“என்ன பாட்டி அநியாயமா இருக்கு.? .குடும்ப நல கோர்ட்ல் எனக்கும் கிஷோர்க்கும் விவாகரத்து கொடுக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க!
“கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருக்கு. இதன் அடிப்படையில் தான் , விவாகரத்து கேட்டுருக்கே!”
“மரம் கொத்தி பறவை மாதிரி தினமும் ராத்திரி உன் மனதைக் கொத்தி எடுத்தது;.உன் ஃபோன் கால்களைச் செக் பண்ணியது எல்லா வற்றையும் சொன்ன பிறகும் இந்தத் தீர்ப்பா? “
“என்னைவிட அதிகம் படிப்பு படிச்சவ என்கிற கர்வம் . சுப்ரியாரிடி காம்ப்ளக்ஸ் அவங்களுக்கு இருக்கு; ஆனாலும் அதையெல்லாம் பெரும் தன்மையாக மறந்து, ரேகாவுடன் வாழ விரும்புகிறேன்.”
“ சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு , நாங்க இரண்டு பேரும் ஒண்ணா நின்னு கிட்டு இருக்கும்போது, யாரோ எடுத்த ஃபோட்டோவை . நீதிபதி கிட்ட காமிச்சு” “நாங்க இரண்டு பேரும் சந்தோசமாகத் தான் இருக்கோம்”. .
“இந்த ஃபோட்டோ ஒண்ணே போதும். நீங்க இரண்டு பேரும் ஒத்துமையாக இருக்கீங்கன்னு காமிக்குது! “
“ராத்திரி நடக்கிற சண்டைக்கு எல்லாம் விவகாரத்து கொடுக்க முடியாது”. ஆதாரம் வேணும்.”
“சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் விவகாரத்து கேட்டு மனு கொடுத்து இந்தக் குடும்ப நல கோர்ட்டின் நேரத்தை வீணாக்காதீங்க?”!
“நீங்க எல்லாப் பிரச்சினையையும் மறந்துட்டு, ஒண்ணா வாழ முயற்சி பண்ணுங்கன்னு சொல்லிட்டார் நீதிபதி” .
“கிஷோர் ;.தான் பெரிய பிசினஸ் புள்ளி ஆச்சே.” பணத்தாலே எல்லாத்தையும் சரிகட்டி இருப்பான்.”
“சரி சரி,நீ வருத்தப்படாதே ! எனக்குத் தெரிஞ்ச வக்கீல் மூலம் நாம
உயர்நீதி மன்றத்துக்கு இந்தத் தீர்ப்பை வைச்சு அப்பீல் பண்ணுவோம்”
நீ எப்போதும் போலக் காலேஜ் வேலைக்குப் போயிட்டு வா. மனசை ரிலாக்ஸா வைச்சுக்கோ”!
அன்று பாட்டி சொன்ன அட்வைஸ் கேட்டு நடந்தால், இப்படி அவசர கோலம் மாதிரி தன் திருமண வாழக்கை அமைந்து இருக்குமா?
அப்பா, அம்மா ,இல்லாத தன்னை ,பாட்டி தான் வளர்த்து பி. ஹெச். டி பட்டம் வரை வாங்க வைச்சு, காலேஜில் புரோபசராக இருக்கக் காரணம் அவங்க தான்.
ஆனாலும் தன்னுடன் படித்த கிஷோர் ஒவ்வொரு நாளும் நா. முத்துகுமாரின் கவிதையான
“உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, கண்மணியே!
தந்தையும் தாயையும் இழந்து வந்தாய் - தோழியே!
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது - எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.”
இப்படிச் சொல்லி,சொல்லி அவளைத் தன் மேல் கண்மூடி தனமான காதல்
வரும்படி நடந்து கொண்டான்.
