சமாளிக்க முடியாத கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் கனிமொழி எம்பி.
அக்கா இது கட்சி கூட்டத்திற்கு உண்டா !!
எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்த பவன் கல்யாண்.
ஆந்திர துணை முதல்வர், தமிழ்நாடு துணை முதல்வரை கடுப்பேற்றுகிறார் இதான் விஷயம் !!
சாமானியனின் தரம் உயர போகிறது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
எதுக்கு வரி போடப் போறாங்கன்னு தெரியலையே ?
வனங்களை பாதுகாத்தால் இயற்கை வளத்தை பாதுகாக்கலாம் அமைச்சர் பொன்முடி.
பாட புத்தகம் நுழைவுத் தேர்வு பட்டமளிப்பு பொறியியல் கல்லூரி இப்படிப் பேசிக் கொண்டிருந்தவர் இப்ப மரம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் பாவம !!
மாநாட்டை சிறப்பாக நடத்தி கேலி செய்பவர்களுக்கு பதிலடி தருவோம் நடிகர் விஜய்.
எத்தனை பேருக்கு வேலை போக போகுதோ தெரியலையே ?
தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அன்புமணி ராமதாஸ்.
முதல்வர் அமெரிக்கா போய் முதலீடு எல்லாம் வாங்கிட்டு வந்தாருன்னு சொன்னாங்க !!
துறவிகளுக்கு பாரத ரத்னா அளிக்க கோரிக்கை.
நல்ல யோசனை எதிர்க்கட்சிகளை கடுப்பேற்ற !!
ஐநா ஒரு 'பழைய 'நிறுவனம் அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.
வாஸ்தவம் தாங்க !!
கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அரசு ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர்.
அதாவது தேர்தல் வரும் வரை அப்படித்தானே ஆபிஸர் !!
மேற்கு வங்க அரசின் செயல் திறன் குறைவால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு ஆளுநர் குற்றச்சாட்டு.
மம்தா அக்காவுக்கு கட்டம் சரியில்ல போல இருக்கு நல்ல ஜோசியரை பாக்கணும் !!
திமுக போல் இரட்டை வேடம் போடும் நடிகர் விஜய், தமிழிசை விமர்சனம்.
இவங்களும் பாதிக்கப்பட்டவங்க போல தெரியுது !!
விடுதலை சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது டாக்டர் ராமதாஸ்.
ஆல்கஹால் பற்றி எல்லாம் விவரமா சொன்னாங்களே !!
மாநில அரசால் மதுவை ஒழிக்க முடியாது அமைச்சர் ரகுபதி.
ஆமா கட்சிக்காரங்க கோவிச்சுப்பாங்க !!
ஈர்ப்பு கொண்ட தலைவராக என் கண்ணுக்குத் தெரிகிறார் விஜய் நாஞ்சில் சம்பத்.
ஏற்கனவே துண்டு போட்டு வச்சிருக்கார் போல தெரியுது !!
சென்னையில் தாழ்வான பகுதிகளில் படகுகள் நிறுத்தம்
அடுத்த படகு ரேஸ் போல இருக்கு !!
கருணாநிதி வழியில் வாழ்பவன் நான் முதல்வர் ஸ்டாலின்.
அதுதான் எல்லோருக்கும் தெரியுமே ?
சட்டப்பேரவை பணிகளை இப்போதே தொடங்குங்கள் கட்சியினருக்கு உதயநிதி அறிவுறுத்தல்.
இப்பவே பண பட்டுவாடா பண்ண சொல்றரா !!
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற நூறாவது நாள் செல்வப் பெருந்தகை அறிக்கை.
இப்ப இதெல்லாம் கூட கொண்டாடணுமா !!
மக்களை பிளவுபடுத்த மட்டுமே தெரிந்த காங்கிரஸ் கட்சியை நக்சல்கள் இயக்குகிறார்கள் பிரதமர் மோடி.
அப்போ என்கவுண்டர் நிச்சயம் !!
Leave a comment
Upload