விகடகவியார் உள்ளே நுழைந்ததும் அவருக்கு தேங்காய் இஞ்சி கருவேப்பிலை போட்ட வேர்க்கடலை சுண்டலை ஆபீஸ் பையன் தொன்னையில் கொண்டு வந்து வைக்க ஆபீஸ் பையனுக்கு கண்ணால் தேங்க்ஸ் சொன்னார் விகடகவியார்.
வேர்க்கடலை சுண்டலை சாப்பிட்டுக் கொண்டே "விஜயின் டார்கெட் திமுக தான் போல் தெரிகிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் இறந்து போன விஷயத்தில் நிர்வாக சீர்கேடு என்று அறிக்கை வெளியிட்டார். இதேபோல் மாநாடு விஷயத்தில் ஏற்பாடுகளை தினந்தோறும் விசாரித்து வருகிறார். மாநாட்டுக்கான கால் கோள் விழாவின் போது 700 வாகனங்கள் 3000 பேர் கூடினார்கள். அப்படி என்றால் மாநாட்டுக்கு எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டது திமுக என்றார் விகடகவியார்.
" உமது கணக்கு என்ன மாநாடு பற்றி ?"அதை சொல்லுங்கள் என்றோம். சேலத்தில் இளைஞர் அணி மாநாடு என்று உதயநிதி ஸ்டாலின் கூட்டிய கூட்டம் அதைவிட அதிகம் இந்த மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதுதான் விஜயின் திட்டம். அதற்கான வேலையில் இறங்கி விட்டார்" என்றார். "சரி உதயநிதி ஸ்டாலின் கூட்டிய இளைஞரணி மாநாட்டில் ஒரு லட்சம் பேர் தானே கூடினார்கள் "என்றோம். நாம் "எண்ணிக்கை எல்லாம் அப்போது திமுக சொல்லவில்லை பெரும் கூட்டம் என்று மட்டும் சொன்னது விஜய் பொருத்தவரை இரண்டு லட்சம் பேர் கூட வேண்டும் அதைவிட எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக நிறைய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் "என்றார் விகடகவியார்.
"மருத்துவ வசதி, டாய்லெட், குடிநீர் மற்றும் 2000 தனியார் பாதுகாப்பு படை ஊழியர்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குப் படுத்துவது என்று எல்லாம் பார்த்து பார்த்து செய்து வருகிறார் விஜய். ஆனால் மாநாடு வெற்றி பெறக் கூடாது என்பதில் விடுதலை சிறுத்தை கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தீவிரம் காட்டுகிறது. இந்த இரண்டு கட்சியிலும் விஜய் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை மாநாட்டுக்கு போகக்கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறது இரண்டு கட்சியின் தலைமை" என்றார் விகடகவியார்.
" திமுக இந்த மாநாட்டை எப்படி பார்க்கிறது "என்று கேட்டோம். மாநாட்டு ஏற்பாடுகளை கண்காணிக்க ஒரு குழு, விஜய் என்ன திட்டம் வைத்து இருக்கிறார் என்பதை கண்காணிக்க ஒரு குழு என்று மானிட்டர் பண்ணுகிறது. திமுக தலைமை பொறுத்தவரை 2021 தேர்தலில் நமக்கு இடைஞ்சலாக இருந்தவர் ரஜினிகாந்த். கட்சி ஆரம்பிக்கப் போகிறோம் என்று மிரட்டி கொண்டு இருந்தவரை எப்படியோ சரி செய்து விட்டோம்.
இப்போது இவரை எப்படி சமாளிப்பது என்பதுதான் அறிவாலயத்தில் இப்போது பேசுபொருள். இதற்காக பிரகாஷ்ராஜிடம் பேசி வருகிறார்கள். அதன் முதல் கட்டம் தான் திருச்சி சிவா புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பிரகாஷ்ராஜ் பேசியது. தேர்தல் பிரச்சாரத்திற்கு குறிப்பாக விஜய்க்கு எதிராக இவரை பயன்படுத்துவது என்று வியூகம் அமைக்க திமுக திட்டமிட ஆரம்பித்து விட்டது" என்றார் விகடகவியார். "செல்லம் செல்லம் என்று கொஞ்சிக் கொண்டிருந்தவர் இப்போது வில்லன் ஆகிவிட்டாரா "என்று கேட்டபோது படத்திலும் அவர் வில்லனாகத்தான் இருந்தார். இப்போது அரசியலிலும் விஜய்க்கு வில்லன் பிரகாஷ்ராஜ் தான் போல் தெரிகிறது.
" ஓபிஎஸ் ஏதோ டெல்லியில் முகாம் பாஜகவில் சேரப் போகிறார் என்றெல்லாம் செய்தி வருகிறதே" என்றோம் நான் என்னுடைய சோர்ஸ் மூலம் ஓபிஎஸ் இடம் பேச சொன்னேன். அவர் பேசிவிட்டு என்னிடம் சொன்னது அதெல்லாம் இல்லை நான் என் பேரப்பிள்ளைகளுடன் ஷாப்பிங் வந்திருக்கிறேன். என் மகனுக்கு கொஞ்சம் சிகிச்சை வேலை நடக்கிறது என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டார் என்கிறார் அவர் என்றார் விகடகவியார்.
" பாட்டாளி மக்கள் கட்சி விஷயத்துக்கு வாரும் என்றதும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என்றாலும் இப்போதும் அந்த கட்சியில் ஆக்டிவாக செயல்படுவது மருத்துவர் அய்யா தான் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதேபோல் கட்சியிலும் களையெடுப்பு வேலைகளை செய்து வருகிறார். 14 மாவட்டச் செயலாளர் மாற்றி இருக்கிறார் மருத்துவர் ஐயா. இவற்றைக்கெல்லாம் அன்புமணி ஒப்புதல் இல்லாமல் நடக்கிறது. தவிர கட்சிக்காரர்களிடம் ஜிகே மணியை ஒதுக்காதீர்கள் அவரை கூட்டத்துக்கு எல்லாம் அழையுங்கள் என்று வேறு சொல்லி வருகிறார் டாக்டர் ராமதாஸ்"என்றார். "அப்போது சின்ன அய்யா என்னதான் செய்கிறார்" என்று நாம் கேட்டதும் "அவரும் ஏதோ அறிக்கை எல்லாம் விட்டுக் கொண்டு சும்மா இருக்கிறார்" என்று சிரித்த படியே கிளம்பினார் விகடகவியார்.
Leave a comment
Upload