வாசகர் விஷுவல்...
இந்த வாரம் முதல் வாசகர்கள் எடுத்த வித்தியாசமான, அல்லது தொழில்நுட்பத்தின்படி பிரத்யேகமான, வனவலிங்கு படங்கள் அல்லது உங்களைக் கவர்ந்த அசாதாரண புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.
இதற்காக விலையுயர்ந்த பிரத்யேக காமிராக்கள் தேவையில்லை. நல்ல படங்கள் செயலியில் (mobile) எடுத்திருந்தாலும் போதுமானது.
ஒரே ஒரு விண்ணப்பம். கிளிக்கிய காட்சி உங்கள் சொந்த சரக்காக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
உதாரணத்திற்கு - இந்த வாரம் மேப்ஸ் என்று அழைக்கப்படும் எம்.ஏ.பார்த்தசாரதி அவர்களின் புகைப்படங்கள் இப்பகுதியில் இடம் பெறுகிறது. மேப்ஸ் எடுத்த உலகப் புகழ் பெற்ற ராஜீவ் காந்தி படுகொலைப் படம், ஏறக்குறைய உலகின் அத்தனை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் அன்று வந்தது.
செய்திப் படங்கள் ஒரு வகை என்றால், பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் படங்கள் முற்றிலும் வேறு வகை. இதற்காக வாரக்கணக்கில் காத்திருக்கும் புகைப்படக்காரர்கள் உண்டு.
உங்கள் விரல்வண்ணத்தை info@vikatakavi.in என்ற மின்னஞ்சலுக்கு வாசகர் விஷுவல் என்று தலைப்பிட்டு அனுப்பலாம்.
உங்கள் பெயர், புகைப்படும் எடுத்த தருணம் போன்றவற்றை சுருக்கமாக எழுதினால் நலம். மற்றபடி காமிரா பற்றிய தொழில்நுட்ப விவரங்களை விருப்பமிருந்தால் பகிரலாம். அத்தியாவசியமில்லை.
மேலும் மேப்ஸின் சில படங்கள் இங்கே...
மேப்ஸின் படங்கள் இன்னும் வரும்....
- விகடகவி விஷுவல் டீம்...
Leave a comment
Upload