முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்கியே அனைத்து காரியங்களையும் தொடங்குவது தொன்று தொட்டு வரும் மரபு.
பிள்ளையாரை வணங்கினால், துன்பங்கள் தொலைந்தோடும், பாதகங்கள் சாதகமாகும்.
பிள்ளையார் எளியோருக்கும், எளியர், அடியாருக்கு அடியார்.
நினைத்த நேரத்தில் பிள்ளையாரப்பா!! என்றவுடன் ஓடோடி வந்து வினைகளைத் தீர்ப்பவர்…
பிள்ளையாரை மஞ்சள், சாணம், சந்தனம், மற்றும் எதில் வேண்டுமானாலும் எளிதில் ஆவாகனம் செய்திடலாம். அவ்வளவு எளிமையானவர்.
எல்லா பிள்ளையாரும் ஒன்றுதான் என்றாலும் எந்தெந்த பொருளில் பிள்ளையார் பிடித்து வணங்குகின்றோமோ அதற்கேற்றவாறு பலனும், நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி படச் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.காரிய சித்தி உண்டாகும்.
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கச் செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருக வைப்பார்.
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும், எதிரிகளும் நண்பர்களாவார்கள்.
வெள்ளை எருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும், செல்வம் அதிகரிக்கும்.
விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள்
நீங்கும் சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி படச் சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
பசுஞ்சாண பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
Leave a comment
Upload