தொடர்கள்
அனுபவம்
தூத்துக்குடிக்கு வாரியளா ?? பரோட்டா திங்க ?? - மாலா ஶ்ரீ

20240703081021667.jpeg

தூத்துக்குடி அருகே மெய்ஞானபுரம் காவல் நிலையம் அருகே ஒரு தனியார் அசைவ ஓட்டல் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, கடைக்கு முன்பாக ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் சூரி பரோட்டா சாப்பிடும் படத்துடன் பிரமாண்ட பேனர் வைத்துள்ளனர்.

அதில் – திறப்பு விழா சலுகையாக, ஒரு வாரத்துக்கு, ‘இங்கு 32 பரோட்டா சாப்பிட்டால், பில்லுக்குரிய பணம் தரவேண்டாம். பரோட்டா சாப்பிடும் பந்தயத்துக்கு வர்றீங்களா?’ என்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூகவலை தளங்களில் வைரலாகப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான மக்கள் அந்த அசைவ ஓட்டலை நோக்கி படையெக்கத் துவங்கினர்.

இதில் பலர் பரோட்டா சாப்பிடும் பந்தயத்திலும் பங்கேற்றனர். எனினும், ‘ஒருவரால்கூட சால்னா உள்பட பல்வேறு இத்யாதி சைடு டிஷ்களுடன் பத்து, பதினைந்து பரோட்டாவுக்கு மேல் சாப்பிட முடியாமல் திணறியுள்ளனர்’ என்றும் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.

தோல்வியான சிலர் ‘இதெல்லாம் உனக்கு தேவையா?’ என அங்கலாய்ப்பதும் கேட்க முடிகிறது.

சூரியே காமெடியை விட்டுவிட்டு வேற லெவலுக்கு போயிட்டார்...இன்னும் அவரை பரோட்டா போட்டியில் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்......