தொடர்கள்
தேர்தல் திருவிழா
2024 மஹராஷ்டிரா சட்டசபை தேர்தல்- யார் ராஜா?

20241022185906305.jpg

[மஹாயுதி கூட்டணி - ஃபட்னவிஸ், எக்னாத் ஷிண்டே, அஜித் பவார்]

அதோ கீர்தானாரம்பத்திலே ….

ஹ்ம்ம்ம்ம்….ஒரு கட்சி ஆட்சி ஆளல் என்பது இங்கு 1995 முன்பிருந்தது. அப்புறமா கூட்டணி ஆட்சி தான்.

இருந்தாலும் கூட்டணி ஆட்சியை இந்த மாநிலம் 1978லியே ருசித்தது. எமர்ஜென்சிக்குப் பிறகு பழைய காங்கிரசும் இந்திரா காங்கிரசும் இணந்து ஒரு கூட்டடணி ஆட்சி வைத்தது. ஆனால், ஷரத் பவார், ஆம் இன்றைய ஷரத் பவாரேத் தான், அன்று அந்த கூட்டணியிலிருந்தும் வெளியேறி, அதாவது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, காங்கிரஸ், மற்றும் எதிகட்சிகளில் இருந்த ஜனதா கட்சியின் பல எம்எல்ஏக்களை வைத்து கிச்சடி கூட்டணி அமைத்து ஆட்சி பிடித்தார்.

மறுபடியும் மத்தியில் இந்திரா ஆட்சிக்கு வந்ததும் ஷரத் பவாரின் ஆட்சியைக் கலைத்தார்.

காங்கிரசும் உடையா என்சிபியும் கூட்டணி வைத்து ஒரு ஐந்தாண்டு ஆட்சி செய்தது. ஒரு வகையில் ஒன்றாயிருந்து உடைந்து உருவானதுதான் ஷரத் பவாரின் பல உரு மாற்றங்களுக்குப் பிறகு என்சிபி ஆனது.

உடையா சிவசேனாவும் பாஜகவும் ஹிந்துத்வா என்ற ஒரு பொது தலைப்பில் ஒன்றிப் போக இரு கட்சிகளும் இணைந்து 1995 முதல் ஆண்டன. காவிக் கட்சிகள் என இந்த கூட்டணிக்குப் பெயர். இந்த கூட்டணியில் அன்று நடந்த தேர்தலில் 45 எம்எல்ஏக்கள் சுயேச்சையாக நின்று வென்ற இந்திரா காங்கிரசின் ரிபல் வேட்பாளர்களே. சிவசேனையின் பாலா சாஹேப் தாக்கரேயும் அட்டல் பிஹாரி வாஜ்பேயும் இதற்கு ஆசி வழங்கினர்.

நல்லாத்தான் போயிட்டிருந்தது. எப்போதும் சிவசேனையிலிருந்து தான் முதல்வரும், பாஜக இரண்டாவது ஃபிடில் வாசிப்பதுமாய் தான் இருந்தது.

2014ல் தேர்தலில் இந்த கூட்டணியில் முதல் முறையாக பாஜக முதல்வர் பதவிக்கு வந்தது. சிவசேனையும் ஒத்துப்போனது.

2019ல் தேர்தலில் சேர்ந்தே போட்டியிட்ட காவிக் கட்சிகளுக்குள் முடிவுகள் சாதகமாக இருந்தும், முதல்வர் பதவி ஆசையில் எந்த எம் எல் ஏவும் ஆகாத உத்தவ் தாக்கரே தமக்குத் தான் அந்த பதவி என்று அடம் பிடிக்க, இத்தனைக்கும் அன்று அவர்கள் வென்றது பாஜாகவின் 105க்கு 56 தான், பாஜகவை ஏமாற்றிவிட்டு யாரை எதிர்த்து நின்று வெற்றி பெற்றாரோ அதே காங்கிரஸ் என்சிபியுடன் கை கோர்த்து மஹாவிகாஸ் அகாடி என்ற முக்கூட்டணி அமைத்து அதன் முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வரான பின்னர் தான் எம் எல் சி ஆனார். அதற்கு எதிர் அணியிலிருந்து எவரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டரை வருடங்களுக்குப்பின் தனது ஹிந்துத்வா கொள்கையிலிருந்து பிசிருவதைத்தடுக்க ஏக்நாத் ஷிண்டே பெருவாரி எம் எல் ஏக்களுடன் சிவ சேனை என்ற கூட்டை அமைக்க அதற்கு தேர்தல் ஆணையம் அது தான் அசல் சிவ சேனை என்றே அறிவித்து விட்டது.

சொல்லப் போனால் இந்த 2024 சட்டசபை தேர்தல் யார் அசல் என்பதை மக்கள் மூலம் தெரிந்து கொள்ளப்போகிறார்கள்?

அதே கதி தான் என்சிபிக்கும். ஷரத் பவாரிடமிருந்து பெருவாரி எம்எல்ஏக்களுடன் சித்தப்புவிடமிருந்து பிரிந்து அவர அமைத்த என்சிபி தான் அசல் என்சிபி என்ற கட்சி பெயரையும் தக்க வைத்துக் கொண்டுவிட்டார் அஜித் பவார்.

