தொடர்கள்
ஆன்மீகம்
பெண்களே நடத்திய கும்பாபிஷேகம் - மாலா ஶ்ரீ

20240807081655403.jpeg

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை அமைப்பு மற்றும் உலகளாவிய ஆசீவக தமிழ் சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவிந்தை ஞானபீடம் சார்பில், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருபுவனம், இந்திரா நகரில் ஆதிசக்தி ஞானபீடம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இக்கோயிலில் ஆதிசக்தி ஞானபீடம், விநாயகர், முருகன், வாலைக்குமாரி, பதினெண் சித்தர்கள், ஸ்ரீலஸ்ரீ மூட்டை சுவாமிகள் அருள்கூடங்களின் கும்பாபிஷேகம் நேற்று (6-ம் தேதி) காலை மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சிக்கு ஆசீவக தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் முன்னிலை வகித்தார்.

இக்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 4-ம் தேதி மாலை முதல் கால யாக பூஜையில், தமிழில் வேத மந்திரங்களை ஓதி ஏராளமான பெண்கள் மிகச் சிறப்பாக நடத்தினர். இதைத் தொடர்ந்து, மறுநாளும் பல்வேறு யாக, ஹோம பூஜைகளை பெண்கள் தமிழில் வேதமந்திரங்களை ஓதி நடத்தினர். நேற்று காலை நான்கு கால யாகசாலை பூஜைகளிலும் பெண்களே தமிழில் வேத மந்திரங்களை ஓதினர். பின்னர், தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து பெண்களும் சேர்ந்து கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தினர்.

20240807081721512.jpeg

கும்பாபிஷேகத் தினத்தன்று அனைத்து பெண்களும் உழவு தொழிலின் குறியீடான பச்சை ஆடை உடுத்தி, கோயிலின் கருவறைக்கு சென்று, அவர்களின் திருக்கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்வித்தனர். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் சித்தர் முறைப்படியும், சித்தர் மரபுப்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.