தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

மீண்டும் சரிதா

20220705181354226.jpg

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை சரிதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்பதுகளில் அதிக ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் சரிதா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்தவர். பிறகு மெல்ல நடிப்பை குறைத்து பல மொழிகளில் டப்பிங் செய்து கொண்டிருந்தார் . சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க நடிகை சரிதா ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று படத்தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலாக வெளியிட்டிருக்கிறார்.

அப்பா பெயரை காப்பாற்றுவேன்

20220705181523185.jpg

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தமிழில் விருமான் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி கார்த்திக் இயக்கம் எம்.முத்தையா இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா ஹாலில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகை அதிதி ஷங்கர் பேசும் போது என்னால் முடிந்த பணியை செய்வேன் என் அப்பா பெயரை காப்பாற்றுவேன் தொடர்ந்து நடிப்பேன் நான் எல்லா மொழியிலும் நடிக்க தயார் என்று மற்ற மொழி தயாரிப்பாளர்களுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார் நடிகை அதிதி.

என்னை ஓட வைத்தார்

20220705182059436.jpg

மதுரையில் விருமன் பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா கார்த்தி நடிகை அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கர் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும் போது கார்த்தி சூர்யா நாங்களெல்லாம் ஒரே குடும்பம். நாங்கள் ஒரே பள்ளியில் படித்தோம் சூர்யா தான் ஹவுஸ் லீடர். அவர் ஒழுங்காக ட்ரெஸ் செய்து வருவார். நான் யூனிபார்ம் ஷீ இவற்றை எல்லாம் ஒழுங்காக அணிய மாட்டேன். இதனால் யுவன் அவுட் என்று என்னை ஓட விடுவார் இப்போது அவரை பாடலுக்கு நான் ஆட விடுகிறேன் என்றார் யுவன் சங்கர் ராஜா.

இப்படித்தான் விருது

20220705182408482.jpg

இந்திய அரசு அறுபத்தி எட்டாவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வு குழுவினால் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் பட்டியலை அறிவித்தது. தமிழ் சினிமாவுக்கு பத்து விருதுகளும் மலையாள சினிமாவுக்கு 11 விருதுகளும் கிடைத்தன. ஆனால் இந்த விருதுகளைப் பற்றி பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தேசிய திரைப்பட விருது என்பது கொடூரமான நகைச்சுவை ஆகிவிட்டது.திரைப்படங்களை பார்க்காதவர்கள் படம் குறித்து அறியாதவர்கள் விருது வழங்குகிறார்கள். தேசிய நடுவர் குழுவில் நடுவர்களாக இருப்பவர்கள் இந்தி திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என்று கருத்து சொல்லி இருக்கிறார். மலையாள பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

எல்லாம் மும்பை நடிகைகளுக்கு தான்

நடிகை ஜெயசுதா கருத்தும் அடூர் கோபால கிருஷ்ணன் கருத்தைத் தான் பிரதிபலிக்கிறது. தற்போது தெலுங்கில் தயாராகும் வாரிசு படத்தில் நடிக்கும் நடிகை ஜெயசுதா திரைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மும்பையிலிருந்து வரும் நடிகைகளுக்கு தான் இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்த உங்களுக்கு ஏன் பத்மஸ்ரீ விருது தரவில்லை என்று கேட்கிறார்கள். பத்மஸ்ரீ விருது இந்தி நடிகைகளுக்கு மட்டும்தான் தருகிறார்கள் மற்ற மொழி நடிகைகளுக்கு தருவதில்லை ஏன் அவர்களுக்கு அந்த தகுதி இல்லையா என்று கேட்கிறார் ஜெயசுதா.