தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

2022070517582621.jpeg

ஆவின் உற்பத்தி நிலையங்கள் மூலம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை பால்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு

பால் தண்ணியா இருக்கு என்று புகார் வந்தால் பாட்டில் மாறிப் போச்சு என்று சமாளிக்கலாம்

சித்தராமையா என் பிரதமராக வரக்கூடாது தொல் திருமாவளவன்

அவர் பிரதமராக வந்தால் நீங்கள்தான் தமிழக முதல்வர் ஆனால் ரெண்டுமே நடக்காது

தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரி சோதனை

அவர் வசூல் செஞ்ச மீட்டர் வட்டி பணம் எல்லாம் வருமான வரித்துறை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க

திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் கண்ணீர் விடுகிறார்கள் வானதி சீனிவாசன்

அப்படி எல்லாம் இருக்காது ஏதாவது டிவி சீரியல் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டிருப்பார்கள் ஆட்சி எல்லாம் அவர்களுக்கு ஐம்பது வருஷமா பழகிப்போச்சு

மேற்குவங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்

வாங்கற லஞ்சப் பணத்தை கும்பலாக குவித்து வைக்காம நடிகைகள் சகவாசம் இல்லாதவர்களா இப்படி எல்லாம் செக் பண்ணி தான் மந்திரிசபையில்தீதி சேர்த்தாங்களா

பிரதமராவார் என்று ராகுலுக்கு மடாதிபதி வாழ்த்து

அதுக்கு அவர் இந்தியாவில் தொடர்ந்து இருக்கணுமே அது முடியுமா

2024 தேர்தலிலும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடி தான்- அமித்ஷா அறிவிப்பு

பேசாம பாரதிய ஜனதாவின் நிரந்தர பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லிவிடுங்கள் அவர் அளவுக்கு கட்சியில் பிரபலம் யாரும் இல்லையே

பெட்ரோல் டீசல் வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் தமிழக நிதியமைச்சர்

ஆமா குறைகிறது எல்லாம் அவர்கள் வேலை என்றால் உயர்த்துவது மட்டும் தான் எங்கள் வேலை

பணம் மதிப்பிழப்பிட்டடிற்க்குபிறகு கருப்பு பணம் எப்படி வந்தது திமுக எம்பி கனிமொழி கேள்வி

எங்களை கேட்டா நீங்கதான் சொல்லணும் உங்களுக்குத்தான் இதில் சர்வீஸ் ஜாஸ்தி

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரட்டை இலையை மீட்போம் டிடிவி தினகரன்

குக்கர் சின்னம் சொல்றீங்க அப்போ அந்த 20 ரூபாய் டோக்கன் உண்டா

ஜிஎஸ்டி மீது பழி போட்டு பொருட்களை திமுக அரசு அதிக விலைக்கு விற்கிறது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி விற்கச் சொல்லி நிர்பந்தம் என்று அறிக்கை வரும் பாருங்க

எஸ் பேங்க் மோசடி வழக்கு 415கோடி சொத்து முடக்கம்

மோசடிக்கு எஸ் சொல்ல ஒரு பேங்க்

கொளத்தூர் ஏரியை பாதுகாக்க அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

ஏரிக்கே பாதுகாப்பு இல்லையா பேஷ் பேஷ்

ஓராண்டில் சேதமடைந்த தார்ச்சாலை

தலைமைச் செயலாளர் சுரண்டிப் பார்த்து சாலை போட சொன்னார் இவங்க சுரண்டல் என்று தப்பா நெனச்சு கிட்டாங்க போல இருக்கு.