தொடர்கள்
தொடர்கள்
நியூஸ் நியூஸ் நியூஸ் - பொடியன்

நான் பயப்படவில்லை

2022070518314107.jpg

அமலாக்கத்துறை ராகுல் காந்தி சோனியா காந்தி இருவரையும் தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை செய்தது. காங்கிரஸ் கட்சி இதை கண்டித்து போராட்டம் நடத்தியது. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று சுட்டிக் காட்டியது நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அந்த அலுவலகத்தில் ஒரு பகுதிக்கு அமலாக்கத்துறை சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி அம்மா சோனியா காந்தி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு வந்திருக்கிறது. இது பற்றிய கேள்விக்கு ராகுல் காந்தி பதில் சொல்லும்போது நான் மோடியை கண்டு பயப்படவில்லை அவர் தடுப்புக்கு மேல் தடுப்புகளை வைத்தாலும் எனக்கு ஒன்றும் ஆகாது உண்மைக்கு ஒரு போதும் தடுப்பு போட முடியாது நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் எனக்கும் பயம் இல்லை என்கிறார் ராகுல் காந்தி.

அண்ணாமலை சவால்

20220705183522437.jpg

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எப்போதும் சவால்விட சளைக்க மாட்டார். மின் கட்டண உயர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சியினர் சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துகளை பதிவிடுகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு நிருபர்களிடம் அண்ணாமலை நான்தான் முதலில் கருத்து சொன்னேன் தைரியமிருந்தால் என்னை முதலில் கைது செய்யட்டும் இன்னும் நாலு நாள் நான் சென்னையில் தான் இருப்பேன் வாருங்கள் வந்து கைது செய்யுங்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார். அண்ணாமலையை பொருத்தவரை வழக்குப் போடுங்கள் கைது செய்யுங்கள் என்று சவால் விட்டபடி இருக்கிறார் ஆனால் திமுக தான் அவரை ஏன் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது தெரியவில்லை.

அது புத்தர் சிலை

20220705183736650.jpg

சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தில் தலைவெட்டி முனியப்பன் சாமி சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஆனால் அது முனியப்ப சாமி சிலை அல்ல புத்தர் சிலை என்று புத்தர் அமைப்பை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றம் அது புத்தர் சிலையா முனியப்ப சாமி சிலையா என்று ஆய்வு செய்து அறிக்கை தர அகழ்வாராய்ச்சி துறைக்கு உத்தரவிட்டது. தற்போது உயர்நீதிமன்றத்தில்அகழாய்வு துறை அது முனியப்ப சாமி சிலை அல்ல புத்தர் சிலை என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. அந்த அறிக்கையில் அந்த சிலை தாமரைப் பீடத்தில் அர்த்த பத்மாசனம் எனப்படும் அமர்ந்த நிலையில் உள்ளது சிலையின் கைகள் தியான முத்திரை கொண்டுள்ளதாகவும் கூறிய அதிகாரிகள் தலைப்பகுதியில் புத்தருக்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள் …

பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் -சீமான்

20220705183942510.jpg

சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்ற அறிவிப்பு வெளியானதும் முதல்வர் ஸ்டாலின் இதனால் தமிழ்நாடு வளம் பெறும் என்று வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார் ஆனால் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் எதற்கு இந்த விமான நிலையம் 3000 ஏக்கர்வேளாண் நிலத்தை அழித்து இப்படி ஒரு விமான நிலையம் தேவையா இப்போதைக்கு மேற்பட்ட நீர்நிலை ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இவற்றையெல்லாம் அழித்து விமான நிலையம் வேண்டாம் இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.எட்டு வழிச்சாலை என்று எடப்பாடி அறிவித்தபோது இப்போது சீமான் சொன்ன இதே கருத்தை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் சொன்னார் அப்போது எதிர்த்தார் இப்போது வரவேற்கிறார் இதுதான் அரசியல் என்கிறார்கள்.

பி.டி.உஷா

20220705184108405.jpg

நியமன எம்பிகள் பாராளுமன்றத்தில் எந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை சும்மா வந்து போகிறார்கள் என்று பரவலான ஒரு கருத்து உண்டு. ஆனால் பி.டி.உஷா நான் அப்படி இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவில் தனது கன்னிப் பேச்சை துவக்கிய பி .டி.உஷா நான் கேரளாவில் குக்கிராமத்தில் பிறந்து தடகளத்தில் சாதனை படைத்தேன்.விளையாட்டுத்துறையில் இந்தியா தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம். ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்வதோடு இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களையும் பாழ் படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்ட பி .டி.உஷா ஊக்கமருந்துக்காக தண்டனை வழங்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார் .ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை தேவை என்பதையும் தடகள வீராங்கனை பி .டி.உஷா அறிவுறுத்தினார்.