தொடர்கள்
கவிதை
இலக்கே... சிறகு ....! - சி. கோவேந்த ராஜா.

20210001154007609.jpeg

இலக்கை நோக்கிப்
பயணம் செய்ய...
இறக்கைகளைத் தயார் செய்...
உன் இரு கைகளால்...!

நீ விழித்தெழுவதைக் கண்டு...
சேவல் கூவட்டும்...!

மனங்களை நேசி...!
தினங்களை சுவாசி...!

மலர்களை நேசி...!
நூல்களை வாசி...!

ஆழ்ந்து சுவைத்துப் படி...
தேர்ந்து படித்துச் சுவை...
புலன்களை அழகாக்கு...
புலமையினை செம்மையாக்கு...!

நிகழ்வுகளைக் கண்டறி...!
அனுபவ‌ங்களைப் பட்டறி...!
அறிவுரைகளைக் கேட்டறி...!
இயலாமைகளைச் சுட்டெறி..!

நினைத்திடு... நிகழ்த்திடு...!
புறப்படு... புரிந்திடு...!
வாய்மைகளைப் பகர்ந்திடு...!
மெய்மைகளைப் பகிர்ந்திடு...!
பொய்மைகளைப் பொசுக்கிடு...!

நேர்மையினைப் பறைசாற்று...
கூர்மையினை மறைசாற்று...
தூய்மையினை முறைசாற்று...!
இலக்கை நோக்கி...
இடைவிடாப் பயணம்..
இனிதே தொடங்கட்டும்...!
இயல்பாய் தொடரட்டும்...!

நற்பாதைப் பயணத்தில்...
நட்புக் கரங்கள் குவியட்டும்...
நேசக் கரங்கள் காக்கட்டும்..!

நல்லறங்கள் -
திக்கெட்டும் பரவட்டும்..!
தித்திப்பாய் சிறக்கட்டும்...!

சிகரம் தொடுவோம்...!
சிறப்போடு தொடர்வோம்...!
சிறப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்...!