வாசகர்கள் அங்குமிங்கும் (ஒட்டு....ஹி..ஹி..) கேட்ட விஷயங்கள் :
நண்பர் வீட்டுக்கு சென்றபோது நடந்தது..
எங்களை வரவேற்ற நண்பர் ஹாலிலிருந்து கத்தி சொன்னார்:
“காப்பி..”
மனைவி உள்ளேயிருந்து சத்தமாக பதில் சொன்னார்:
“என்ன கூப்பிட்டா நான் வருவேன், காப்பின்னா அதுவா நடந்து வருமா?
போட்டு வெச்சுருக்கேன் வந்து எடுத்துக்கிட்டு போங்க..”
நண்பர் அசடு வழிந்து கொண்டே உள்ளே செல்கிறார்...
மடிப்பாக்கம் - ராமன்
குற்றாலம் ஐந்தருவி அருகில் இருவர்...
“என்னடே, பால்ஸ்ல குளிக்கலாம் வாடேன்னா, இங்கண ஓடற தண்ணி பக்கத்துல உக்காந்து குளிக்கலாங்கே.."
“மெடராசுக்கு போய் முப்பதாயிரம் செலவு பண்ணி முடிய நட்டுகிட்டு வந்திருக்கேன், அருவில குளிச்சு அத்தனையும் அடிச்சிக்கிட்டு போயிடுச்சின்னா... அப்புறம் திரும்பவும் நடவு தான், செலவு தான், நீ போ, நான் வரலே..”
அம்பாசமுத்திரம், சங்கர்
சைதாப்பேட்டை ரேஷனில் இருவர்...
“ஏம்பா பொங்க காசு இப்ப தருவீங்கல்ல...”
“இன்னும் நம்ம கடைக்கு வரலே, ரெண்டு நாள் ஆவும்..”
“டோக்கன் கொடுக்கும்போது நாளைக்கே போங்க, இல்லேன்னா கிடைக்காதுன்னு சொன்னாங்க..”
“அவனுக்கென்ன ஒரு பேப்பர குடுத்து சொல்லிட்டு போய்டுறான், எங்க டவுசரில்ல கிழியுது.- நாளன்னிக்கு வாங்க..”
“இதை வாங்கிட்டு போய், அந்த கடனை அடிச்சிட்டு, ரெண்டு ஃபுல்ல வாங்கிட்டு போலாம்னு பாத்தா...என்னடா இது இந்த குடிமகனுக்கு வந்த சோதனை!” கேட்டவர் புலம்பிக்கொண்டே செல்கிறார்..
சைதை, ரமணி
நாகர்கோயில், டாஸ்மாக்கில் இரு குடிமகன்கள்...
“ஏம்ப்பா தலைவர் இண்ட்ரோடியுஸ் பண்ணாரே அர்ஜுனமூர்த்தி... அவர் இன்னப்பா, ரஜினியும், மோடியும் ரெண்டு கண்ணுன்னு சொல்லிருக்காரு..”
“ஆமா, பிசினெஸ்காரர் இல்ல, ஏற்கனவே ஒரு கண்ணு நொள்ளையாயிடுச்சி, இன்னொன்னாச்சும் வேணுமில்ல, அப்புறம் எப்படி காலம் தள்றது..?”
“அப்ப என்ன அங்கயே போய்டுவாருன்னு சொல்றியா?”
“அட அவசரத்துல பொறந்தவனே, இருடா ,இன்னும் இங்கேயே புல்லா முடியல....”
களியக்காவிளை. சக்திவேல்
மெட்ரோ ரயிலில் இரு பெண்கள்...
“என்னடி உன் ஹஸ்பண்ட் சினிமா உண்டா?னு மெஸேஜ் போட்ருக்கார்.. நீ அதுக்கு சோஷியல் டிஸ்டன்சிங் அப்படின்னு பதில் போட்ருக்க, ஒண்ணுமே புரியலையே..”
“அது எங்களுக்குள்ள கோட் வோர்ட், சினிமா உண்டான்னா? ‘அது’ உண்டான்னு அர்த்தம். சோஷியல் டிஸ்டன்சிங்னா “நம்ம மூணு நாள்னு” அர்த்தம்.”
“அடேயப்பா நீ ஐன்ஸ்ட்டீனுக்கே அத்தை பொண்ணுடி...”
முதலாமவர் வெக்கப்பட்டு சிரிக்கிறார்.
யாரோ - சென்னை
Leave a comment
Upload