ஊட்டிக்கு வருபவர்களை வரவேற்கும் இடம் சேரிங் கிராஸ் .
இங்கு உள்ள முக்கோண வடிவில் அமைந்துள்ள கார்டன் மற்றும் அதில் அமைந்துள்ள கம்பிரமான வரலாற்று சிறப்பு மிக்க ஆதாம் நீரூற்று .
ஊட்டியின் வரவேற்பு வாயிலாக அமைந்துள்ளது .ஆதாம் நீரூற்று அமைந்திருக்கும் இடத்தில் மெலனாக்சிலோன் (கருங்காலி ) என்ற அழகிய மரம் இருந்துள்ளது .
அதை அப்புறப்படுத்தி 1888 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி கேன்சர் நோயினால் இறந்து போன கவர்னர் டபிள் .யூ .ஆடம் நினைவாக நீரூற்று அழகாக அமைக்கப்பட்டது .
ஆரம்பத்தில் ஸ்டீபன் சர்ச் மாவட்ட ஆட்சியர் சந்திப்பில் நிறுவப்பட்ட ஆதாம் நீரூற்று தனி தனியாக கழற்ற பட்டு சேரிங்கிராஸ் கொண்டுவந்து பொருத்தப்பட்ட ஒன்று .
இந்த முக்கோண கார்டனும் ஆதாம் நீரூற்றும் 1972 கலை பொக்கிஷங்கள் சட்டப்படி பழமை சின்னமாக பாதுகாக்க பட்டு வரும் ஒன்று என்று கூறப்படுகிறது .
இன்று வரை வீற்றிருக்கும் இந்த அழகிய முக்கோண கார்டன் தான் ஊட்டியின் முதல் கார்டன் என்பது குறிப்பிடத்தக்கது .
1832 ஆம் ஆண்டு வரையப்பட்ட சேரிங்கிராஸ் ஓவியத்தில் மெலனாக்சிலோன் மரம் முக்கோண கார்டன் மத்தியில் இருப்பதை பார்க்க முடியும் .1870 முதல் ஊட்டி சென்னை மாகாணத்தின் கோடை தலைநகராக திகழ்ந்தது .அப்பொழுது இங்கு வரும் பிரிட்டிஷ் கவர்னர்கள் மற்றும் வைஸ்ராய்களை வரவேற்கும் மையமாகஊட்டியில் உள்ள சேரிங் கிராஸ் மற்றும் ஆதாம் நீரூற்று திகழ்ந்தது .
1902 ஆம் ஆண்டு ஊட்டிக்கு விஜயம் செய்த கர்சன் பிரபு ஊட்டியின் அழகு ஆதாம் நீரூற்று மற்றும் சேரிங் கிராஸ் பகுதியில் வரவேற்பு கொடுத்ததை என் மனது கொள்ளை கொண்டது என்று கூறியுள்ளார் .அதன் பின் ஊட்டிக்கு வரும் அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கு வரவேற்பு கொடுப்பது இன்று வரை நடந்து வருகிறது .
1904 ஆம் வருடம் ஊட்டி ரயில் நிலையம் சேரிங் கிராஸ் பகுதியில் கட்டும் திட்டத்தை முன்மொழிந்தார் அப்போதைய கவர்னர் அம்பத்தில் .அன்றைய கலெக்டர் முல்லய் பொது மக்களின் வாக்கெடுப்பு மூலம் ரயில் நிலைய ஐடியாவை கைவிட்டு .செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியில் ரயில்நிலையம் உருவாகியது .
சேரிங் கிராஸ் பகுதி கடைகள் மற்றும் போக்குவரத்து அதிகமாக ஆதாம் நீரூற்று கார்டனின் முக்கோண வடிவை குறைக்க எடுத்த முயற்ச்சியை ஊட்டி வாசிகள் எதிர்க்க அப்போதைய ஆட்சியர் தடுத்து நிறுத்தினார் .
