எரிமலைக் குழம்பு !!
ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பக்ரதல்ஸ்பிஜால் எரிமலை கடந்த 8 மாதங்களுக்கு முன் வெடித்து சிதறியது. தற்போது அந்த எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்து, தீக்குழம்புகளை வெளியே சிதறடித்து வருகிறது. மேலும், எரிமலையில் இருந்து நெருப்பு ஆறு ஓடிவருகிறது. இவற்றை ஒரு இளம்பெண் துணிந்து, அதன் அருகே நின்றபடி அதிநவீன காமிராவில் படம்பிடித்து வெளியிட்டதை பலரும் பாராட்டியுள்ளனர்.
**எங்கூரு பெண்கள் அன்றாடம் கொதிக்கும் பல விதமான குழம்புகளின் முன்னே எத்தனை மணி நேரம் நிற்கிறார்கள் தெரியுமா ?? எங்களுக்கு இந்த குழம்பு தான் முக்கியமுங்கோ !!**
செயற்கைகோளுக்கு மென்பொருள் கண்டுபிடிப்பு!
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இஸ்ரோ சார்பில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில், பெண்களின் பங்கேற்பை கவுரவிக்கும் வகையில், மாணவிகள் மட்டுமே செயற்கை கோளுக்கான மென்பொருள் தயாரிப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளான பவதாரிணி, ஏஞ்சல், கவுரி, ஹரிவைஷ்ணவி, ஜெய்ரின் இருதயா, யசோதாதேவி, பத்மினி, அத்சாராணி, சுவேதா, பிருந்தா ஆகிய 10 பேர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு இஸ்ரோ சார்பில் செயற்கைகோளின் ஒரு பாகம் தயாரிப்புக்கான ‘சிப்’ அனுப்பி, அவற்றை எவ்விதம் தயாரிப்பது என இஸ்ரோ விஞ்ஞானிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை வழங்கினர். இதைத் தொடர்ந்து 10 மாணவிகளும் சேர்ந்து 5 மாதத்தில் மென்பொருளை தயாரித்து இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளனர்.
தற்போது இந்த மென்பொருள் செயற்கைகோளில் பொருத்தப்பட்டது. இந்த செயற்கைகோளை வரும் 7-ம் தேதி (நாளை) பிரதமர் மோடி விண்ணுக்கு அனுப்பி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் திருமங்கலத்தை சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவிகளும் பங்கேற்கின்றனர் என்பது தமிழகத்திற்கு பெருமை.
*மென்மையானவர்கள் எழுதியதால் அது மென்பொருள் ஆனதா அல்லது மென்பொருள் என்பதால் மென்மையானவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனரா ???*
Leave a comment
Upload