திமுக கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை வைகோ.
ஆமாம் கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா !!
ஹிந்தி கற்பதில் தமிழகம் முதலிடம் இந்தி பிரச்சார சபா தகவல்.
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தானே !!
கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதையும் இல்லை பலனும் இல்லை திமுக வட்டச் செயலாளர்கள் குமுறல்.
அடுத்த முறை மேடையில் ரஜினிக்கு பேச சப்ஜெக்ட் கிடைச்சாச்சு !!
கூவம் ஆறு மறு சீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மேயர் பிரியாவுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்பி கடிதம்.
கடிதம் எழுதுற அளவுக்கு காங்கிரஸ் எம்பிக்கு தைரியம் வந்துவிட்டது !!
யூ யூபில் சீமான் குறித்து அவதூறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
அவதூறு அவதூறு என்று புகார்.
காங்கிரஸ் கட்சி மறு சீரமைப்பு செய்யப்படும் கார்கே.
மறுசீரமைப்பு என்றால் பிரியங்கா காந்தி தலைவராக்க போறீங்களா !!
சென்னை கார் பந்தயம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் தொல். திருமாவளவன்.
அடடா இது தெரியாம முதல்வர் வெளிநாடு போயிட்டாரு !!
விஜய் என்ற ஒருவரால் ஆட்சி அமைக்க முடியாது அவருக்கு நல்ல டீம் தேவை தொல்.திருமாவளவன்.
தலைவரே உங்க தலைமையில் ஒரு கூட்டணி அமைச்சா எப்படி இருக்கும் யோசிங்க !!
கல்விக் கொள்கையின் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி.உதயகுமார் குற்றச்சாட்டு.
இரட்டை வேடம் என்றால் ஹீரோ வில்லன் வேடம் தானே !!
எடப்பாடி மீண்டும் கோட்டைக்கு போவார் செல்லூர் ராஜு தகவல்.
ஆமா அவர் எதிர்க்கட்சித் தலைவர் கோட்டைக்கு போய் தானே ஆகணும் !!!
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய வளர்ச்சிக்கு முன்னுரிமை பிரதமர் மோடி பேச்சு.
உண்மை தானா நம்பலாமா ?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும் தஞ்சை திமுக கூட்டத்தில் தீர்மானம்.
தலைவரைக் கேட்டால் எனக்கு தெரியாதுன்னு சொல்லுவாரு !!
விக்கிரவாண்டியில் மாநாடு 21 கேள்விகள் கேட்டு விஜய் கட்சிக்கு நோட்டீஸ்.
மாநாடு நடத்தக்கூடாது அதானே !!
புல்டோசர் நடவடிக்கை உச்ச நீதிமன்றம் கேள்வி.
ரொம்ப லேட் கனம் நீதிபதி அவர்களே !!
பருவமழைக்கு முன்பு நீர் நிலைகள் தூர்வாரப்படும் மேயர் பிரியா உறுதி.
அப்ப 90% வேலை முடிஞ்சுச்சுன்னு சொன்னீங்க !!
Leave a comment
Upload