ஜப்பான் நாட்டின் ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர், 21 வயதான ரின் தகாஹதா. இவருக்குத் தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தனது ‘ஃபேமலி ட்ரீ’யை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏற்கெனவே பாதி ஃபேமலி ட்ரீயை ரின் வரைந்துவிட்டார். மேலும் இவர், ஜப்பானிய தாய் சச்சியே தகாஹதாவுக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுக்பால் சிங் என்பவருக்கும் மகனாகப் பிறந்துள்ளார். ரின்னுக்கு ஒரு வயதாக இருந்தபோது, சுக்பால் சிங்கிடம் இருந்து ஜப்பானிய தாய் விவாகரத்து பெற்றுள்ளார்.
இதுபற்றிய விவரங்கள் சிறுவனான ரின்னுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஜப்பானிய மனைவியை விவாகரத்து செய்தபின், பஞ்சாப்பில் சுக்பால் சிங் செட்டிலாகி, அங்கு இரண்டாவதாக குர்விந்தர்ஜித் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளுடன் அமிர்தசரஸில் குடும்பமாக வசித்து வந்துள்ளார். தற்போது 20 வயது நிரம்பிய ரின் தகாஹதா, தனது இந்திய தந்தை குறித்து ஜப்பானிய தாய் சச்சியே தகாஹதாவிடம் கேட்டிருக்கிறார். தாயும், ரின்னிடம் அவரது இந்திய தந்தையின் பழைய புகைப்படம் மற்றும் முகவரியைத் பகிர்ந்துள்ளார்.
அந்த இந்திய தந்தையின் பழைய புகைப்படம் மற்றும் முகவரியை எடுத்துக் கொண்டு, ஜப்பானில் இருந்து கிளம்பி, கடந்த மாதம் 18-ம் தேதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்கு ஜப்பானிய மகன் ரின் தகாஹதா வந்திறங்கியுள்ளார். அப்போது ரின்னிடம் இந்திய தந்தை சுக்பால் சிங் வசித்த பதேகர் சூரியன் சாலையின் பழைய முகவரி மட்டுமே இருந்திருக்கிறது. அங்கு தேடியபோது, அதில் இந்திய தந்தை இல்லை என்பதும், அவர் அங்கிருந்து புதிய முகவரியான லோஹர்கா சாலைக்கு மாறியிருப்பதும் தெரியவந்தது.
அந்த முகவரியையும் ஜப்பானிய மகன் ரின் தகாஹதா விடாப்பிடியாகத் தேடி கண்டுபிடித்துவிட்டார்! தனது தந்தையையும் 2-வது தாய்க்கு பிறந்த ஒன்றுவிட்ட சகோதரி அவ்லீன் கவுரையும் ஜப்பானிய மகன் ரின் தகாஹதா நேரில் பார்த்துள்ளார். உள்ளே சென்றபோது, ரின்னுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது வயதான இந்திய தந்தை சுக்பால் சிங்கை, இளவயது ஜப்பானிய மகன் ரின் தகாஹதா அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்.
எனினும், அவரது தந்தையால், ஒரு வயதில் விட்டு பிரிந்த ஜப்பானிய மகன் ரின் தகாஹதாவை, 21 வயது வாலிபனாக வந்தபோது தந்தை சுக்பால் சிங்கால் அடையாளம் கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, தான் கையோடு கொண்டு சென்ற குரூப் புகைப்படத்தை தந்தையிடம் ரின் காட்டியுள்ளார். அதில், ஜப்பானிய மனைவி சச்சியே தகாஹதா மற்றும் ஒரு வயது மகன் ரின்னை கையில் தூக்கி வைத்திருப்பதைப் பார்த்ததும் சுக்பால் சிங்குக்கு மகிழ்ச்சியில் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகியது.
இதுகுறித்து தந்தை சுக்பால் சிங் கூறுகையில், “என் வாழ்க்கையில் இப்படியொரு திருப்பம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை!” என்று கண்கலங்குகிறார். தற்போது சுக்பால் சிங்கின் 2-வது மனைவி குர்விந்தர்ஜித் கவுர், அவரது மகள் அவ்லீன் கவுர் ஆகிய இருவரும் சுக்பால் சிங்கின் முதல் மனைவிக்கு பிறந்த ஜப்பானிய மகன் ரின் தகாஹதாவை, தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்பிறகு ரின் தகாஹதாவை சுக்பால் சிங்கின் குடும்பத்தினர் பொற்கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பான தகவலறிந்ததும் ஜப்பானிய தாயும் சந்தோஷம் அடைந்துள்ளார்.
நல்ல வேளையாக ரின் தகாஹதா தன்னுடைய குடும்ப பாட்டு என்று அவர் அம்மா சொல்லிக் கொடுத்து அதை பஞ்சாபில் பஜாரில் பாடி அப்பாவை கண்டு பிடித்தார் என்றெல்லாம் செய்தி இருக்குமோ என்று ஒரு பயம் இருந்தது.
எப்படியும் இந்த செய்தி வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு ஒரு ப்ளாட்டாக உதவும்.
Leave a comment
Upload