தொடர்கள்
மக்கள் கருத்து
மகளிர் ஃபிட்னஸ் : இப்படியுமா??? – பால்கி

20241002000159453.jpeg

ஒரு புதன் கிழமை, மாலை வேளச்சேரி ரயில் நிலையத்தருகே இருக்கும் பஸ் ஸ்டாண்டில் மடிப்பாக்கம் செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தேன்

எனது பஸ் வந்த பாடில்லை. பணி முடிந்து திரும்பும் சமயம் வேறு. நல்ல கூட்டம். மகளிர் விடியல் பயணம் என்று தலையில் பச்சைக் கலர் பல்பில் மினுத்துக் கொண்டு புத்தம் புதிய பஸ்ஸுகள் ஸ்டாப் தாண்டி நின்றன ஏனோ ஆண்கள் மட்டுமே ஓடிச் சென்று ஏறிக்கொண்டு செல்ல முடிந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் மகளிர் பஸ் பின்னால் போவதும் அவர்கள் ஏறும்முன் பஸ் கிளம்பி விடுவதுமாக இருந்தது.

ஒருவேளை பஸ் கிட்ட போன பின் கூட்டம் அதிகமிருப்பதால் ஏற் முடியவில்லையோ என்று எண்ணிக்கொண்டேன்.

அப்படியே நான்கைந்து மகளிர்களிடையேயான சம்பாஷணை கேட்க நேர்ந்தது.

ச்சே என்ன பொழப்பு இது? பெண்களைக் கண்டால் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை. அதான் தள்ளி நிறுத்துற மாதிரி நிறுத்தி ஆண்கள் ஓடிப் போய் பஸ்ஸில் ஏறியதும் பஸ் கிளப்பிடுறாய்ங்க.

ஏம்மா நீங்க ஃபிட்டா இருந்தா ஓடிப் போய் ஏறலாமே என்றதும் பொரிந்து தள்ளி விட்டார்கள்.

சார்…நீங்க வேற. யார் கேட்டா இந்த ஃப்ரீ. பெண்களைக் கண்டால் வண்டியே நிறுத்தமாட்டேங்கறாங்க. ஃப்ரீ தான் அதுக்குன்னு எத்தனை பஸ்ல ஏறுவீங்க? எததனை பஸ் ஏறி இறங்குவீங்க? ஒழுங்கா எங்க பஸ்ல ஏறிபோனாலே ஒரு மணிக்கு மேல ஆவுது. வீட்டுல பெண்களுக்கு வீட்டு வேலை ரெடியா காத்திட்டு இருக்கு.

இந்த கஷ்ட்டத்தில், ஸ்கூல் மாணவிகள், கர்பிணிப் பெண்கள், வயசான மூதாட்டிகளும் அடி படுகிறார்கள் என்று கூறுகிறார் அடையாறில் மருத்துவ மனையொன்றில் பணிபுரியும் இளவயது மங்கை. பளிச்சென்று,

இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக சொல்ல அங்கு கூடியிருக்கும் மற்ற பெண்களும் ஆதரிக்கின்றனர்.

இப்படி பேசிக்கொண்டே இருக்கும் போதே மகளிர் விடியல் பயணம் என்று பச்சைக் குத்திக்கொண்டு ஸ்டாப் தாண்டி ஒரங்கட்டுவதும் …மகளிர் ஓடிச் சென்று ஏமாறுவதும் நடந்து கொண்டு தான் இருந்தது.

ஒரு பெண்மணியிடம் சீட்டை கேட்டு வாங்கி ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.

2024925213119856.jpg

இனி மேலும் சொல்ல என்ன இருக்கு?

பல மாநிலங்களில் இந்த இலவச பயணம் இருக்கிறது. சிஸ்டத்தில் தவறில்லை என்று வைத்துக் கொண்டாலும், அதை நடைமுறைப்படுதுவதிலே தான் குளறுபடி போலும். ஹூம்.