தொடர்கள்
கதை
உயிர்ச்சொல் - பா.அய்யாசாமி

20240807085114458.jpeg
ஏண்ணா! நல்லா தூங்கினேளா இல்லையா? ராத்திரி பூரா ஹிந்தி CA topper web series ஓடிண்டேயிருந்தது, தூங்கி வழிந்தேள் என ருக்கு கேட்டதும்,

அதை வச்சு என்னைய இனி ரேக்கிண்டே யிருப்பாய்! எல்லாம் என் லிபி. காபிய கொடு! என்று அடுக்களைக்கு அனுப்பி வைத்தார் அய்யாசாமி.

மாமி..மாமி! அம்மா கொஞ்சம் காபித்தூள் வாங்கிண்டு வரச் சொன்னாள் மதியம் திரும்பத்தருவதாகச் சொன்னாள் என்று வந்த அபிராமி என்கிற அபிக்கு வயது இருபத்தொன்றுஆகிறது, கல்லூரி முடித்து காத்திண்டிருக்கிறது கல்யாணத்திற்கு.

வாம்மா குழந்தை! என்ன ஆளையேப் பார்க்க முடியறதில்லை, உட்கார்ந்துக்கோ! என்னசெய்கிறாய்?
என்று காபிபொடியைக் கொடுத்தபடி கேட்டாள் ருக்கு.

சும்மாதானிருக்கேன் மாமி,அம்மாதான் வேலைக்கு போகப்படாது, யார்கிட்டேயும்பேசப்படாது என ஒரே கண்டிசன். எனக்கு வேலைக்குப் போகணும் வசதியாக வாழனும்னுஎனக்கு ஆசை, இருக்ககூடாதா? எங்கப்பா இருந்திருந்தால் என்னை இப்படிவிட்டிருப்பாரா? அம்மா வாழ்கையிலே கஷ்டப்பட்டதால நானும் கஷ்டப்படனும்னுநினைக்கிறாள் போல என சட்டியில் போட்ட கறிவேப்பிலையாய் பொறிந்துத்தள்ளினாள்அபிராமி.

அவர்களின் குடும்பச்சூழ்நிலையை நன்கு புரிந்து வைத்திருந்த ருக்கு, அபி! காபி பொடியகொடுத்துவிட்டு வா! நாம பொறுமையாகப் பேசலாம் என அனுப்பி வைத்தாள் ருக்கு.

இன்றைக்கு கண்டென்ட் கிடைச்சிடுத்து ருக்குவிற்கு, நாம நைஸாக மாடிக்கு போய் OTT பார்ப்போம் என நழுவிய அய்யாசாமியை,

“ சாமி எங்கே மலையேறது? காலைக்கு என்ன சமைக்கனும்னு சொல்லிட்டுப்போங்கோ, அப்புறம் இது ஓட்டை அது நொல்லைனு சொல்லுவேள் என்றதும், இனிவாயைத்திறக்கிறது சாப்பிட மட்டுந்தான் என்றபடி அய்யாசாமி மாடிக்குப் போனார்.

வா அபி! நீ வரமாட்டாய் என நினைத்தேன், வந்துட்டியே! என்ன மாமி நீங்கள் கூப்பிட்டுநான் வாராமல் இருப்பேனா?

இல்லடியம்மா!இந்த காலத்துக் குழந்தைகளுக்குதான் அட்வைஸே பிடிக்கிறதில்லையே!வா! நாம ஆஸ்ரமம் வரைக்கும் போய் வரலாம்.

'ஸ்ரீ ஆஸ்ரமம்' போர்டு இருவரையும் "ஹோண்டா ஆக்டிவாவோடு"
வரவேற்றது. அடிக்கடி ருக்கு வருவதால் நிர்வாகி அவர்களை வரவேற்று அலுவலகத்தில்அமரவைத்தார்கள்.
அபியை அங்கியிருந்த இருவரிடம் அழைத்துச் சென்றாள் ருக்கு.

அபி! இந்த குழந்தையின் பெயர் அகிலா,அம்மா காலமாயிட்டாள்.
அப்பா வேற ஒருத்தியோட காணாமல் போயிட்டார். அகிலா குழந்தையாகஇருக்கும்போதே நான்தான் இங்கு சேர்த்துவிட்டேன் இப்போது பத்தாம் வகுப்புபடிக்கின்றாள்,நல்லாவே படிக்கின்றாள் என்ற ருக்கு, இந்தக் குழந்தையின் பெயர்பார்வதி,பெயரே நான்தான் வைத்தேன், ஏனென்றால் அவளாலே இந்த உலகத்தைப்பார்க்கவே முடியாது, அதனால் இவளை கைக்குழந்தையாக இருக்கும் பொழுதே இங்கேவிட்டுட்டுப் போய்ட்டாங்க. இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு சிறப்புப் பள்ளியில்படிக்கின்றாள் என அறிமுகப்படுத்தி வைத்தாள் ருக்கு.

