திருமலை பிரமோற்சவம்
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
-திருவாய்மொழி (நம்மாழ்வார்)
முன்பொரு காலத்தில் ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுத்து பல்வகையான உணவுகளை படைத்து வந்தனர். அப்போது கண்ணன் சூரியன், வருணன், கோவர்த்தன மலை இவர்கள் சேர்ந்தே உணவு சமைக்க நமக்கு விறகும், உண்பதற்கு காய், கனிகளும் , பசுக்கள் உண்ண புல்லும் தரும்போது இந்திரனுக்கு ஏன் நாம் விழா எடுக்க வேண்டும் என்று ஆயர்களை தடுத்து நிறுத்திவிட்டார்.
இந்திரவிழா நடைபெறவில்லை என்று அறிந்ததும் கோபம் கொண்ட இந்திரன் கடும் புயல் காற்றுடன் அதிகன மழையும் உருவாக்கி ஆயர்களை அஞ்சி நடுங்கும் படி செய்தான். இந்திரன் கோபத்தினை கண்ட கண்ணன் கோபப்படவில்லை .
தன் ஒரு விரலால் கோவர்தன மலையை உயர்த்தி பிடித்து ஆயர்குல மக்களை கண்ணன் அதிகனமழை மற்றும் கடும் புயலில் இருந்து காப்பாற்றினான் .இந்திரனுக்கு அகந்தை அழிய வேண்டும் என்றும் அவனுக்கு புத்தி வரவேண்டும் அத்துடன் திருவேங்கடமலையில் இருக்கும் எம்பெருமானை சென்று சேர், நம் வினை ஓயுமே ,நமது பாவங்கள் யாவும் தொலைந்து போகுமே என்பதற்காகவே கண்ணனின் "குன்றம் ஏந்தி குளிர்மழை காத்த" விளையாட்டு என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் பசூரம் பாடி உள்ளார்.
திருமலையில் எழந்தருளியிருக்கும் திருவேங்கடமுடையானுக்கு ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி மாத பிரமோற்சவம் வைகானச ஆகமப்படி கோலகலமாக தொடங்கி நிறைவடைகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினுடைய தர்மகர்த்தா ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய கோவில் கேள்வி அப்பன் சடகோப ராமாநுஜ ஜீயர் சுவாமிகளின் தலைமையில் நான்கு மாட வீதிகளில் எம்பெருமான் சேவை சாதிக்கும் போது பன்னிரு ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்கள் பாராயணம் தான் பாடி சேவிக்க வேண்டும் என்பது இராமாநுஜருடைய நியமனம், கட்டளையை இந்நாள் வரை ஸ்ரீவைஷ்ணவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலை எம்பெருமானுக்கு பட்டு அங்கவஸ்திரம் காணிக்கையாக தந்து சிறப்பித்தார்.
2025 ஆண்டுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டர்கள் , பஞ்சாங்கம் மற்றும் டைரிகளை வெளியிட்டார்.
பிரமோற்சவ நாட்களில் வி ஐ பி தரிசனம் முதல் ஆர்ஜித சேவைகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது.
திருமலை பிரமோற்சவ சாமி புறப்பாடு நிகழ்வுகளை தலைமை அர்ச்சகர் கோபிநாத் தீட்சதலு நடத்தி வைத்தார்.
பூலோக வைகுண்டம் என்று ஏழுமலைகள் சூழ்ந்த திருமலையை பக்தர்கள் வர்ணித்தப்படி நின்ற கோலத்தில் இருக்கும் எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
கிட்டதட்ட 5 லட்சம் பக்தர்கள் திருமலையில் கருட சேவை நான்கு மாடவீதி மற்றும் திருமலையில் குவிந்து விட்டனர். திருப்பதி காவல்துறை எஸ் .பி . எல்.சுப்புராயுடு தலைமையில் காவல்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு எந்தவித சிரமும் ஏற்படாதவாறு திறம்பட செயல்பட்டனர்.
கருட சேவையின் போது பக்தர்கள் கிட்டதட்ட 12 மணி நேரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் நான்கு மாட வீதிகளில் அமர்ந்து எம்பெருமானை கண்குளிர தரிசித்து விட்டு சென்றனர்.
அடுத்த பிரமோற்சவம் நடக்கும் போது திருமலை வரும் பக்தர்களுக்கு சிரமமின்றி கூடுதல் கழிப்பிட வசதி செய்து தரப்படும் என கோயில் சேர்மன் மற்றும் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடி களைத்த கொடுத்து அனுப்பிய வஸ்திரம், மாலை ,கிளிகள் எம்பெருமானுக்கு சமர்பணம் செய்யப்பட்டது.
கருட சேவையின் போது கருடாழ்வார் தாங்கி வரும் எம்பெருமான் திருப்பாதங்களை காலையில் யானை மீது வைத்து மாடவீதிகளில் திருவுலா நடந்தது.
கருட சேவையின் போது திருமலை எம்பெருமான் மூலவர் விக்கிரத்தில் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் மகர கண்டி , சஹஸ்ர நாம ஹாரம், லஷ்மி ஹாரம் போன்ற விலைமதிப்பற்ற தங்க , வைடூரிய ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு நான்கு மாட வீதிகளில் காட்சி அளித்தார்.
15 மாநில கலைக்குழுவினர் 28 டீம்களாக மாறி மாட வீதிகளில் எம்பெருமான வாகன சேவையின் முன்பு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சென்னை கேசவ பெருமாள் கோயிலிருந்து வந்த திருப்பதி குடைகள் பிரமோற்சவத்தில் எம்பெருமான் மாடவீதிகளில் வரும் போது ஜொலிப்புடன் மின்னியது.
திருமலை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளை பதிவிட்டுள்ளோம்.
த்வஜரோஹனம்
பெரிய ஷேச வாகனம்
சின்ன ஷேச வாகனம்
ஹம்ச வாகனம்
சிம்ம வாகனம்
முத்து பந்தல் வாகனம்
கற்பக விருட்ச வாகனம்
சர்வ பூபால வாகனம்
மோகினி அவதாரம்
கருட வாகனம்
ஹனுமந்த வாகனம்
தங்க ரத ஊர்வலம்
கஜ வாகனம்
சூர்ய பிரபை வாகனம்
சந்திர பிரபை வாகனம்
ரதோற்சவம்
குதிரை வாகனம்
சக்ர ஸ்நானம்
********
திருமலை கோயில் எங்கும் பூ அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திருமலை கோயில் பிரகாரம் அருகே செல்லும் போது நெய்யால் செய்யப்படும் லட்டு வாசனை பக்தர்களின் மூக்கை துளைத்தது.
Leave a comment
Upload