பாட்டியிடம் சம்மதம் கேட்கும் போது ,”இத பாரு ரேகா இங்கு ஜாதியோ மதமோ நான் பார்க்கல;. அவங்க அப்பா நகரத்தில் பெரிய பிசினஸ் புள்ளி;. இப்ப கிஷோர் அந்தக் கிரானைட் தொழிலை செஞ்சுக்கிட்டு வரான்”
“அவன் பிஸினஸில் அடிக்கடி டூர் போய், அங்குப் பல பேரிடம் பழக வாய்ப்பு இருக்கு.”அவர்கள் எதையும் தன் பணப் பலத்தினாலும் ,அரசியல் பின் புலத்தினாலும் ஜெயிப்பார்கள்.”
“உன்னை மாதிரி 09 to 5 மணி வரை வேலை பாக்கிற நல்ல பையனை நான் கட்டி வைக்கிறேன்.”
ஆனாலும் கிஷோர் மீது உள்ள காதல் கண்ணை மறைத்தது
பாட்டி பேச்சை மீறும் அளவுக்குப் போனது.ஒரு நன்னாளில், பாட்டி சம்மதம் இல்லாமலே கல்யாணம் நடந்தது .உடனே தனிக்குடித்தனம். .
ஆரம்பத்தில் காதல் மயக்கம்; புதுப் பொண்டாட்டி ஸ்பரிசம் எல்லாம்.
அடுத்த வருடமே அவன் சுய ரூபம் தெரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு இரவும் அந்தரங்க பொழுதுகளில் தன்னையும், தன்னுடன் வேலை பார்க்கும் முகேஷையும் இணைத்து பேசுவது,;
ஒரு நல்ல புடவை கட்டிக்கொண்டு போனால் ரேகாவை சந்தேகப்பட்டு, 'யாரை மயக்க இப்படி டிரஸ் பண்ணற ?முகேஷ் போறாதா?.
நீ, அழகாயிருக்கேன்னு உனக்குத் திமிரு! அதான் இப்படி மினுக்கிட்டு திரியற...' என்று, வாய்க்கு வந்தபடி பேசுவது;அவள் செல்போனை அவள் தூங்கும் போது செக் செய்வது, போன்ற செய்கைகள் ரேகாவுக்குப் பிடிக்காமல் போனது.
“நா. முத்துகுமார் கவிதையைப் பற்றிச் சொன்னது? அதெல்லாம் பொய்யா?”.
“இத பாரு ரேகா! காதலிக்கும் எந்த ஆண்களும், தனக்குப் பிடித்தவளை, இம்ப்ரஸ் செய்ய இப்படி உளருவதுண்டு. நிழல் வேறே நிஜம் வேறே!”
ஒரு நாள் இரவு மது அருந்தி தள்ளாடி வந்த போது ,”என்ன கிஷோர் இந்தப் பழக்கம். எத்தனை நாளாக இருக்கு?.
“ரேகா என் தொழிலில் இதெல்லாம் சகஜம். நாங்க பிசினஸ் பீப்பிள்.அப்படி தான் இருப்போம்.”
.அன்று இரவு தன் ரூமில் மொபைல் பார்த்துக்கொண்டிருந்த ரேகா, கிஷோர் ரூமுக்கு வந்ததது தெரிந்ததும், தன் போனை அங்கிருந்த டேபிள் மீது நேராக வைத்து விட்டு, கட்டிலில் அமரவும்,கிஷோர் அவளை நெருங்கவும் ,
நீ படிச்சவன்தானே. குடி போதையில் இப்படிக்கிட்ட வரே. வெக்கமா இல்லை?என்று கோபமாகச் சொன்னதும் ,வாதங்கள் வார்த்தைகளாக வெடித்தன.
அன்றும் இவன் டார்ச்சர் எல்லை மீறியது.வாக்கு வாதம் அதிகமாகி ஒரு கட்டத்தில், கோபத்தின் எல்லைக்குப் போய் அவள் துப்பட்டாவினால், அவள் கழுத்தை நெறிக்கும் அளவுக்குப் போயிருந்தான்.
இவன் வட நாட்டிலிருந்து வந்தவன் ,அங்கு உள்ள பெண் தெய்வமான நளாயினி, சீதை மாதிரி என்னை நினைத்துக் கொண்டு, கணவனே கண்கண்ட தெய்வமாக இருக்கணும்ன்னு ஆசைப்படுகிறான்..நான் அப்படி அல்ல. எனக்குத் தன்மானம் சுய கௌரவம் இருக்கு!
