தொடர்கள்
கொடுரம்
நிலச்சரிவு--கவி மா ஜீவானந்தம்

படித்ததில் பிடித்தது

2024070217220281.jpg

வயநாடு
பய நாடானது

மலைநாடு
கொலை நாடானது

ஆறு நாடு
ஆறுதல் நாடுது

நதி வெள்ளம்
பீதி வெள்ளமானது

விடியாத இரவு
சிலருக்கு உறவானது

வடியாத செந்நீர்
கண்ணீரைக் கேட்கிறது

முடியாத சோகம்
தொடர்கதை எழுதுகிறது

அக்கரையும் இல்லை
இக்கரையும் இல்லை

மலையும் மழையும்
மாறிமாறி விழுகிறது

வயலும் வாழ்வும்
தடுமாறி சாய்கிறது

வாழ்விட அக்கறை
விழித்திட வேண்டும்

நதித்தட அபகரிப்பு
நல்லதில்லை நமக்கு

இதிலிருந்து‌ பாடம்
படிப்பது தான் மருந்து !