுயூக்கு போவதற்கு முன்னால் ரெண்டு இட்லியாவது சாப்பிட்டுட்டு போகணும்னு எண்ணி, ஹோட்டலுக்கு போனான்.போய் இரண்டு இட்லி சாப்பிட்டான். பின்னால் வந்த கார் ஒன்று ஹார்ன் அடிக்க,மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினான்.

’இன்டர்வியூவின் போது தன் எண்ணமெல்லாம் பட்டன் மேல்தான்
இருக்கும்.இண்டர்வியூவ சரியா பண்ண முடியாது.இதற்கு முதலில் தீர்வு காண
வேண்டும்’ன்னு நெனச்சான்.

அது சென்னையில் ஒரு ஹைடெக் பகுதி. வணிகர்கள் அதிகம் வாழும்
பகுதி.எந்த கடையும் இதுவரை திறக்கவில்லை.எங்கோ ஓரிரு இடங்களில் ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன.’எங்கேயாவது தையல் கடை இருக்கிறதா?’ என்று தேடிப்பார்த்தான். சோதனையாக ஒன்று கூட இல்லை.

அப்போதுதான் ஒரு துணிக்கடை திறந்தாங்கா.தயங்கித்,தயங்கி உள்ளே
போனான்.அந்த ஓனர் இவனைக் கண்டுக்கவே இல்ல.ஷோகேஸில் இவன் அளவு
சட்டையின் விலையைப் பார்த்தான்.2 சட்டை 2999 ரூபாய்.ஒன்னு வாங்கினால்
ஒன்னு இலவசம்.வேலை கெடைச்சாதான் இத வாங்க முடியும்.மெதுவாக தன்
இயலாமையை நொந்து கொண்டு, சர்ரென்று வெளியே வந்தவனை கடை முதலாளி
ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டு இருந்தார்.காதில் முழுவதுமாக வாங்கிக் கொள்ளாமல், வெளியே வந்த குமார் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

வழியில் இருந்த ஒரு பார்க்கில் போய் உட்கார்ந்தான். குப்பைக்காரன்
குப்பைகளை அள்ளி வண்டியில் ஏற்றிக் கொண்ருந்தான்.அதில் கிழியாத ஒரு சட்டை தென்பட்டது.குப்பைகாரன் பார்வைபடாமல் அதை சுட்டுவிட்டான். முதல்நாள் பார்க்குக்கு விளையாட வந்த குழந்தை விட்டுவிட்டு போன ட்ரஸ் போல இருக்கு.அந்த குழந்தையை மனமாற வாழ்த்தினான்.பட்டன் ஓரளவு அவன் சட்டை கலர்லேயே இருந்தது. அவனுக்கு பாதி கவலை போயிடுச்சு.

அந்த பார்க்கிலேயே, பெருக்கற பாட்டி ஒருத்தர் இருந்தாங்க.அவங்க
முன்னால பரிதாபமா போய் நிந்தான்.நெலைமையைச் சொன்னான். ’பட்டன் தைக்கற வயசா இது’ ன்னு சொல்லிக் கொண்டே அவங்க தன்கிட்ட இருந்த ஊசி ,நூல அவன்கிட்ட தந்தாங்கா. தனக்குத் தெரிந்த தையல்கலையை வைத்துக் கொண்டு பட்டனை தைத்து விட்டான்.மனதில் வேலையே கிடைத்துவிட்ட பூரிப்பு.அந்த பாட்டியிடமே, ’நல்லா தைச்சுருக்கேனா பாட்டி?’என்றான். அரை குறை கண்ணாலேயெ பார்த்த பாட்டி ‘ராஜாவாட்டம் இருக்க.நீபோற வேலை
கெலிச்சிடும்’என்றாள் தன் பொக்கைவாயால். தன் இறந்து போன அம்மாவே வந்து வாழ்த்தியது போல் இருந்தது குமாருக்கு.

மணியை பார்த்தான். பத்தாகி விட்டிருந்தது. அவன் ஆபீஸ் உள்ளே
போவதற்கும்,இவன் பேரை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.சினிமாவில்
மட்டும்தான் இப்படி நடக்குமா?

இண்டர்வூயுவல செலக்ட் ஆன குமாரு நேரா பாட்டிக்கிட்ட போய்,’
தேன்க்ஸ்’ சொன்னான்.பாட்டிக்கு போன வருடம் இறந்து போன அவளது பேரனின்
நினைவு வந்தது. கண்ணின் ஓரம் கசிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள்.’அம்மாவிடம் போய் சொல்’என்றாள்.குமார் இப்ப அம்மாகிட்டதான சொல்லிட்டு இருக்கேன்”என்றான்.உண்மையை புரிந்து கொண்ட பாட்டி தன் பேரன் தன்னிடமே திரும்ப வந்து விட்டதை உணர்ந்தாள். ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டை நோக்கி புறப்பட்டான் குமார்.