தொடர்கள்
பொது
2020 இந்திய போட்டோ டைரி !!

2021000200320036.jpg

சென்ற ஆண்டு என்னென்ன நடந்தது?! அத்தனையும் போட்டால் இந்த வார விகடகவி தாங்காது.

மாதம் ஒரு முக்கிய விஷயம் என்ன நடந்தது என்று வேண்டுமானால் ஒரு நோட்டம் விடலாம்.

ஜனவரி

20210002003427122.jpg

30ந்தேதி முதல் கரோனா கேஸ் பதிவாகியது. கேரளாவின் மாணவர்.

பிப்ரவரி

20210002003727299.jpg

24-25 தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருந்தார். சபர்மதி ஆஸ்ரம், மற்றும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். "நமஸ்தே டிரம்ப்"

மார்ச்

2021000200393369.jpg

25ந்தேதி மார்ச் நள்ளிரவு முதல் முதல் லாக்டவுன். 21 நாட்கள் ஊரடங்கு துவங்கியது.

கரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியா எடுத்த முதல் நடவடிக்கை.

ஏப்ரல்

20210002004239404.jpg

பல ஆண்டுகளுக்குப் பின் ரங்கநாதன் தெருவில் லாக்டவுன் புண்ணியத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடியதை பார்க்க நேர்ந்தது. சாதாரண சமயங்களில்.. மனிதத் தலைகளால் நிறைந்திருக்கும் தெருவில் இதுவே பெரிய செய்தியாக உலா வந்தது.

மே

20210002004509934.jpg

விசாகப்பட்டிணத்தில் ஒரு இரசாயான தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுவுக் கசிவில் 11 பேர் இறந்து போயினர்.

ஜூன்

20210002004708837.jpg

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக சொல்லப்பட்டது.

அவரது மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஏற்ப்பட்ட கொதிப்பு அடங்க நாளானது. இன்னமும் அவர் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவே தோன்றுகிறது.

ஜூலை.

20210002004921247.jpeg

ஜூலை மாதம் ஒரு வழியாக நம்முள் புரையோடிப் போயிருந்த மெக்காலே கல்வித் திட்டத்தை மாற்றும் வகையில் புதிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டு, அதற்கு மத்திய காபினட் ஒப்புதல் அளித்தது.

சர்ச்சைகள் இருந்தாலும் புதிய கல்விக் கொள்கை வரவேற்கப்பட்டது.

ஆகஸ்ட்.

20210002005137240.jpg

ராம ஜென்ம பூமியில் புதிய இராமர் கோவிலுக்கு பூமி பூஜை செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அடிக்கல் நாட்டினார்.

செப்டம்பர்.

20210002005438596.jpeg

மூன்று வேளான் சட்டங்கள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்டோபர்.

20210002010034568.jpg

புது டில்லியில் 58 வருடங்களுக்குப் பின் குறைந்த பட்ச வானிலை 12.5 டிகிரியாக பதியப்பட்டது.

நவம்பர்

20210002005613331.jpg

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்த லவ் ஜிகாத் மசோதாவிற்கு உ.பி. சட்டமன்றம் ஒப்புதல் அளித்து.

டிசம்பர்

20210002010409691.jpg

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்படி கோரும் விவசாயிகள் போராட்டம் புது டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜனவரி 4-ம் தேதி மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிய வருகிறது.