மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை 2023-ல் டிசம்பர் மாதம் நான்காம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த சிலை கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி உடைந்து நொறுங்கியது. இதனைத் தொடர்ந்து பிரதமர் திறந்து வைத்த சிலை உடைந்து நொறுங்கியது இன்று வரை சர்ச்சை ஆகிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் சரத்பவர், தேசிய வாத காங்கிரஸ் உத்தரவு தாக்கரே, சிவசேனா போன்ற எதிர்க்கட்சிகள் சிவாஜி சிலை உடைப்பை கண்டித்து போராட்டம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மராட்டிய மாநிலத்தில் சிவாஜி சிலை உடைந்ததற்கு பகிரங்கமாக மேடையில் மன்னிப்பு கேட்டார்.
சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் மராட்டிய ஆளும் கூட்டணி கட்சிகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள்.
அந்தப் பேரணியில் உத்தவ் தாக்கரே பேசும்போது சத்ரபதி சிவாஜி சிலை உடைத்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பில் திமிரும் ஆணவமும் இருந்ததை நீங்கள் கவனித்தீர்களா ? மோடி மன்னிப்பு கேட்டபோது மேடையில் இருந்த ஒரு துணை முதல்வர் சிரித்துக் கொண்டிருந்தார் என்று உத்தவ் தாக்கரே சிவாஜி சிலை உடைப்பு பேரணியில் பாரதிய ஜனதாவையும் பிரதமரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் பேசியவர்கள் எல்லோரும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதற்கு காரணம் விரைவில் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால்தான் என்று பேசினார்கள்.
சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர்கள் சிவாஜி சிலை உடைந்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனாலும் ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.
சிவாஜி சிலையை நிறுவியது இந்திய கடற்படை அதேசமயம் மகாராஷ்டிராவை சார்ந்த பல்வேறு ஜாதி மற்றும் மதத்தை சார்ந்த மக்கள் சிவாஜியை போற்றுதலுக்குரிய தலைவராக கடவுளாக காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். அதே சமயம் சிவசேனா சிவாஜி தங்களுக்கு தான் சொந்தம் என்பது போல் அவரை வைத்து அரசியல் செய்வது பால் தாக்ரே காலத்தில் இருந்தே மகாராஷ்டிராவில் நடப்பது தான். சிவாஜி சிலை உடைத்ததற்கு ஆளும் கட்சி சொல்லும் பதில்கள் எல்லாம் ஏற்புடையதாக இல்லை என்பதும் உண்மை சிவாஜி சிலை உடைப்பு பற்றி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே "45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடித்ததால் தான் சிலை உடைந்து விழுந்தது என்று சிந்து துர்க் மாவட்ட ஆணையர் என்னிடம் தெரிவித்தார் "என்று கூறியிருந்தார். பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ்" இந்திய கடற்படையாலும் சிலையை வடிவமைத்த கலைஞராலும் காற்றின் வேகத்தையும் உப்புத்தன்மையையும் கணித்திருக்க முடியாது "என்று புதிய விளக்கம் தந்தார். ஆனால், சமூக சிந்தனையாளர்கள் அந்த மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக 45கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் இது கூட தெரியாமல் மாநிலத்தை ஆளும் பொறுப்பில்உள்ளவர்கள் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று விமர்சனம் செய்தார்கள்.
அதே சமயம் வருகிற நவம்பர் மாதத்துடன் மகாராஷ்டிராவில் சட்டமன்றம் முடிவடைகின்ற நிலையில் அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை இது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் தேசிய அளவிலும் பேசும் பொருளாக இருக்கிறது. சிவாஜி சிலை உடைந்தது எதிர்க்கட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விடுமோ என்ற பயம் ஆளுங்கட்சிக்கு வந்து விட்டது என்ற விமர்சனம் மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகள் தரப்பில் வரத் தொடங்கி இருக்கிறது.
ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது கடந்த காலங்களில் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் ஒன்றாக நடந்தன. ஆனால், இந்த முறை ஜம்மு காஷ்மீர், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் என்று நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருக்கின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு படைகள் தேவைப்படுவதால் இந்த ஆண்டுக்கான நான்கு தேர்தலையும் ஒன்றாக நடத்தாமல் இரண்டாகப் பிரித்து நடத்த முடிவெடுத்து இருக்கிறோம். மேலும் மகாராஷ்டிராவில் தற்போது மழைக்காலம் மற்றும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, மாளய அமாவாசை போன்ற பண்டிகைகள் வருகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மகாராஷ்டிராவிற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை என்று விளக்கியிருக்கிறார். ஒரு சட்டமன்றம் காலாவதியாகும் தேதிக்கு முன்னால் இருக்கும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்பதுதான் விதி, அதனால மகாராஷ்டிரா தேர்தல் இந்த விதிக்கு உட்பட்டு தான் நடக்கும் என்ற உத்தரவாதத்தையும் தேர்தல் ஆணையர் சொல்லியிருக்கிறார். ஆனாலும் பாஜக இன்னும் தேர்தல் தேதி அறிவிக்க சொல்லி தேர்தல் ஆணையருக்கு அனுமதி வழங்கவில்லை.அதனால் தான் இந்த தாமதம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. மொத்தத்தில் சத்ரபதி சிவாஜி இப்போது அரசியலில் வாக்கு வங்கிக்காக பேசும் பொருளாகி இருக்கிறார்.
Leave a comment
Upload