ரியல் எஸ்டேட் நடிகை
இப்போது அரசியல் தலைவர்களை விட சினிமா நடிகைகள் ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமாக கவனம் செலுத்துகிறார்கள் நடிகை நயன்தாரா அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி மல்டி பிளக்ஸ் கட்டடம் கட்டப் போகிறாராம். இந்த விஷயம் ஜி ஸ்கொயர்க்கு எட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.இந்த செய்தி வதந்தி என நயனதாரா தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது தான் லேட்டஸ்ட் நியூஸ்!
கீர்த்தி ஷெட்டி
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி தான் கீர்த்தி என்ற பெயரில் விஜய்க்கு ஏதோ ஒரு ஈர்ப்பு.
திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி இயக்குனராக வாய்ப்பு வேண்டி திருப்பதியில் குடும்பம் சகிதமாக போய் பிரார்த்தனை செய்திருக்கிறார். கீர்த்தி மேடம் ட்விட்டரில் உங்களுடன் இருக்கும் மஞ்சள் சட்டை பையன் யார் பாய் பிரண்டா 'பாய் 'பையனா.
தமன்னா கவர்ச்சி நடனம்
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பட காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டது. கடைசியாக நடிகை தமன்னா நடனமாடும் ஒரு பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. டான்ஸ் மாஸ்டருடன் ரிகர்சல் பார்க்கும் படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார் தமன்னா.
அஞ்சலி 50
நடிகை அஞ்சலி நடிக்கும் ஐம்பதாவது படத்தின் பெயர் ஈகை . அசோக் வேலாயுதம் இயக்குகிறார். தரண் இசை ஸுரதர் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் படத்தை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
அயோத்தி பட நடிகை
அயோத்தி படத்தில் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானிகவின் ஜோடியாக நடிக்கிறார் நடன இயக்குனர் சதீஷ் இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கு முக்கிய வேடம் நடிக்கிறார் அனிருத் இசை.
கங்கனா கோபம்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பைஜ் நாத் சிவன் கோயிலுக்கு மேற்கத்திய உடையில் ஆபாசமாக காட்சியளிக்கும் உடைகளுடன் சிலர் கோயிலுக்கு சென்றுள்ளார்கள். அந்தப் படத்தை நிதி உனியாள் என்பவர் twitter பக்கத்தில் பதிவு செய்து நைட்கிளப்புக்கு போவது போல் உடை அணிந்து கோயிலுக்கு வருகிறார்களே இது போன்ற உடைகளை கோயிலில் அனுமதிக்கலாமா என்று கேட்டுள்ளார் இதை டேக் செய்த நடிகை கங்கணா ராவாத் இந்த மேற்கத்திய உடைகள் வெள்ளயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது ஒருமுறை வாடிகனுக்கு ஷார்ட் டி-ஷர்ட் அணிந்து போனேன் அந்த வளாகத்துக்குள்ளேயே என்னை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள் வேறு உடை மாற்றிக் கொண்டு போனேன் இரவு உடையை சாதாரணமாக அணியும் இவர்கள் சோம்பேறிகள் முட்டாள்கள் என்று சாடி இருக்கிறார்.
சென்னை ஸ்டோரி
நடிகை சமந்தா சென்னை ஸ்டோரி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இது ஆங்கில படம்.
துப்பாக்கியுடன் ராஜலட்சுமி
பின்னணிப் பாடகியான ராஜலஷ்மி செந்தில் லைசன்ஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ராதாரவி பழ கருப்பையா நமோ நாராயணன் அனன்யா வையாபுரி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்தப் படத்தில் துப்பாக்கி வைத்திருக்கும் வேடத்தில் ராஜலட்சுமி செந்தில் நடித்திருக்கிறார்.
Leave a comment
Upload