சூலூர் அருகே கோயிலுக்கு சொந்தமான 300 கோடி நிலம் மீட்பு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அதிரடி.
என்ன அதிரடியா ? இவ்வளவு நாள் தூங்கிட்டு இப்பதான் முழிச்சி இருக்கீங்க !!
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இந்தியரா ? கருப்பினத்தை சேர்ந்தவரா ? டொனால்ட் டிரம்ப் கேள்வி.
அங்கேயும் இதே பிரச்சனை தானா !!
சமூக நீதிக்கு எதிரான திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் ராமதாஸ் எச்சரிக்கை.
அதான் ஏற்கனவே 40க்கு 40 கொடுத்து பாடம் புகட்டி விட்டார்களே அய்யா !!
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை ஒன்றிய பாஜக ஆட்சி நீடிப்பது சந்தேகம் ஆம் ஆத்மி கட்சி.
இப்படி எல்லாம் பேசினா உங்க முதல்வருக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும் ?
வெள்ள தடுப்பு பருவ மழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் துரைமுருகன்.
அந்த 95 சதவீதம் பணி முடிந்துவிட்டது சொல்ல காணோம் !!
கடனை திருப்பி செலுத்தாதவர்களை வகைப்படுத்த புதிய நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.
அதாவது வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்கள், ஓடி தப்ப இருப்பவர்கள் அப்படித்தானே !!
பட்ஜெட் உரையில் பெயர் இல்லாவிட்டாலும் எல்லா மாநிலத்துக்கும் பணம் மறுக்கப்படவில்லை நிர்மலா சீதாராமன் விளக்கம்.
பணம் வருமாமே !! அப்புறம் என்ன ?
ராகுல்காந்தியின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு பாஜக எம்பி பேச்சு.
ஜாதி வாரி கணக்கெடுப்பு ராகுல்காந்தியிடமிருந்து ஆரம்பிக்கிறார்கள் !!
குறுவை தொகுப்பு திட்டம் கண் துடைப்பு, விவசாயிகள் குற்றச்சாட்டு.
அழக்கூடாது கண்ண தொடைச்சுக்கோங்க அவ்வளவுதான் !!
கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க அரசின் திட்டங்கள் என்ன அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
எத்தனை வாட்டி தான் கேட்பீங்க மை லார்ட் இருந்தா தரமாட்டமா ?
இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது ராகுலுக்கு ப்யூஷ் கோயல் பதிலடி.
ஆனா சிந்திக்கிறாங்க அப்படிதானே அமைச்சர் !!
இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது பிரதமர் மோடி.
ஆனா பிரதமரே விலைவாசி உயர்வை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே !!
மத்திய அரசு ஏற்படுத்தும் சக்கர வியூகங்களை நாங்கள் உடைப்போம் ராகுல் காந்தி.
மகாபாரதம் படிக்க ஆரம்பித்து இருக்கிறார் போல இருக்கு !!
தமிழக போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்பட மாட்டாது அமைச்சர் சிவசங்கர்.
ஆமா நஷ்டத்தில் இயங்குவதால் யாரும் வாங்க மாட்டேங்குறாங்க !!
அலுவலர்கள் காலை களப்பணிக்கு செல்ல தலைமைச் செயலாளர் உத்தரவு.
ஆமா ஆபீஸ்லே உட்கார்ந்து இருந்தா வாக்கிங் போகணும் இல்ல !!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது அமைச்சர் ரகுபதி.
ஆமா தினம் மூணு கொலை தான் நடக்குது அவ்வளவுதான் !!
போலி பேராசிரியர்கள் விவகாரம் 295 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு.
வெறும் நோட்டீஸ் தானா !!
காஞ்சிபுரம் திமுக மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.
கவுன்சிலர் எல்லாரையும் இன்பச் சுற்றுலா அனுப்பியாச்சு அப்புறம் எப்படி !!
Leave a comment
Upload