தொடர்கள்
ஆன்மீகம்
" பத்து நாள் தொடர்ந்து நண்பகலில் கொடியற்றப்படும் ஒரே ஆலயம் வேளாங்கண்ணி " - ஸ்வேதா அப்புதாஸ்.

வருடந்தோறும் செப்டம்பர் 8 ஆம் நாள் உலகம் முழுவதும் அன்னை மரியாளின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது .

20240805231703750.jpg

கிழக்கு நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி ஒரு அற்புத ஆரோக்கிய அன்னை வீற்றிருக்கும் மிக பெரிய ஆலயம் உலக பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துவருகிறது .

20240805223705489.jpg

வருடந்தோறும் 20 மில்லியன் பக்தர்கள் வந்து போகும் ஒரு அற்புத பேராலயம் .

வருடந்தோறும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை கொடியற்றதுடன் ஆண்டு திருவிழா துவங்கி பத்து நாள் கொண்டாடப்பட்டு வருகிறது .

20240805223801338.jpg

தூய ஆரோக்கிய அன்னை பேராலயம் இந்தியாவின் மிக பெரிய கத்தோலிக்க திருத்தலமாகும் .

16 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவியது .

அந்த மூன்று புதுமைகள் அன்னை மரியாள் தன் குழந்தை ஏசுவுடன் வேளை நகரில் இடையர் சிறுவனுக்கு காட்சி தந்து பாலை பொங்கி வழிய செய்தது .

மோர் விற்ற முடவ சிறுவனுக்கு கால்களை குணமடைய செய்தது .

போர்த்துகீசிய மாலுமிகளுக்கு கடும் புயலில் காப்பாற்றி கரை வந்தடைய உதவியது .

போர்த்துகீசிய மாலுமிகள் தான் முதலில் ஆலயம் எழுப்பினார்கள் .

20240805223847793.jpg

அன்னையின் புதுமைகள் அடங்கிய பீங்கான்கள் பொருத்தப்பட்டுள்ளன .

மாதாவின் அற்புத சுரூபம் போர்த்திகிசியர் கொண்டு வந்ததாம் .மரத்தால் வடிவமைக்க பட்டது என்று கூறப்படுகிறது .

நாகப்பட்டினம் பங்கின் துணை பங்கு சிற்றாலயமாக விளங்கியது .

பின் 1771 ஆம் ஆண்டு இங்கு குருவாக இருந்த அருட்தந்தை .ஆண்டனியோ டி ரொசாரியோ செப்டம்பர் மாதம் தனி பங்காக உருவாக்கி 8 ஆம் தேதி அன்னையின் பிறந்த நாளை சிறப்பித்துள்ளார் .

1920 ஆம் ஆண்டு முதன்மை பேராலயமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான புதுமைகள் நடக்க பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது .

1962 ஆம் ஆண்டு பசிலிகாவாக( பேராலயம் ) உயர்த்த பட்டது .

அன்னை மரியாளின் சுரூபத்திற்கு தங்க இழையுடன் புடவை மிக சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது

யார் புடவை அன்பளிப்பாக வழங்குகிறார்களோ அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டு 'எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ' என்றும் பொறிக்கப்படுகிறது என்பது ஆச்சிரியமான ஒன்று .

வேளாங்கண்ணி மாதா குளத்திற்கு பக்தர்கள் வேண்டுதலுக்காக மண்டியிட்டு முட்டியில் தவழ்ந்து செல்வதை பார்க்கமுடிந்தது .

2024080522485758.jpg

நாம் வேளாங்கண்ணி பேராலய அதிபர் அருட் தந்தை இருத்தியராஜ் தொடர்பு கொண்டு பேசினோம் ,

" உலகமே உற்று பார்க்கும் நம் பேராலய திருவிழா ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிரமாண்ட கொடியற்றதுடன் துவங்கி பத்து நாட்கள் சிறப்பாக அன்னையின் பிறந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது .

தஞ்சாவூர் பிஷப் சகாயராஜ் கொடியை புனிதப்படுத்தி ஏற்றிவைத்து விழாவை துவக்க அன்று மட்டும் நான்கு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

இந்த வருடம் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு பெரிய மாதா தேர் பவனி நடக்க இதில் பல் சமய உரையாடல் இடம் பெரும் இந்து, முஸ்லீம் , மற்றும் கிறிஸ்துவ குருக்கள் கலந்து கொண்டு அன்னை மரியாளை பற்றி உரையாற்றுவார்கள் .

இந்த இடம் அருமையான டெல்டா சமயம் அமைந்துள்ள இடம் வேளாங்கண்ணி , நாகூர் மற்றும் திருநள்ளாறு இந்து இஸ்லாம் பக்தர்கள் இந்து மூன்று புனித இடத்திற்கும் சென்று வருவது வழக்கம் .

வேளாங்கண்ணி திருவிழாவின் மிக முக்கிய சிறப்பு பத்து நாளும் புதிய கொடிகள் தினமும் நண்பகல் 12 மணிக்கு ஏற்றப்படுவது ஒரு சிறந்த பக்தி செயல்பாடு .20 மொழிகளில் "அருள் நிறைந்த மரியே " சொல்லப்படுகிறது இதில் அரபிக் மொழியும் அடக்கம் .