அடுத்த நிமிடமே.பாட்டி வீட்டுக்கு கிளம்பினாள்.
“பாட்டி என்னை மன்னிச்சிடு பாட்டி! நடந்த விபரத்தை சொன்ன பிறகு , பாட்டி அட்வைஸ் படி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தீர்ப்பு ரேகாவுக்குச் சாதகமில்லமால் போனது.
தீர்ப்பு வந்த பிறகும், ஒவ்வொரு நாளும் காலேஜுக்கு வந்து, “என்னை மன்னிச்சிடு ரேகா! நாம் சேர்ந்து வாழுவோம்” என்று கெஞ்சி பார்த்தான்
கிஷோர்..
அடுத்த வாரமே பாட்டி அறிமுகப்படுத்திய வக்கீல் மூலம் குடும்ப நல கோர்ட் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில்அப்பில் செய்தாள்.
இரண்டு மூன்று வாய்தா வுக்குப் பிறகு, டிவிஷன் நீதிபதிகள் தன் தீர்ப்பில் கிஷோர் காட்டும் ஒரு ஃபோட்டோ மூலம் அவர்கள் இருவருக்குள் பிரச்சனை ஏதும் இல்லை என்றும், போட்டோவை காண்பித்து மனம் ஒத்த தம்பதிகள் என்றும் சொல்ல முடியாது.
மேலும் ரேகாவின் வாதத்தைக் குடும்பநல கோர்ட் முழுமையாக விசாரித்தாகத் தெரியவில்லை.கிஷோர்க்கு ஆதரவாக ஒரு பட்ச தீர்ப்பாகத் தெரிவித்து இருக்கிறது.அந்தத் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை.
சந்தேகப் பேய் பிடித்து ரேகாவை துன்புறுத்தியது, அவள் கழுத்தை ,அவள் துப்பட்டாவினல் இறுக்கி கொல்ல பார்த்தது, எல்லாமே ரேகாவின் மொபைல் மூலம் தெள்ள தெளிவாகிறது.இந்த எவிடன்ஸ் ஒன்றே போதும்; ரேகா இனி கிஷோருடன் வாழ முடியாது.
மேலும் ரேகா தான் சம்பாதிப்பது தனக்குப் போதும் என்றும்,ஜீவனாம்சம் தேவை இல்லை என்றும் தன்னைக் கொலை செய்ய வந்த முயற்சிக்கு, அவனை மன்னிப்பா தாகவும், சொன்னது ரேகாவின் பெரும்தன்மையைக் காட்டுகிறது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து ரேகாவிற்கு இந்த நீதி மன்றம் விவகாரத்து
வழங்குகிறது .
தீர்ப்பின் நகலை வாங்கிக் கொண்டதும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான். கிஷோர்...
வெளியே வந்த பாட்டி“அது சரி ரேகா எப்படி அந்த ஃபோன் எவிடென்சே காமிச்சே?”.
“இன்னிக்கு கோர்ட்டுக்கு கிளம்பும் போது ஃபோனில் உள்ள சிலவற்றை டெலீட் செய்யும் போது, அன்று கை கலப்பில் கிஷோர் என்னைக் கொல்ல வந்தது ரெகார்ட் ஆகியிருக்கு.”
அன்று இரவு ரூமில் என்னை அறியாமல் அவசரத்தில், என் விரல் எப்படியோ கேமரா ஆப்பில் வீடியோ பட்டன் மேல்பட்டு இருக்கிறது. எனக்கும் அன்னிக்குத் தெரியாது.
“இன்று கிளம்பும் போது தான் பார்த்தேன். கடவுள் நம் பக்கம் தான் என்பது இதன் மூலம் தெரிஞ்சுது”.
“இதையே எவிடென்சா கோர்ட்டில் காமிச்சேன்.”
“சூப்பர் ரேகா! உன் சமயோசித புத்தியால், அவனிடமிருந்து நிரந்தர விடுதலை” .பாட்டி பாரட்டினாள்.
Leave a comment
Upload