விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "இந்த ஆண்கள் தினத்திற்கு யாரும் ஆண்களுக்கு வாழ்த்து சொன்னதாகவே தெரியவில்லை. ஆனால், பெண்கள் தினத்திற்கு எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வாழ்த்து சொல்கிறார்களே "அது ஏன் என்று கேட்டார். நாம் "தெரியவில்லையே" என்று சொன்னபோது ஆபீஸ் பையன் "சார் என் மனைவி எனக்கு வாழ்த்து சொன்னாள்" என்று சொல்ல "உங்கள் மனைவிக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்" என்று சொல்ல, விஷயத்துக்கு வாரும் என்று நாம் 2026-ல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று திடீரென திருமாவளவன் சொல்லி இருக்கிறாரே அது எதனால்" என்று நாம் கேட்டோம்.
திருமாவளவனை நேரில் அழைத்து திமுக சார்பாக ஏ.வா.வேலு விஸ்தாரமாக பேசியிருக்கிறார். உங்களை டெல்லியில் மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். நீங்கள் தமிழகத்தில் பங்கு என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இந்த தேவையில்லாத குழப்பம் உங்களுக்கு திமுக கூட்டணியில் இருக்க விருப்பம் இல்லையா என்றும் கேட்டிருக்கிறார் ஏ.வா.வேலு. அதன் பிறகு தான் இந்த மன மாற்றம் தவிர விடுதலை சிறுத்தை கூட்டணியில் மாற்றம் என்று முடிவு செய்தால், கட்சியை உடைக்கவும் திட்டமிட்டு இருந்தது திமுக. இதையும் ஏ.வா.வேலு கோடிட்டு காட்டினார். உங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள சொல்லுங்கள் என்று பேசச் சொன்னார்கள். அதனால் தான் பேசினேன் என்றும் சொல்லியிருக்கிறார் ஏ.வா.வேலு. அதன் பிறகு தான் திமுக கூட்டணியில் தான் தொடர்வேன் ஆட்சியில் பங்குக்கான சூழல் இல்லை என்றெல்லாம் மாற்றிப் பேசி இருக்கிறார் திருமா என்றார் விகடகவியார்.
"தமிழக வெற்றி கழகம் அதிமுக கூட்டணிக்கு போகாது. இதை தளபதி அனுமதியுடன் சொல்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் சொல்லி இருக்கிறாரே " என்று நாம் கேட்டபோது முக்கிய கூட்டணி கட்சியாக உங்களை சேர்த்துக் கொள்கிறோம் குறைந்தபட்சம் ஐம்பது தொகுதிகள் ஒதுக்குகிறோம். ஆனால், ஆட்சியில் பங்கு வாய்ப்பு இல்லை என்று அதிமுக சொன்னது. அதனால் தான் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அதேசமயம் இந்த முறை சட்டசபையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக சிலர் குரல் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். ஏற்கனவே கட்சி ஆரம்பித்த நடிகர்களின் காணாமல் போன கதைகளை எல்லாம் சிலர் விஜய்க்கு அறிவுரையாக சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்ற உண்மையையும் அவருக்கு எடுத்து சொல்லி இருக்கிறார்கள். இது தவிர மாநாட்டுக்கு நிறைய செலவு செய்துவிட்டார். தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் அதற்கு கட்சிக்கு பசை உள்ள ஆசாமிகளை தேடி வருகிறார் விஜய்.
இப்போதுதான் அவருக்கு அரசியல் மெல்ல தெரிய ஆரம்பித்திருக்கிறது "என்று சொல்லி சிரித்த விகடகவியார்" இந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்த முறை எந்த நிபந்தனையும் விதிக்காமல் மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை செய்திருக்கிறது. அதுதான் ஒரு முக்கிய காரணம்" என்று சொல்லிப் புறப்பட்டார்.
Leave a comment
Upload