தினமும் மாலை கப்பிரியல் சம்மனசு செபஸ்தியார் , அந்தோனியார் , சூசையப்பர் மற்றும் அன்னை மரியாளின் ஐந்து தேர் பவனி நடைபெற்றது .

இந்த தேர்களை ஆண்கள் பெண்கள் தோளில் சுமந்து வருவது மற்ற ஒரு ஆச்சிரியம் .

இந்த தேர்களை சுமக்க முன்வருபவர்கள் தங்களின் உயரம் , எடை உடல் ஆரோக்கியம் பரிசோதனையை தினமும் காலை பதிவு செய்து அனைவரும் சரியான உயரம் , எடை இருந்தால் தான் தேரை சுமக்க அனுமதிக்க படுவார்கள் .

அதே போல 7 ஆம் தேதி மாதாவின் பெரிய தேரை சுமக்கும் நூற்றிஐம்பது பெரும் தயார்படுத்த படுவார்கள் .அனைவரும் ' மரியே வாழ்க ' என்று உச்சரித்துக்கொண்டே பவனியில் செல்கிறார்கள் .

20240805230200465.jpg

பெரும்பாலான இந்து பக்தர்கள் வெளிநாட்டினர் கலந்து கொள்வதால் எங்க கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் எஸ்பி ஆஷிஷ் ராவத் தலைமையில் மூன்று கூட்டம் நடத்தப்பட்டு பாதுகாப்பு , சுத்தம் சுகாதாரம் மிக அருமையாக செயல் படுத்த படுகிறது .

ஆங்காங்கு வாட்ச் டவர் அமைத்து கண்காணித்தனர் காவல் துறையினர் .

கோஸ்டல் கார்ட் கண்காணிப்பு 24 மணிநேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .

வேளை நகர் பேரூராட்சி மிக சிறப்பாக சுகாதாரத்தை பேணிக்காத்து வருகின்றனர் .

லட்ச கணக்கில் பக்தர்கள் வந்து குவிய காரணம் நம் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தென்னக ரயில்வே மும்பாய் கோவா கேரளா என்று ரயில்கள் நேரடியாக வேளை நகரை வந்தடைவதால் தான் . இதற்கான முழு முயற்சி எடுத்த டி ஆர் எம் அன்பழகன் ஜி எம்.

இந்த வருடம் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் மன்றாட்டு உலக அமைதி போர்கள் நிறுத்தப்படவேண்டும் மனித நேயம் மனித ஒற்றுமை திகழ் அன்னையின் ஆசீர் அருள் மழையாக பொழிய அம்மாவிடம் கேட்போம் உருக்கமாக".

வேளாங்கண்ணி மாதாவின் பத்து நாள் திருவிழாவின் சிறப்பே அன்னையின் திருவுரும் பொருந்திய கொடிகள் ஏற்றுவது தான் .

20240805225451454.jpg

மிக சிறப்பாக கொடியை தயாரிக்கும் நபர் ஜெயராஜ் கோவை புளியகுளத்தை சேர்ந்தவர் அவரை தொடர்பு கொண்டு பேசினோம் ,

" கடந்த 15 வருடமாக இந்த அற்புத பணியை செய்து வருகிறோம் .

29 ஆம் தேதி கொடி மற்றும் தொடர்ந்து ஐந்து நாள் எங்களின் கொடி தான் .நாங்கள் உயிர்வாழ்கிறதே அன்னை மரியாளின் கருணையால் தான் .

மூன்று நாள் கொடி சென்னை மற்றும் திருச்சி நகர் பக்தர்கள் .

ஆறாம் தேதி கொடி வேளாங்கண்ணி ஊர் மக்களின் அன்பளிப்பு .

ஏழாம் தேதி கொடி நாகப்பட்டினம் ஊர் மக்களின் உபயம் .

அந்த கொடி எட்டாம் தேதி மாலை இரக்கப்பட்டு அன்னையின் ஆண்டு விழா முடிவுபெறும் .

திருவிழா மிக சிறப்பாக நடக்க எல்லா அருளும் அன்னை மரியாளின் கருணையால் நடக்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை " என்று கூறினார் .

தினமும் கொடி ஏற்றும் போது ஞாலத்தை படைத்த தேவனின் தாயே உன் திருகோடி வானில் பறக்குதம்மா என்ற பாடல் டி .எல் .மகராஜன் குரலில் வானை தொட்டு அனைவரையும் ஈர்த்து இழுத்துள்ளது .

20240805230103244.jpg

இந்த பாடல் ஒவ்வொருமுறையும் கொடி ஏற்றும் பொழுது இந்த பாடல் இல்லாமல் கொடியற்றம் இல்லை அப்படி ஒரு பாரம்பரியத்தை வேளாங்கண்ணி பேராலயம் தொடர்கிறது .

உலகையே கவர்ந்துள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருவிழா விற்கு நம் அரசு விடுமுறை கொடுக்கவில்லை என்பது நீண்டநாள் எதிர்பார்ப்பு .

மத்திய அரசும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

கலைஞர் முதல்வராக இருக்கும் போது செப்டம்பர் 8 ஆம் தேதி அன்னை மரியாளின் பிறந்த தினத்திற்கு மாநில அரசு பொது விடுமுறை வழங்கப்படும் என்று கூறியிருந்தார் பின் அதை எனோ மறந்து போய்விட்டனர் .

அனைவரின் கனவை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா அன்னையின் முக்கியத்துவத்தை புரிந்து .