இது ஒரு கலை பொக்கிஷம் என்பதால் இதை சுற்றி எந்த விளம்பர அறிவிப்பு பேனர்கள் போர்டுகள் கட்சி கொடிகள் நிறுவ கூடாது என்று அவ்வப்பொழுது அழுத்தம் கொடுத்துவருகிறார்கள் உள்ளூர் வாசிகள் .தற்போது ஆதாம் நீரூற்று நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது .
ஓரளவுக்கு பராமரிப்பு இருந்தாலும் தற்போது தேவையற்ற போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன .
கடந்த வாரம் திடீர் என்று பிளாஷ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட I ❤Ooty என்ற பேனர் பொருத்தப்பட்டு ஆதாம் நீரூற்றின் கலை அழகை கெடுத்துள்ளது .பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்ட நகர் ஊட்டியும் நீலகிரி மாவட்டமும் என்பது குறிப்பிடத்தக்கது .சேரிங் கிராஸ் அருகில் உள்ள கமர்ஷியல் சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்வியா தண்ணீரு மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா பார்க்கிங் தளத்தை அப்புறப்படுத்தி அழகான கலர்புல் நடைபாதையை உருவாக்கினார்கள் .
ஒரு மாதத்திற்குள் பழையபடி பார்க்கிங் உருவானது இதற்கு யார் காரணம் என்பது மர்மம் .நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறும்போது ,
"ஊட்டியில் என்ன தான் நடக்கிறது .வரலாற்று சிறப்பு மிக்க மலைகளின் அரசியின் ஒரு முக்கிய அடையாளமாக திகழ்கிறது ஆதாம் நீரூற்று இந்த அழகிய லேண்ட் மார்க்கை எவரும் தொடக்கூடாது டோன்ட் டச் என்று தான் கூறவேண்டும் .இந்த முக்கோண கார்டனின் அழகை கெடுக்க கூடாது அதன் முக்கோண அளவை குறைக்க கூடாது மற்றும் எதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன ஐ லவ் ஊட்டி அது தேவையற்றது .காந்தி சிலைக்கும் ஆதாம் நீரூற்றுக்கு இடையில் உள்ள சாலையை ஏன் பிளாக் செய்து காவல்துறை வாகனங்களை நிறுத்துவது சரியில்லை .ஆதாம் நீரூற்றை வாகனங்கள் சுற்றி செல்வது போக்குவரத்துக்கு ஏகப்பட்ட இடைஞ்சல் .அதே போல கமர்ஷியல் சாலையில் நடைபாதை உருவாக்கி ஒரு மாதத்தில் மீண்டும் கட்டண பார்க்கிங் உருவாகியது ஒன்றுமே புரியவில்லை .நான் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதை எல்லாம் பற்றி கடிதம் கொடுத்து பேசியுள்ளேன் இனி எந்த மாற்றமும் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார் " என்று கூறினார் .
மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் மிகுந்த ஆதங்கத்துடன் பேசினார் ,
" ஊட்டியின் அழகே நடந்து செல்லும் நடைபாதைகள் தான்.கடந்த மாதம் கமர்ஷியல் சாலையில் பார்க்கிங் இடத்தை அப்புறப்படுத்தி அழகிய நடைபாதை அமைத்தனர் மிகவும் சிறப்பாக இருந்தது ஒரு மாதத்திற்குள் அதுமீண்டும் பார்க்கிங் தளமாகியது ஷாக்கான ஒன்று .ஏன் மாற்றினார்கள் என்பது மிக பெரிய கேள்விக்குறி ?.
அதே போல ஊட்டியின் ஒரு அடையாளம் பொக்கிஷம் ஆதாம் நீரூற்று அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது .பாரம்பரிய சின்னங்களை அதிகாரிகளும் சிலரும் மாற்றவோ அழிக்கவோ முயல கூடாது பாதுகாக்க வேண்டும் " என்று கூறினார்
.
லண்டன் நகரில் உள்ள முக்கிய பகுதி சேரிங் கிராஸ் ரயில் நிலையமும் உண்டு .ஊட்டி ஆதாம் நீரூற்று போல அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
Leave a comment
Upload