தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எல்லா முக்கிய கதாநாயகர்களுடன் டூயட் பாடிய கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமதி கீர்த்தி சுரேஷ் ஆக போகிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் கீர்த்தி சுரேஷ். கொஞ்ச காலம் படிக்க வேண்டும் என்று சொல்லி சினிமா உலகுக்கு லீவ் விட்டிருந்தார். அதன் பிறகு மீண்டும் சினிமாவிற்கு வந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
கீர்த்தி சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர் சுரேஷ்குமார் நடிகை மேனகா தம்பதிகளின் மகள் கீர்த்தி சுரேஷ். அப்பா மலையாளி அம்மா தமிழச்சி. பள்ளிப்படிப்பு சென்னையில் கல்லூரி படிப்பு கேரளாவில் பேஷன் டிசைனிங் படித்துள்ள கீர்த்தி சுரேஷ் வயலின் கூட நன்றாக வாசிப்பார். தவிர மலையாள படம் தனது தாயாருடன் சேர்ந்து தயாரித்திருக்கிறார். தயாரிப்பாளர், நடிகை, பேஷன் டிசைனர், வயலின் கவிஞர் இப்படி பன்முகம் கொண்ட கீர்த்தி சுரேஷ் கொச்சியில் பள்ளியில் படிக்கும் போது ஆண்டனி தாட்டில் என்பருடன் பழகி அது காதலாக மாறியது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் இவர்கள் காதலித்து வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு வயது 32. ஆண்டனி தாட்டில் துபாயில் பிரபல தொழிலதிபர். ஏற்கனவே இவருக்கும் அவருக்கும் காதல் என்று செய்தி வரும் போதெல்லாம் கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் வன்மையாக மறுத்து கருத்து சொன்னார்கள்.
இப்போது டிசம்பர் மாதம் 11, 12 தேதிகளில் கோவாவில் திருமணம் நடக்கும். திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். விரைவில் இது பற்றி கீர்த்தி சுரேஷ் அறிவிப்பார் என்ற செய்தி சமூக வலைதளத்திலும் நாளிதழிலும் தற்போது வரத் தொடங்கி இருக்கிறது. ஆனால், இந்த முறை கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் இந்த செய்தியை மறுத்து எந்த கருத்தும் சொல்லவில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி தானே.
Leave a comment
Upload