2019ல் ஏற்பட்ட ஆட்சி இழப்பு ஏமாற்றத்தை அடுத்த இரண்டரை வருடத்தில் ஏக்னாத் ஷிண்டே மூலம் பெற்றாலும், அஜித் பவார் வருகையால் மேலும் மாநில அரசு வலுவடைந்தாலும், மே 2024ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பின்னடைவுகள் பாஜகவை சற்றே முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகா செயல் பட வைத்துள்ளது அரை வருட இடைவெளி விட்டு வரும் இந்த மாநில தேர்தல்.

சற்றே நிதானம் இழந்துவிட்டோம் பாராளுமன்ற தேர்தலில் என்று ஒப்புக்கொண்ட பாஜகவின் துணை முதல்வர் ஃபட்னவிஸ்.

அந்த தேர்தல் முடிவுகளின் அலசல் எங்கெங்கு பலவீனம் தென்பட்டதோ அதை நன்கு பழுது பார்த்துள்ளோம். அதற்கான வியூகமும் அமைத்துள்ளோம்.

ஆர்எஸ்எஸ்ஸும் இம்முறை தனது ஈடுபாட்டை மும்முறப்படுத்தியுள்ளது என்றும் தகவல்.

ஜூன் 2024 அரசாணைப்படி பெண்களுக்கான முதல்வர் மாஜி (எனது) லட்கி பஹிண் யோஜனா - முதல்வர் மகள், சகோதரி திட்டத்தின் மூலமாக மாதம் ரூ1500/- திட்டமும் சரியான சமயத்தில் முன்னமேயே தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் 21 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் பயனடைகிறார்கள். பணமும் மாதாமாதம் direct benefit transfer (பேங்க் அக்கவுண்ட்ல் நேரடி பண பரிமாற்றம்) மூலம் இந்த பெண்களுக்கு தகுதி என்ற இடைச் செருகல் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கிறது. இந்த திட்டம் மத்திய பிரதேசத்தில் ஹிட் திட்டம். அதாவது அங்கு தகுதியான என்ற பிரிவு முறை இல்லையாம். இது ஒரு பெரிய பலம் ஆளும் கூட்டணிக்கு.

வக்ஃப் போர்ட் விவகாரம் மஹாவிகாஸ் அகாடிக்கு ஆதரவு தருமா என்பது பொறுத்திருந்துதான் சொல்ல முடியும். ஏனெனில், இந்த விவகாரத்தில் சட்ட திருத்தம் கொணரும் முனைப்பும் மத்தியில் நடக்கிறது. வரும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதை சட்டமாக்க சபாநாயகருக்கு தகவல் அறிவிக்கப்பட்டும் விட்டது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் அதிக அளவில் ஈடுபாடுடன் கருத்துகள் பரிமாறப்பட்டு வருவதை நாம் தற்போது கண்டுகொண்டுதான் வருகிறோம்.

குடும்ப அரசியல் என்ற களங்கம் இண்டி கூட்டைக் கலைக்க முயலுகிறது. சமீபத்திய ஹரியானா சடீஸ்கர் மாநில தேர்தல் வெற்றிகள் பாஜகவிற்கு டானிக்காக அமைந்தது ஒரு ப்ளஸ்.

இரண்டு கூட்டணிக்குள் மஹா விகாஸ் அகாடிக்குள் சம அளவிலான சீட்டுகள் என்ற கட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தாலும், காங்கிரஸ் நிறைய சீட்டுகளில் போட்டியிடும் நிலைக்கு வந்தது. தற்போது தனது கட்சியிலிருந்துதான் முதல்வர் என்று காங்கிரஸ் ரெண்டு நாளாக சொல்லிவருகிறது. இதை உத்தவ் தாக்கரே கட்சி எதிர்த்து வருகிறது. இதற்கிடையில் ஷரத் பவாருக்கு தன் மகளை முதல்வர் பதவியில் அமர்த்தி பார்க்க ஆசை. ஆக முக்கூட்டணி மூன்று திசையில் பிய்த்துக்கொண்டிருக்கிறது.

20241022190703918.jpg

[மஹாவிகாஸ் அகாடி - காங்கிரஸின் நானா பாடோலே, ஷரத் பவார், உத்தவ் தாக்கரே]

எக் ஹை தோ safe என்ற மோடியின் அறைகூவலை எக்களிப்பது போல ஒரு இரும்பு safeஐ காண்பித்து அதிலிருந்து அதானி படத்தை எடுத்து காணிபித்த ராகுலைக் கூட ஷரத் பவார் கண்டு கொள்ளவே இல்லை.

20ஆம் தேதி முடிவடைந்த தேர்தலுக்குப்பிறகு வெளியான தேர்தல்கணிப்புகள் பெரும்பாலும் பாஜகவின் என்டிஏவிற்கே வலது கட்டை விரலை உயர்த்தியுள்ளது. இதற்கு முந்திய சமீபத்திய தேர்தல் கணிப்புகள் கண்ட சறுக்கல்கள் தொலைக்காட்சிகளையும் அடக்கி வாசிக்க வைத்துள்ளன.

மற்ற முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவும் அதிகமாக இருந்தது பாஜக கூட்டணிக்கு சாதகம் தான் என்று ஃபட்னவிஸ் ஏக ஊக்கத்துடன் சொல்லிகிறார்.

எனினும், இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் முடிவுகள் இதை ஊர்ஜிதம் செய்கிறதா என்று பார்க்கத்தான் போகிறோம்.

இந்த தேர்தல் எது அசல் சிவ சேனை எது என்சிபி என்றும் நிர்ணயிக்கும்.