தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20230502172154455.jpeg

பிராமணர்களின் உயர்கல்விக் கட்டணத்தை அரசே இனி ஏற்கும் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு.

விடுதலை ஆசிரியர் வீரமணி உடனே வெளியே வந்து கருத்து சொல்லவும் உங்களுக்காக கருத்து கதிர்வேலன் காத்திருக்கார் ஏதாவது பேசுங்க ஆசிரியரே

பிரதமர் மோடி மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் பத்து ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சி அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்.

அதெல்லாம் சரி ...15 கட்சித் தலைவர்கள் செல்லாது.. செல்லாது ...என்று நாட்டாமை பண்ணுவார்களே அதுக்கு ஏதாவது ஆய்வு இருக்கா!

திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னார் வைகோ-துரைசாமி

அவர் இப்ப வேண்டாம் என்று சொன்னார் நீங்க ஒரு காலத்தில் எப்பவும் வேண்டாம் என்று சொன்னீர்கள் அது உங்களுக்கு மறந்து போச்சு தலைவரே

கடவுளுக்கே விளக்கம் சொல்வார் பிரதமர் மோடி ராகுல் காந்தி.

இது ஏதோ பாராட்டு மாதிரி இருக்கு தம்பிக்கு இன்னும் பேசுற பயிற்சி பத்தல முரசொலி படிக்கணும்.

காவேரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி கர்நாடக அமைச்சர் சிவகுமார்

கூட்டணி தர்மம் என்று அணைக்கட்டு பூமி பூஜைக்கு முதல்வரும் திருமாவும் கிளம்பி போவாங்களோ

ஜூன் மாதம் தஞ்சையில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு

உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என்று ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக் கொள்வார்களோ என்னவோ

டாஸ்மாக்கில் மதுபான வகைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அபராதத்துடன் பணியாளர் மீது நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி

விற்க சொல்வதே அமைச்சர் தான் என்ற வீடியோவை அமைச்சர் இன்னும் பார்க்கவில்லை போல் இருக்கிறது

விடுதலை சிறுத்தை தொண்டர்கள் நாளை காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்

மொட்டை மாடியில் வத்தல் போட சொல்லி இருப்பாரோ என்னவோ கருப்பு கொடி பறந்தால் காக்கா வராது என்று தலைவர் உஷார் பண்ணுகிறார்

ஆவின் நிறுவனத்தைப் மேம்படுத்த வேண்டும் ஓபிஎஸ் அறிவுறுத்தல்

நீங்க பத்து ஆண்டுகள் இருந்தபோது செய்ய முடியாததை இரண்டே ஆண்டில் செய்ய சொல்றீங்க தலைவரே

நேருவிடம் செங்கோல் கொடுத்ததற்கு ஆதாரம் உள்ளன திருவாடுதுறை ஆதினம்.

ஆனால் அவங்க கட்சிக்காரங்க அது சும்மா என்கிறார்கள் இப்போது சுவாமி

எதிர்க்கட்சிகள் இணைவதை தடுக்கவே வருமான வரி சோதனை ஆர் எஸ் பாரதி

இது ரொம்ப பழைய ஜோக் தலைவரே புதுசா ஏதாவது நீங்க முயற்சி பண்ணுங்க

தமிழ் பாடங்கள் நீக்கம் அரசுக்கு தெரியாமல் அறிவித்திருக்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழகம் அமைச்சர் பொன்முடி

அவ்வளவு தைரியம் அவங்களுக்கு எப்படி வந்தது ஒரு வேளை ராஜ்பவன் பக்கத்தில் இருப்பது என்பதா என்னவோ அமைச்சரே யோசித்துப் பாருங்கள்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் மாணிக்கம் தாக்கூர்

அதுக்கு அவர் முதல்ல எம். பி. ஆகணுமே

கஷ்டப்படும் மக்களுக்காக நான் அரசியலுக்கு வர வேண்டும் சசிகலா

கஷ்டப்படுற மக்கள் யாரு சின்னம்மா நீங்க இல்லாததால் எல்லோரும் சந்தோஷமா தான் இருக்காங்க.