தொடர்கள்
பொது
விகடகவி ஸ்வீட் காரம் காபி - இண்டிகோ விமானம் இனி மூன்று வழி - மாலா ஶ்ரீ.

20220705162138394.jpg

‘இண்டிகோ விமானத்தில் பயணிகள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக விரைவில் 3 வழிகளை பயன்படுத்த இருக்கிறோம். இதன்மூலம் உலகிலேயே முதன்முறையாக 3 வழிகளை பின்பற்றும் முதல் விமான நிறுவனமாக இண்டிகோ இடம்பெறும்’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இண்டிகோ சிஇஓ ரோனோ ஜாய் தத்தா கூறுகையில், ‘‘பொதுவாக 321 ரக விமானங்களில் இருந்து பயணிகள் ஏறி, இறங்குவதற்கு 2 வழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும். இதற்கு 14 நிமிடங்களாகும். பயணிகளை 3 வழிகளில் இறக்கி, ஏற்றினால் குறைந்தபட்சம் ஏழெட்டு நிமிடங்களே ஆகும். இதற்கேற்ற வகையில் எங்களுடைய விமானங்கள் மாற்றியமைக்கப்படும்.

*எத்தனை வழி வேணாலும் வைங்கப்பா. ஆனா முன்னாடி உங்க வாடிக்கையாளரை அடிச்சு துவைக்காம அனுப்பி வையுங்கோ*