தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 105 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2024909220913353.jpg

ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

கடந்த 100 வாரங்களாக ஸ்ரீ மகா பெரியவா , ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ பகவான் ரமணர் ஆகியோரின் அனுகிரஹங்களை பெற்றோம். தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

காலடி - ஸ்ரீ ஆதி சங்கரர் அவதார ஸ்தலம்.

ஸ்ரீ சங்கரரை அனுபவித்த அனைவருக்கும் அவரது பிறந்த இடமான காலடி தெரிந்திருக்கும். கேரளவில் உள்ள காலடி அனைவரின் வாழ்க்கையிலும் காணவேண்டிய பட்டியலில் இருக்கும். ஸ்ரீ சங்கரர் அவதரித்த இடத்தை பார்க்கும் ஆவல், அவர் நடந்த இடங்கள், தரிசித்த கோயில்கள் என அனைத்தும் பார்க்கும் போது ஸ்ரீ பகவத்பாதாளையே தரிசித்த உணர்வு கிடைக்கும்.

இந்த காணொளி நம்மை காலடிக்கே அழைத்து செல்லும்.