பாவம் மாமி இவர்கள், என வருத்தம் தெரிவித்த அபியிடம்,அவர்கள் மீதுபரிதாபப்படாதே, அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சி்செய் என்று கூறி, அவர்களிடம்பேசிண்டிரு நான் போய் நிர்வாகியிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று நகர்ந்தாள் ருக்கு.

பொதுவான விசயங்கள் பேசிக்கொண்டேயிருந்தனர், உங்கள் வீட்டில் யாரெல்லாம்இருக்கிறார்கள் என அபியிடம் அகிலா கேட்க,

தானும் தன் அம்மாவும்தான் இருக்கின்றோம்,அப்பா தன் சிறு வயதினிலே இறந்து விட்டார்என்றாள் அபி.

உங்கம்மா எப்படி உங்ககிட்டே பாசமாக இருப்பாங்களா? என்ற அகிலாவின் கேள்விக்குஎன்ன பதில் சொல்வது என யோசித்த அபி, அன்பாதான் இருந்தாங்க, அப்பாஇல்லாததால், நிறைய வேலைகள் செய்து கஷட்டப்பட்டதினாலே ரொம்ப கண்டிப்பாஇருப்பாங்க,ஏதையாவது குற்றம் குறை சொல்லிகிட்டே இருப்பாங்க என்றாள் அபி.

அம்மாவா?! அவங்க எப்படியிருப்பாங்க
என்ற பார்வதியின் ஒரு கேள்வி இருவரையும் உலுக்கியது.

"நீங்களாவது பார்த்திருக்கீங்க! நான் அது கூட இல்லை என்று எங்கோ பார்த்து சொன்னபார்வதியின் தோளைத்தொட்டு் தோளில் சாய்த்துக் கொண்ட பேசினாள் அங்கு வந்தருக்கு,

"அம்மா என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல அது உயர்ச்சொல், இல்லாதவர்க்கே அதன்அருமை தெரிகிறது, எத்தனை துன்பங்களை நாம் உலகில் எதிர்க் கொண்டாலும்மனத்தை உடனே லேசாக்கிடும் தாயின் மடி என்ற ருக்கு,

கண்கலங்கி நின்ற அபியை வா போகலாம் என அழைத்துப்போனாள்.

சாரி மாமி. நான் அம்மாவை தப்பாக நினைத்துவிட்டேன்,
இனி கூடுதல் அன்பாக இருப்பேன் என்றவளை, அன்பாக இருப்பதை விட நல்லபுரிதலோடு இருப்பதும், அவளை வார்த்தைகளால் காயப்படுத்தாமல் இருப்பதுந்தான் நீசெய்யவேண்டியது,
ஒரு தனி மனுஷியாக உன்னைப் போராடி வளர்த்து வந்தவள், உனக்கு திருமணமான பின்அவளின் நிலையை யோசித்தாயா? யாரை அவள் திட்டுவாள்,ஏன் பேசக்கூடஆளில்லாமல் தனிமரமாக இருப்பாளே அதை நினைத்தாவது அவளோடு இருக்கும்வரை நீஅரவணைப்பாக இருக்கவேண்டாமா? என்று ருக்கு கேட்டதும் தெளிவை ஏற்படுத்தியதுஅபிக்கு.

ருக்கு அபி எங்கே? - அய்யாசாமி

அவளை அவா ஆத்தில் இறக்கி விட்டுட்டேன்னா..

இறக்கி விட்டியா? நல்லா ஏத்திதானே விட்டிருப்பே நீ ! என்றார் அய்யாசாமி.
என்ன சிலேடையா! ம்..ம்.

சாப்பிட்டேளா? வர லேட்டாகும் போலத் தெரிந்தது, ரசமும், உருளைக்கறியும் கொடுத்துவிடுங்கோனு அபி அம்மாகிட்டே சொல்லியிருந்தேனே! வந்ததா?

சாப்பிட்டேன், எங்கேயிருந்தாலும் உன் தாய்மைக்குணம் இருக்கே! அட! ஒன்றும்சொல்றத்துக்கேயில்லே போ! என்று புகழ்ந்தார் அய்யாசாமி.