தொடர்கள்
அரசியல்
மீண்டும் அதிமுக -பாஜக கூட்டணி? -விகடகவியார்

20240807071630773.jpg

"இன்னும் அரை மணி நேரத்தில் விகடகவியார் வரப்போகிறார் "என்று ஆபீஸ் பையன் நம்மிடம் சொன்ன போது உனக்கு அனுப்பியது போல் எங்களுக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் போய் சேப்பங்கிழங்கு ப்ரை எங்கோ விற்கிறார்களாமே தேடி பிடித்து வாங்கி வா என்று அனுப்பி வைத்தோம். .

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "தலைவர்களுக்கு இந்த மாதம் பயண யோகம் போலிருக்கிறது "என்று சொல்லிவிட்டு முதல்வர் அமெரிக்கா போனதும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் கனிமொழி சிங்கப்பூர் போனார்கள் என்றார். "அவர்களுக்கு சிங்கப்பூரில் என்ன வேலை"என்று நாம் கேட்டதும் சிங்கப்பூரில் மருத்துவ ஆலோசனைக்காக அமைச்சர் துரைமுருகன் போனார். கனிமொழி அவரது கணவரை சந்திக்க மற்றும் சில தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிங்கப்பூர் பயணம். ஆனால், இருவரும் முறைப்படி முதல்வரிடம் தகவல் சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார்கள் விகடகவியார்.

அப்போது ஆபீஸ் பையன் சேனைக்கிழங்கு ஃப்ரை எடுத்து வந்து தந்ததும் அவருக்கு கண்ணால் நன்றி சொல்லிவிட்டு எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். நாம் "அண்ணாமலைக்கு பதில் கட்சியை நடத்த ஒரு குழு போட்டு இருக்கிறார்கள் "என்று நாம் ஆரம்பித்ததும் குழு போட்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் அண்ணாமலை ஆதரவாளர்கள் யாருமே இல்லையே. குறிப்பாக அண்ணாமலைக்கு வக்காலத்து வாங்கி பேசும் நாராயணன் திருப்பதி, கரு நாகராஜன் ஆகியோர் பெயர் இல்லை பெண்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தலித்கள் யாரும் இல்லை என்று குழு அமைக்கப்பட்ட உடனேயே கூடவே விமர்சனமும் வரத் தொடங்கி இருக்கிறது. ஆனால், எச்.ராஜா தலைமையில் குழு என்று அறிவிப்பு வந்ததும் அண்ணாமலை எதிர்ப்பாளர்கள் ஹேப்பி. எச்.ராஜாவும் ஆளுநர் அமித்ஷா என்று எல்லோரும் சந்தித்து பேசி இருக்கிறார். அமித்ஷா எச்.ராஜா சந்திப்புக்கு அடுத்த சில மணி நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அப்போது ஜி.கே.வாசன் பாராளுமன்றத் தேர்தல் போல் ஏமாறக்கூடாது. அதிமுகவை நமது கூட்டணியில் கொண்டு வர வேண்டும் என்று அமித்ஷாவிடம் யோசனை சொல்லி இருக்கிறார். நாங்கள் முயற்சி செய்தோம் நடக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் பேசுங்கள் அதே சமயம் நான் இப்போது உங்களுக்கு எந்த உத்தரவாதமும் தர முடியாது. பிரதமரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் அமித்ஷா என்றார் விகடகவியார்.

"சரி மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி வருமா" என்று நாம் கேட்டபோது சமீபத்தில் நான் ஜி.கே.வாசன் அவர்களை சந்தித்தேன். அவர் திமுக அமைப்பு ரீதியாக கட்டுக்கோப்பாக இருக்கிறது. அவர்களிடம் பணமும் இருக்கிறது. ஆனால், இந்த ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தியும் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வலுவான கூட்டணி அவசியம். எல்லோரும் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள் என்ன செய்ய என்று நம்மிடம் அலுத்து கொண்டார்.

ஜி.கே.வாசன் என்றவரிடம் "பாமக நிலைமை என்ன ?" என்று நாம் கேட்டதும் அவர்கள் அதிமுக பக்கம் போக இப்போது தயாராகி விட்டார்கள். அதனால் தான் அவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்கிறார்கள் என்ற விகடகவியாரிடம்

" சரி அதிமுக கருத்து என்ன ? "என்று நாம் கேட்டபோது அண்ணாமலை தலைமை அவர்கள் விரும்பவில்லை. அதிமுக தலைமையில் கூட்டணி என்பதுதான் அவர்கள் முடிவு. அதேசமயம் பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக நாம் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அதற்கு ஏற்ற கட்டமைப்பு தமிழக பாஜகவில் இல்லை. கட்சியை வளர்ப்பதை விட வாய் சொல் வீரர்கள் தான் பாஜகவில் இப்போது அதிகம். இதுவும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெரியும்.

அதேசமயம் பாஜக அதிமுக கூட்டணி வந்தாலும் வரக்கூடும் என்று சொல்லிவிட்டு எழுந்தார் விகடகவியார்.