தீபாவளி கொஞ்சம் காஸ்ட்லியான பண்டிகை என்றாலும் எனக்கு பிடிக்கும். இதுக்கு காரணம் தீபாவளிக்காக என் மனைவி செய்யும் பலகாரங்கள். எங்கள் அம்மா தீபாவளி பலகாரங்கள் அதிகம் செய்தே கொண்டாடுவார். அதே பாணியை என் மனைவியும் பின்பற்றுகிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். தவிர செய்யும் பலகாரங்கள் எல்லாம் சுட சுட தந்து டேஸ்ட் பார்த்து நன்றாக இருக்குதா என்று சொல்லுங்கள் என்பாள்.
தீபாவளி பலகாரம் என்பது தீபாவளியின் போது வீட்டில் எண்ணெய் புகை வருவது சுபிட்சம் நல்லது என்று பலகாரம் செய்வதற்கான காரணங்களை என் பாட்டி சொல்வார் என் அம்மா சொல்வார் என் திருமதியும் அதையே சொல்கிறார். தனது மகளிடம் கூட கடையில எல்லாம் வாங்காதே வீட்டிலேயே செய் உனக்குத் தெரிந்ததை செய் தெரியவில்லை என்றால் கற்றுக்கொண்டு செய் தீபாவளியின் வழி எண்ணை புகை நல்லது என்று உபதேசம் செய்வார் என் மகளும் கிட்டத்தட்ட அப்படியே செய்வார்.
நான் நண்பர்கள் சிலரிடம் தீபாவளி பலகாரம் பற்றி கேட்டபோது என் மருமகள் எல்லாவற்றையும் பக்கத்து தெருவில் ஒரு மாமி செய்து தருகிறார் அவர்களிடம் மொத்தமாக வாங்கி விடுவாள் என்றார். இன்னொருவர் ஒரு சமையல்காரர் பட்சணம் எல்லாம் நன்றாக செய்வார் .
ஒவ்வொரு தீபாவளிக்கும் அவரிடம் தான் வாங்குவோம் என்றார். ஆக தீபாவளிக்கு பலகாரம் வீட்டில் செய்வது என்பது ரொம்பவும் அரிதான விஷயமாகிவிட்டது என்பது தெரிந்தது . சமூக வலைத்தளத்திலும் தீபாவளி பலகாரம் விற்பனை ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன என்பதையும் நான் அடிக்கடி பார்த்தேன் இது எந்த அளவுக்கு சரியான போக்கு என்று எனக்கு தெரியவில்லை ஏதோ என் மனைவி பழைய நடைமுறையை மாற்றாமல் செய்கிறாள் என்று சந்தோஷப்பட்டேன்.
பங்கு ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கும் போது "இருக்கட்டும் அம்மா தெரியாது தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்போது தான் தெரிந்து கொள்வது நான் தினந்தோறும் போக வேண்டியது வேலை செய்ய வேண்டியது அங்குதானே நானே விசாரித்து தெரிந்து கொண்டு போய்விடுகிறேன் கவலைப்படாதே "எந்த ஒரு இளம் பெண் சொன்னார் செல்பேசியில் அவரது உறுதி எனக்கு பிடிச்சிருந்தது.
சமீபத்தில் ரயிலில் பயணிக்கும் போது பக்கத்தில் இருந்த வாலிபரிடம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் கூலாக ஆங்கிலத்தில் நான் ஆண் பாலியல் தொழிலாளி என்று சாதாரணமாக கூச்சப்படாமல் சொன்னார். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது.
Leave a comment
Upload